search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாய தொழிலாளர்"

    • களக்காட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட மாநாடு நடைபெற்றது.
    • 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    களக்காடு:

    களக்காட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில் ஏ.ஐ.டி.சி.யின் மாநில தலைவர் காசி விஸ்வநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நெல்லை மாவட்ட செயலாளர் லட்சுமணன், துணைச் செயலாளர் முத்துகிருஷ்ணன், களக்காடு ஒன்றிய செயலாளர் முருகன், விவசாய தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் பாலன், இளைஞர் பெருமன்ற சுரேஷ், லெனின், முருகானந்தம் மற்றும் நெல்லை களக்காடு, அம்பை, சேரை, பத்தமடை, நாங்குநேரி, வள்ளியூர் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மாநாட்டில் 17 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. கமிட்டி தலைவராக தங்கையா, செயலா ளராக பாலன், பொருளாளராக ரமேஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதனைதொடர்ந்து 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். இத்திட்டத்தை நகராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும், அரசு நிர்ணயித்த கூலியை முழுமையாக வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் விவசாயநிலம் வாங்க மானியம்” வழங்கப்படுகிறது.
    • விவசாய நிலம் வாங்க ரூ.10 கோடி மானியம் வழங்கப்படுகிறது.

    திருப்பூர் :

    2022-23 ஆம் நிதியாண்டிற்கு தாட்கோ திட்டம் மூலம் "நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் விவசாயநிலம் வாங்க மானியம்" வழங்கப்படுகிறது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் புதிய அறிவிப்பின்படி, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம், (தாட்கோ) 2022-23ம் நிதியாண்டிற்கு தாட்கோ திட்டம் மூலம் "200 நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் விவசாய நிலம் வாங்க ரூ.10 கோடி மானியம்" வழங்கப்படுகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் இனத்தை சார்ந்த 4 நபர்களுக்கு ரூ.20லட்சம் மானியமும், பழங்குடியின இனத்தை சார்ந்த 1 நபருக்கு ரூ.5 லட்சம் மானியமும் ஆக மொத்தம் 5 நபர்களுக்கு ரூ.25 லட்சம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த மகளிருக்குமுன்னுரிமை அளிக்கப்படும். மகளிர் இல்லாத குடும்பங்களில் கணவர்அல்லது மகன்களுக்கு வழங்கப்படும். வயது 18 முதல் 65 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் விவசாயத்தை தொழிலாக கொண்டவராக இருக்க வேண்டும்.

    விவசாய கூலி வேலை செய்பவராகவும் இருக்கலாம். விண்ணப்பதாரர் மற்றும் அவர் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ்இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்க கூடாது.

    ஒருவர் ஒரு முறை மட்டுமே மானியம் பெற தகுதியுடையவர். ஒரு திட்டத்தின் கீழ் ஒரு முறை மானிய உதவி பெற்றால், பின்னர் அவர் தாட்கோ செயல்படுத்தும் சிறப்பு மைய உதவியுடனான பெற பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயன் தகுதியற்றவராகிறார்.

    மேற்கண்ட இத்திட்டம் தொடர்பான www.application.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறும் கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ , அறை எண்: 501 (ம) 503, 5-வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர் 641604. தொடர்புக்கு : செல்போன் எண்: 94450 29552, தொலைபேசி : 0421-2971112 என்ற முகவரி , தொலைபேசி எண்ணை அணுகலாம். திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். 

    ×