search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாடகை தகராறு"

    தேனி அருகே வாடகை தகராறில் தம்பதியை தாக்கிய கும்பல் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் ஆனைமலையான்பட்டி பஸ் ஸ்டாப் பகுதியைச் சேர்ந்தவர் நவீன் (வயது 25). இவரது மனைவி கவுசல்யா. (20). இவர்கள் தீபாவளி என்பவருக்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு கடை வைத்திருந்தனர். இதற்காக ரூ.15 ஆயிரம் அட்வான்சும் மாதம் ரூ.1500 வாடகையும் செலுத்தி வந்தனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு கடையை காலி செய்வதாக அவர்கள் கூறி தங்களது அட்வான்ஸ் பணத்தை திருப்பி தருமாறு கேட்டனர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்படவே தீபாவளி, அவரது மனைவி செல்வி மற்றும் முருகன், குமரேசன், விகாஸ் ஆகியோர் சேர்ந்து நவீன் மற்றும் அவரது மனைவியை கொடூரமாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    படுகாயமடைந்த அவர்கள் 2 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல் போடி மல்லிகாபுரம் மேற்கு தெருவைச் சேர்ந்த கோபால் மகள்கள் ஜெயசூர்யா (21), ஸ்ருதி (15) ஆகியோர் சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த பங்கஜம் என்பவரது வீட்டு முன்பு விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது பங்கஜத்துக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் பங்கஜம், கணவர் ராஜா, மகன் மலைச்சாமி ஆகியோர் சேர்ந்து கோபால் மற்றும் அவரது மனைவியை தாக்கினர். இது குறித்து போடி தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செவ்வாபேட்டை அருகே வீட்டு வாடகை தராததால் கணவன்-மனைவியை கத்தியால் குத்திய 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    செங்கல்பட்டு:

    செவ்வாபேட்டையை அடுத்த கிளாம்பாக்கம் விஷ்ணுநகரில் வசித்து வருபவர் ஜானகிராமன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி, 3 வயது மகள், மாமியார் நாராயணி.

    இவர்கள் செங்குன்றத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டாக ஜானகிராமன் சரியாக வாடகை பணம் தரவில்லை. இதனால் அவருக்கும், உரிமையாளர் ஸ்ரீதருக்கும் தகராறு ஏற்பட்டது.

    இது தொடர்பாக ஜானகிராமன் திருவள்ளூர் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்ரீதரின் மகன் தியாகர் தனது நண்பர்கள் 3 பேருடன் நேற்று இரவு ஜானகிராமன் வீட்டுக்கு சென்றார்.

    அங்கிருந்த ஜானகிராமன், அவரது மனைவி விஜயலட்சுமியை கத்தியால் சரமாரியாக வெட்டினர். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி ரந்தனர். இதை பார்த்ததும் 4 பேரும் தப்பி ஓடி விட்டனர்.

    படுகாயம் அடைந்த 2 பேரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து செவ்வாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை தேடி வருகிறார்கள்.

    ×