search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லூசியானா மாநிலம்"

    • இங்கிலாந்து ஆய்வின் தரவுகளை அமெரிக்க பல்கலைக்கழகம் பெற்ற ஆய்வு செய்தது
    • அதிக உப்பு, கார்டிசாலை அதிகரித்து, அதன் மூலம் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது

    உலகெங்கும் மக்களை அச்சுறுத்தும் நோய்களில் 'சர்க்கரை நோய்' என வழக்கத்தில் அழைக்கப்படும் நீரிழிவு நோயும் ஒன்று. ஆங்கிலத்தில் 'டயாபடிஸ்' (diabetes) என அழைக்கப்படும் நீரிழிவில் டைப் 1 மற்றும் டைப் 2 என இரண்டு வகை உள்ளது. நீரிழிவு நோய்க்கான காரணங்களையும், அதை கட்டுக்குள் வைப்பதற்கான வழிமுறைகளையும் குறித்த ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

    சுமார் 4 லட்சம் பேரிடம் 12 வருடங்களாக இங்கிலாந்தில் இது குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் தரவுகளை பெற்று அமெரிக்காவில் உள்ள லூசியானா மாநிலத்தின் டுலேன் பல்கலைகழகத்தில் ஒரு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. 'அப்சர்வேஷனல் ஸ்டடி' (observational study) என அழைக்கப்படும் இந்த கண்காணிப்பு ஆய்வுகளில் ஒரு காரணியை நோய்க்கான நேரடி காரணம் என குறிப்பிட முடியாவிட்டாலும், நோயை உண்டாக்குவதில் மறைமுக தொடர்புடைய காரணியாக ஆராய்ச்சியாளர்கள் வகைப்படுத்துகிறார்கள். 



    அவ்வாறு நடத்தப்பட்ட இந்த ஆய்வில், நாம் சமைக்கும் உணவு மற்றும் கடைகளில் பேக்கிங் செய்யப்பட்ட உணவு வகைகளின் மூலமாக உட்கொள்ளப்படும் உப்பு, நீரிழிவு நோய்க்கு ஒரு மறைமுக தொடர்பு உள்ள காரணி என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஒரு நாளைக்கு 8 கிராம் உப்பு, மக்கள் உட்கொள்ளும் சமைத்த மற்றும் பேக்கிங் செய்யப்பட்ட உணவின் மூலமாக உடலுக்கு செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ரத்த அழுத்தம் கூடும் பொழுது, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் இன்சுலினின் செயலாக்கம் குறைந்து விடுகிறது. டுலேன் பல்கலைகழக ஆய்வில் உப்பின் அளவு கூடுவதால் கார்டிசால் எனப்படும் ஹார்மோன் அளவு அதிகரிப்பதும், இதன் காரணமாக ரத்த அழுத்தமும் அதிகரிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

    உப்பை குறைப்பதால் சர்க்கரை கட்டுக்குள் இருப்பதாகவோ அல்லது உப்பு கூடுவதால் சர்க்கரை அதிகரிப்பதாகவோ கூற இந்த ஆய்வில் நேரடி ஆதாரம் இல்லை. இருந்தாலும், உட்கொள்ளும் உப்பின் அளவை குறைத்து கொள்வது நல்லது என மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால், ரத்த அழுத்தம் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் ஆகிய இரண்டுமே உள்ள நோயாளிகளுக்கு, உட்கொள்ளும் உப்பின் அளவு குறைவதனால் ரத்த அழுத்தம் குறைவது இதில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவுறுத்தி இருந்த 5 கிராம் தினசரி அளவை விட, இந்தியர்கள் அதிகமாக 9லிருந்து 10 கிராம் வரை உப்பை உட்கொள்கிறார்கள் என சமீபத்தில் ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

    • லூசியானாவில் இன்டர்ஸ்டேட் 55 105 கிலோமீட்டர் வரை நீள்கிறது
    • நேரம் செல்லச்செல்ல அப்பகுதி முழுவதும் மூடுபனியால் சூழப்பட்டது

    அமெரிக்காவில் மெக்சிகோ வளைகுடா பகுதியை ஒட்டியுள்ள மாநிலம், லூசியானா.

    அம்மாநிலத்தின் லாபிளேஸ் நகரிலிருந்து இல்லினாய்ஸ் மாநில சிகாகோ நகர் வரை சுமார் 1500 கிலோமீட்டர் நீண்டு செல்வது இன்டர்ஸ்டேட் 55 (Interstate 55) எனும் விரைவுவழிச்சாலை. இது லூசியானா மாநிலத்தில் மட்டும் சுமார் 105 கிலோமீட்டர் செல்கிறது.

    லூசியானாவின் பெரும்பகுதியில் தற்போது வறட்சி நிலவுகிறது. இதனால் அங்குள்ள வறண்ட பகுதிகளில் காய்ந்த சருகுகளில் தீப்பிடித்தல் அடிக்கடி நிகழ்கிறது.

    அப்பகுதியில் உள்ள பான்ச்சர்ட்ரெய்ன் (Pontchartrain) எனும் ஏரிக்கு அருகில் உள்ள ஒரு குட்டை வழியாக இச்சாலை நீண்டு செல்லும் இடத்தில் ஏதோ பொருள் எரிந்ததால், புகை கிளம்பியது. அத்துடன் வெப்பத்தின் தாக்கத்தால் அந்த ஏரியிலிருந்து கிளம்பிய நீராவியும் கலந்து கொண்டது.

    இதனால் அப்பகுதி முழுவதும் மூடுபனி உருவெடுத்தது. இது நேரம் செல்லச்செல்ல அதிகரித்து அப்பகுதி முழுவதும் பெரும் மூடுபனியால் சூழப்பட்டது.

    இதன் காரணமாக இன்டர்ஸ்டேட் 55 விரைவுச்சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகளுக்கு சாலை தெரியவில்லை. இதனால், அங்குள்ள செயின்ட் ஜான் தேவாலயத்திற்கு அருகே "பைல் அப்" (pile-up) எனப்படும் முன்னால் செல்லும் வாகனத்தின் மீது பின்னால் வரும் வாகனம் மோதி, அந்த வாகனத்தின் மீது மற்றொரு வாகனம் மோதும் சங்கிலித்தொடர் விபத்து நடந்தது.

    இதில் 158 கார்கள் மோதிக்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர்; பத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

    இந்த நிகழ்வை குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கண்டு அதிர்ந்த சமூக வலைதள பயனர்கள், இது பிரபல ஹாலிவுட் திரைப்படமான "ஃபைனல் டெஸ்டினேஷன் 2" படத்தில் வருவதை போன்றே உள்ளதாக கருத்து தெரிவித்தனர்.




     


    • இத்தம்பதியினருக்கு ஏற்கெனவே 3-வயது மகள் உள்ளார்
    • இதற்கு சாத்தியக்கூறுகள் 10 லட்சத்தில் ஒன்று அல்லது 20 கோடியில் ஒன்று

    அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் வசித்து வருபவர்கள் ஹேலி கோர்டாரோ மற்றும் மேத்யூ கோர்டாரோ தம்பதியினர். இத்தம்பதியினருக்கு 3-வயது மகள் உள்ளார்.

    மீண்டும் கர்ப்பமடைந்திருந்த ஹேலி அம்மாநிலத்தின் ஷ்ரெவ்போர்ட் பகுதியில் உள்ள தெற்கு வில்லிஸ்-நைட்டன் பெண்கள் உடல்நல மையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

    ஹேலி கர்ப்பமுற்று 31 வாரங்கள் கடந்திருந்த நிலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு மருத்துவ நிபுணர்கள் மேற்பார்வையில் பிரசவம் நடைபெற்றது. அவருக்கு ஒரே நேரத்தில் 3 குழந்தைகள் பிறந்தன. இதில் கோர்டாரோ தம்பதியினர் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    குழந்தைகளை அந்த மருத்துவமனையின் டாக்டர். ஜெரால்டு பிரென்ட் விட்டன் கண்காணித்து வருகிறார்.

    இது போன்ற கருத்தரிப்புகள் "தன்னிச்சையான கருத்தரிப்பு" (spontaneous triplets) என மருத்துவ மொழியில் அழைக்கப்படுகிறது. இத்தகைய கருத்தரித்தல் ஏற்படும் சாத்தியக்கூறுகள் 10 லட்சத்தில் ஒன்றாகவோ அல்லது 20 கோடியில் ஒன்றாகவோதான் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    க்ளேர், எல்லா மற்றும் லில்லி என பெயரிடப்பட்டுள்ள அந்த 3 பெண் குழந்தைகளும் நல்ல உடல்நலத்துடன் இருக்கின்றனர்.

    ×