search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லடாக் எல்லை"

    • புதிய வரைபடத்தை சீனா கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியிட்டது.
    • அருணாச்சல பிரதேச மாநிலம் முழுவதும் இந்தியாவுக்கு சொந்தம் என இந்தியா தெரிவித்துள்ளது.

    பிஜிங்:

    இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது.

    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தில் அகாசி சின் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியை தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. மேலும் அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் என்றும் சீனா கூறி வருகிறது. இது தொடர்பான புதிய வரைபடத்தை சீனா கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியிட்டது.

    ஆனால் அருணாச்சல பிரதேச மாநிலம் முழுவதும் இந்தியாவுக்கு சொந்தம் என இந்தியா தெரிவித்துள்ளது. சீனா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தில் தைவானையும் தன் நாட்டின் ஒரு பகுதி என சீனா தெரிவித்துள்ளது. தென் சீன கடல் பகுதியில் 80 சதவீதம் சீனாவின் கட்டுப்பாட்டில் தான் இருந்து வருகிறது என சீனா சொல்லி வருகிறது.

    சீனாவின் இந்த நடவடிக்கைக்கு வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, தைவான் ஆகிய நாடுகள் தங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து உள்ளது.

    மேலும் இந்த 4 நாடுகளும் அருணாச்சல பிரதேச விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளன. இந்த வரை படம் செல்லாது என வியட்நாம் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. பிலிப்பைன்ஸ் நாடும் நாங்கள் ஒரு போதும் சீனாவின் புதிய வரைபடத்தை ஏற்க முடியாது என தெரிவித்து உள்ளது.

    • சீனா வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ வரை படத்தில் வழக்கம் போல் ஆக்கிரமித்த இந்திய பகுதிகளை அக்ஷயாசின் என குறிப்பிட்டு இருக்கிறது.
    • அருணாச்சல பிரதேசத்துக்கு உரிமை கொண்டாடி புதிய வரைபடத்தை வெளியிட்டு சீனா மீண்டும் அடாவடியை தொடங்கிவட்டது.

    புதுெடல்லி:

    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்து உள்ளது. 1962-ம் ஆண்டு போரின் போது ஆக்கிரமிப்பு செய்து அந்த பகுதிக்கு அக்ஷாய்சின் என பெயரிட்டுள்ளது.

    அருணாச்சல பிரதேசத்தை முழுமையாக சொந்தம் கொண்டாடி வரும் சீனா அந்த மாநிலம் இந்தியாவுக்கு சொந்தம் அல்ல என கூறி வருகிறது. ஆனால் இதை நிராகரித்துள்ள இந்தியா அருணாச்சல பிரதேசம் முழுக்க முழுக்க இந்தியாவுக்கே சொந்தம் என தெரிவித்துள்ளது. ஆனாலும் சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது.

    இந்த நிலையில் அருணாச்சல பிரதேசத்தை தங்கள் பகுதியாக மீண்டும் அறிவித்து உரிமை கொண்டாடி சீனா புதிய வரை படத்தை வெளியிட்டுள்ளது.

    சீனா வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ வரை படத்தில் வழக்கம் போல் ஆக்கிரமித்த இந்திய பகுதிகளை அக்ஷயாசின் என குறிப்பிட்டு இருக்கிறது. அத்துடன் அருணாச்சல பிரதேச மாநிலத்தை தெற்கு திபெத் எனவும் இடம்பெற செய்து இருக்கிறது.

    இந்திய நிலப்பகுதிகளை மட்டுமல்ல பல்வேறு நாடுகளின் எல்லைப் பகுதிகளை கூட சீனா தங்களது பிரதேசம் என இந்த வரைபடத்தில் உரிமை கோரி இருக்கிறது.

    தைவானையும் தம்முடைய நிலப்பகுதியாக சீனா சொல்லி கொள்கிறது. தென் சீனா கடலின் பெரும் பகுதியையும் இந்த வரைபடம் மூலமாக தனது நிலம் என்கிறது.

    லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு மோதல், பூட்டான் டோக்லாம் பீடபூமி மோதல்களை தொடர்ந்து இந்தியா-சீனா இடையே பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இரு தரப்புக்கும் இடையேயான பதற்றத்தை தணிக்கும் வகையில் இந்த பேச்சு வார்த்தைகள் நடைபெறுகின்றன.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசினார்கள். எல்லைப் பகுதியில் அமைதி, நிலைத் தன்மைைய இரு தரப்பும் உறுதி செய்ய வேண்டும் என அப்போது வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் தற்போது அருணாச்சல பிரதேசத்துக்கு உரிமை கொண்டாடி புதிய வரைபடத்தை வெளியிட்டு சீனா மீண்டும் அடாவடியை தொடங்கிவட்டது.

    ஜி 20 மாநாடு செப்டம்பர் 9 மற்றும 10-ந் தேதிகளில் இந்தியாவில் நடக்கிறது. இதில் சீன அதிபர் கலந்து கொள்கிறார். இந்த நேரத்தில் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் சீனா புதிய வரைபடத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்டுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்திய ராணுவம் பாகிஸ்தானை வீழ்த்தியது.
    • லடாக் திராஸ் போர் நினைவிடத்தில் கார்கில் போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    லடாக்:

    1999-ம் ஆண்டு லடாக் எல்லையில் கார்கில் பகுதியை கைப்பற்ற பாகிஸ்தான் முயற்சித்தது. இதை எதிர்த்து இந்திய ராணுவ வீரர்கள் வீர தீரத்துடன் போரிட்டனர்.

    இதில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை வீழ்த்தியது. இதையொட்டி ஆண்டு தோறும் ஜூலை 26-ந்தேதி கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 24-வது கார்கில் வெற்றி தினம் (கார்கில் விஜய்திவாஸ்) நாட்டின் பல பகுதிகளில் இன்று கடைபிடிக்கப்பட்டது.

    லடாக் திராஸ் போர் நினைவிடத்தில் கார்கில் போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத்சிங், ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே, கடற்படை தலைமை தளபதி ஹரிகுமார் உள்ளிட்டோர் திராஸ் போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். அப்போது ராஜ்நாத்சிங் பேசியதாவது:-

    கார்கில் போர் இந்தியாவின் மீது திணிக்கப்பட்டது. பாகிஸ்தானால் முதுகில் குத்தப்பட்டோம். நாட்டுக்காக தங்கள் உயிரை தியாகம் செய்த எங்கள் துணிச்சலான மகன்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்.

    எப்போதெல்லாம் போர் சூழல் ஏற்பட்டாலும் பொது மக்கள் எப்போதும் படைகளுக்கு ஆதரவு வழங்கினாலும் அந்த ஆதரவு மறைமுகமாகவே இருந்துள்ளது. தேவை ஏற்பட்டால் நேரடியாக போர்க்களத்தில் படையினருக்கு ஆதரவளிக்க பொது மக்கள் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    நாட்டின் கவுரவத்தையும், கண்ணியத்தையும் காக்க நாம் எந்த எல்லைக்கும் செல்லலாம். எல்லை கோட்டை கடப்பது அதில் அடங்கும் என்றால் அதை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.

    ×