search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஷ்ய அதிபர் புதின்"

    • வாக்னர் கூலிப்படை ரஷியாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியது.
    • புதினின் அரசை கவிழ்க்க திடீர் புரட்சியில் ஈடுபட்டது.

    மாஸ்கோ :

    உக்ரைன் மீதான போரில் ரஷிய படைகளுடன் இணைந்து அந்த நாட்டின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழு செயல்பட்டு வந்தது. போரில் உக்ரைன் நகரங்களை கைப்பற்றுவதில் இந்த கூலிப்படை முக்கிய பங்காற்றியது.

    இந்த சூழலில் திடீர் திருப்பமாக வாக்னர் கூலிப்படை ரஷியாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியது. புதினின் அரசை கவிழ்க்க திடீர் புரட்சியில் ஈடுபட்டது.

    எனினும் கூலிப்படையுடன் புதின் அரசு சமரசம் செய்து கொண்டதால் இந்த புரட்சி ஓரிரு நாட்களிலேயே முடிவுக்கு வந்தது. புரட்சியில் ஈடுபட்ட வாக்னர் குழு உறுப்பினர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ரஷியாவின் வாக்னர் குழு இல்லை என்று அதிபர் புதின் பேசியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. மாஸ்கோவில் பத்திரிகையாளர்களை சந்தித்த புதினிடம் வாக்னர் குழு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "ரஷியாவில் தனியார் ராணுவ அமைப்புகளுக்கு எந்த சட்டப்பூர்வ அங்கீகாரமும் இல்லை. எனவே வாக்னர் குழு என்ற அமைப்பு இல்லை" என கூறினார்.

    • உக்ரைன் ரஷியா போர் சுமார் 6 மாதங்களாக நடந்து வருகிறது.
    • உக்ரைன் போருக்கு பிறகு ரஷிய மக்களிடம் புதினின் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்று கருத்து கணிப்பு நடந்தது.

    மாஸ்கோ :

    உக்ரைன் நாட்டின் மீது ரஷியா சுமார் 6 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் மீதான போர் விவகாரத்தில் ரஷிய அதிபர் புதினுக்கு சொந்த நாட்டிலேயே எதிர்ப்புகள் கிளம்பின. போர் தொடங்கிய சமயத்தில் ரஷியா முழுவதும் பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. எனினும் அந்த போராட்டம் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் உக்ரைன் போருக்கு பிறகு ரஷிய மக்களிடம் புதினின் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பது குறித்து தனியார் அறக்கட்டளை நிறுவனம் ஒன்று கருத்து கணிப்பு நடத்தியது.

    இதில் 77 சதவீதம் பேர் அதிபர் புதினை நம்புவதாக கருத்து தெரிவித்துள்ளனர். 13 சதவீதம் பேர் மட்டுமே புதினை நம்பவில்லை என்று கூறியுள்ளனர்.

    மேலும் 81 சதவீம் பேர் நாட்டின் தலைவராக புதினின் செயல்பாடுகளை அங்கீகரித்ததாகவும், 10 சதவீம் பேர் அவரது பணியைப் பற்றி எதிர்மறையான பார்வையை கொண்டிருப்பதாகவும், 9 சதவீம் பேர் உறுதியாக தெரியவில்லை என்று கூறியதாகவும் கருத்துகணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

    • இந்த உத்தரவு புதிதல்ல.
    • ரஷியாவின் மக்கள் தொகை தொடர்ந்து பல 10 ஆண்டுகளாக சரிந்து வருகிறது.

    மாஸ்கோ :

    ரஷிய நாட்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இது அந்த நாட்டின் அதிபர் புதினை கவலைக்குள்ளாக்கி இருக்கிறது.

    இதன் காரணமாக அங்கு 10 குழந்தைகளையோ அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான குழந்தைகளையோ பெற்றெடுத்து வளர்க்கிற தாய்மார்களுக்கு அன்னை நாயகி என்ற சோவியத் கால பட்டம் வழங்கப்படும், அத்துடன் 10-வது பிறந்த குழந்தைக்கு 1 வயது ஆனவுடன் 1 மில்லியன் ரூபிள் (சுமார் ரூ.13 லட்சம்) ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று அதிபர் புதின் அறிவித்துள்ளார்.

    இதற்கான உத்தரவில் புதின் கையெழுத்து போட்டிருக்கிறார்.

    இந்த உத்தரவு புதிதல்ல.

    இரண்டாம் உலகப்போரின்போது பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டதால், 1944-ம் ஆண்டு சோவியத் தலைவர் ஸ்டாலின் அறிமுகப்படுத்திய திட்டம் தான் இது.

    பனிப்போரைத் தொடர்ந்து 1991-ம் ஆண்டு, சோவியத் யூனியன் உடைந்தபின்னர் இந்த திட்டம் கைவிடப்பட்டது.

    இப்போது அதை எடுத்து தூசி தட்டி மீண்டும் புதின் அமல்படுத்தி உள்ளார்.

    ரஷியாவின் மக்கள் தொகை தொடர்ந்து பல 10 ஆண்டுகளாக சரிந்து வருகிறது. 2022-ம் ஆண்டின் தொடக்கத்தில் சுமார் 4 லட்சம் சரிவுக்கு பின்னர் 14.5 கோடிகளாக குறைந்தது.

    சோவியத் யூனியன் உடைந்த பிறகு, கடுமையான பொருளாதாரம், சமூகச்சூழலால் 1990-களில் இருந்து மக்கள் தொகை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்தது. 2000-ம் ஆண்டு ரஷிய அதிபராக புதின் பதவி ஏற்ற பின்னர் மக்கள் தொகை சார்ந்த பிரச்சினைகளை நாடு எதிர்கொண்டது. மக்கள் தொகையை பெருக்குவதற்கு மேற்கொண்ட முந்தைய முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

    2018-ம் ஆண்டு மக்கள் தொகை 14.7 கோடியாக இருந்தது. இது உக்ரைனின் அங்கமாக இருந்த கிரிமியாவை சேர்த்த பிறகுதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த இணைப்பு சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்படாத நிலையில், 85 ஆயிரம் குறைந்தது.

    2021-ம் ஆண்டில் கொரோனா தொற்று, உக்ரைன் மீதான தற்போதைய போர் ஆகியவை அந்த நாட்டின் மக்கள் தொகை வீழ்ச்சிக்கு வழிவகுத்தபோது, அந்த நாட்டின் மக்கள் தொகை வீழ்ச்சியின் விகிதம் கிட்டத்தட்ட 2 மடங்காக அதிகரித்துள்ளதாம்.

    இந்த நிலையில்தான் ரஷிய அதிபர் புதின் 10 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுத்து வளர்க்கிற தாய்மார்களை கவுரவித்து ரொக்கப்பரிசு வழங்கும் சோவியத் கால திட்டத்தை மறுபடியும் அமல்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×