search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரத்த வெள்ளம்"

    • மீன் பிடிக்க வருமாறு சந்திரனை செல்போன் மூலம் கவுதமன் அழைத்துள்ளார்.
    • கவுதமன் மோட்டார் சைக்கிளில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திற்கு சென்றார்.

    புதுச்சேரி:

    நாகப்பட்டினம் மாவட்டம் சாமந்தம்போட், அமிர்தா நகரை சேர்ந்தவர் கவுதமன் (வயது 42). அதே ஊரை சேர்ந்தவர் சந்திரன் (43), இருவரும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் அதிகாலை 3.30 மணிக்கு, மீன் பிடிக்க வருமாறு சந்திரனை செல்போன் மூலம் கவுதமன் அழைத்துள்ளார். அதற்கு சந்திரன் நீ முன்னே செல், நான் பின்னாடி வருகிறேன் என கூறியுள்ளார். இதனால், அதே ஊரைச் சேர்ந்த ராஜம் (38) என்பவரை அழைத்துகொண்டு, கவுதமன் மோட்டார் சைக்கிளில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திற்கு சென்றார். காரைக்கால்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை திரு.பட்டினம் பிராவிடையான் ஆறு அருகே, காலை 4.15 மணிக்கு சென்றபோது, எதிரே அதிவேகமாக வந்த பால் வாண்டி (மினிவேன்) மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில், இருவரும் சாலையில் தூக்கியெறியப்பட்டு, தலை, கை, கால் முகம் என படுகாயம் அடைந்தனர். சிறிது நேரம் கழித்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சந்திரன், இரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி கவுதமன் இறந்து போனார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜத்திற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தை ஏற்படுத்திய, நன்னிலம் திருகொட்டாரம் கீழத்தெருவை சேர்ந்த ஜோதிபாசு (34) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    • சங்கருக்கும் பாக்கியலட்சுமி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு நடைபெறுவது வழக்கம்.
    • ஆத்திரமடைந்த சங்கர் கத்தியை எடுத்து பாக்கியலட்சுமி தலையில் சரமாரியாக வெட்டினார்.

    விழுப்புரம் :

    விழுப்புரம் அருகே தைலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 45) ஆசாரி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பாக்கியலட்சுமி (40) இந்நிலையில் சங்கருக்கும் பாக்கியலட்சுமி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு நடைபெறுவது வழக்கம். மேலும் சங்கர் தனது மனைவி பாக்கியலட்சுமி மீது நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி குடும்ப தகராறில் ஈடுபடுவாராம்.

    இன்று காலை வழக்கம்போல் சங்கருக்கும் பாக்கிய லட்சுமிக்கும் இடையில் குடும்பத் தகராறு காரணமாக சண்டை ஏற்பட்டது. சிறிது நேரத்தில் இது பயங்கரமாக வெடித்தது. இதில் ஆத்திரமடைந்த சங்கர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது மனைவி என்றும் கூட பாராமல் பாக்கியலட்சுமி தலையில் சரமாரியாக வெட்டினார். இதில் பாக்கியலட்சுமி அலறி துடித்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது பாக்யலட்சுமி வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பாக்கியலட்சுமி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த கிளியனூர்போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து மனைவியை கத்தியால் வெட்டி கொன்ற சங்கரை கைது செய்தனர். மேலும் போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டபகலில் கணவன் மனைவியை வெட்டிக் கொன்றது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×