என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேஸ்திரி பலி"

    • சிவலிங்கம் மேஸ்திரி தொழில் செய்து வந்தார்.
    • ரெயில் மோதி சிவலிங்கம் பலியானார்.

    தருமபுரி,

    தருமபுரி குமாரசாமி பேட்டை தெற்கு ரெயில்வே லைன் பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 37). மேஸ்திரி தொழில் செய்து வந்தார்.

    நேற்று இரவு குமாரசாமிபேட்டை அருகில் உள்ள ரெயில்வே லைனை கடக்கும் பொழுது எதிர்பாராத விதமாக அவ்வழியாக வந்த ரெயில் மோதி சிவலிங்கம் பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த தருமபுரி ரெயில்வே போலீசார் பிரேதத்தை கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தடுமாறி விழுந்த பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    வாலாஜாவை அடுத்த வள்ளுவம்பாக்கம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகன் சுபாஷ் (வயது 31). கட்டிட மேஸ்திரி.

    இவர் நேற்று மாலை வாலாஜா பஸ் நிலையத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் பைக்கில் வள்ளுவம் பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது வாலாஜாவை நோக்கி தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக சுபாஷ் ஓட்டி வந்த பைக்கில் இருந்து தடுமாறி விழுந்து பஸ் சக்கரத்தில் சிக்கி கொண்டார். பின்னர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வாலாஜா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் சுபாஷ் செய்து உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர், மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு கடந்த 13 வருடங்களாக குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
    • எதிர்பாரதவிதமாக கிணற்றில் தவறிவிழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை பெரிய தள்ளப்பாடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது43), மேஸ்திரி. இவருக்கு குடிபழக்கம் உள்ளது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு கடந்த 13 வருடங்களாக குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று அதே பகுதியில் உள்ள ஆறுமுகத்திற்கு சொந்தமான விவசாய கிணறு அருகே போகும்போது எதிர்பாரதவிதமாக கிணற்றில் தவறிவிழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அந்த வழியாக எதிரே வந்த பிக்கப் வாகனம் மகாலிங்கத்தின் மீது மோதியது.
    • பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே யே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது46). இவர் பெங்களூரில் மேஸ்திரியாக வேலை செய்து வந்தார்.

    சம்பவத்தன்று காரிமங்கலத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக எதிரே வந்த பிக்கப் வாகனம் மகாலிங்கத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே யே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • காந்தி மகான் பகுதியை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி முனியப்பன் இவருக்கு வளர்மதி என்ற மனைவியும் 7 மாத பெண் குழந்தை உள்ளது.
    • மின் கம்பியில் உயர் மின் அழுத்தம் காரணமாக திடீரென அறுந்து விழுந்தது. அப்போது அவ்வழியாக நடந்து சென்று கொண்டிருந்த கட்டிட மேஸ்திரி முனியப்பன் மீது விழுந்தது, இதில் முனியப்பன் தூக்கி வீசப்பட்டார்.

    சேலம்:

    சேலம் கிச்சிபாளையம் காந்தி மகான் பகுதியை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி முனியப்பன் இவருக்கு வளர்மதி என்ற மனைவியும் 7 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் காந்தி மகான் தெரு பகுதியில் உள்ள மின் கம்பியில் உயர் மின் அழுத்தம் காரணமாக திடீரென அறுந்து விழுந்தது. அப்போது அவ்வழியாக நடந்து சென்று கொண்டிருந்த கட்டிட மேஸ்திரி முனியப்பன் மீது விழுந்தது, இதில் முனியப்பன் தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்தநிலையில் கட்டிடம் மேஸ்திரி முனியப்பன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இன்று உடலை வாங்க மறுத்து திடீரென அரசு மருத்துவமனை வளாகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து உறவினர் கூறும்போது:-

    கிச்சிபாளையம் பகுதியில் மின் பாதைகள் சரிவர இல்லை என்றும் அதனை பராமரிக்காமலேயே உள்ளது என்றும் இதனால் கட்டிடம் மேஸ்திரி உயிரிழந்து விட்டதாகவும் தெரிவித்தனர். மின்சாரத் துறையின் அலட்சிய போக்கினாலே ஒரு உயிர் பறிபோய் விட்டது என்றும் உயிரிழந்த குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.1 கோடி நிவாரண நிதியும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டும். தமிழக அரசு வழங்காவிட்டால் உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்தனர்.

    மேலும் உயிரிழந்த கட்டிடம் மேஸ்திரியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

    • சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி இறந்த நவீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள சூடானூர் பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகன் நவீன் (வயது30). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் விவசாய நிலம் அப்பகுதியில் மலையையொட்டி உள்ளது.

    அந்த நிலத்தில் தற்போது நெல் பயிரிட்டுள்ளனர். அடிக்கடி காட்டுபன்றிகள் விளைநிலத்திற்குள் புகுந்து சேதப்படுத்தி வந்தது. இதனால் நெல்பயிரை பன்றிகளிடம் இருந்து காப்பாற்ற மின்வேலி அமைத்துள்ளார்.

    நேற்று இரவு வயலுக்கு சென்று காட்டுபன்றிகள் எதுவும் விளைநிலத்தை சேதப்படுத்தியுள்ளதாக என பார்த்துள்ளார்.

    அப்போது அங்கு அமைத்துள்ள மின்வேலியில் எதிர்பாராதவிதமாக நவீன் சிக்கியுள்ளார். இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனால் வெகுநேரமாகியும் மகன் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் விளைநிலத்திற்கு சென்று பார்த்தனர்.

    அப்போது மின்வேலியில் சிக்கிய நவீன் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி இறந்த நவீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×