search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முஸ்லிம் பெண்கள்"

    மசூதியில் தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும்" என்று முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு செய்துள்ளது. #SupremeCourt #mosques #Muslimwomen
    சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் நம்பிக்கை பெற்ற முஸ்லிம் பெண்கள் "மசூதியில் தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும்" என்று சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு செய்துள்ளனர்.  மசூதியில் பெண்கள் தொழுகை நடத்தவும், இமாம்களாக பெண்களை நியமினம் செய்ய அனுமதிக்கவும் சுப்ரீம் கோட்டை நாட கேரளாவில் உள்ள என்ஐஎஸ்ஏ என்ற பெண்கள் கூட்டமைப்பு விரைவில் மனுத்தாக்கல் செய்ய உள்ளது.

    முஸ்லிம் மதத்தில் பாலின சமத்துவத்திற்காக பிரசாரம் மேற்கொண்டுவரும் அமைப்பு, பலதார திருமணம், நிக்கா ஹலாலாவை (விவாகரத்து செய்த மனைவியை மீண்டும் அந்த நபரே திருமணம் செய்வது) அனுமதிக்கும் முஸ்லிம் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. என்ஐஎஸ்ஏ அமைப்பின் தலைவர் வி.பி.ஜுஹாரா பேசுகையில், ''புனித குர்ஆன் நூலிலும், இறைத்தூதர் முகமது நபியும் ஒருபோதும் பெண்கள் மசூதிக்குள் வந்து தொழுகை நடத்தக்கூடாது என்று கூறியதற்கான எந்தவிதமான ஆதாரங்களும் கிடையாது.

    அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. ஆண்களைப் போன்று, பெண்களும் தங்களுக்குரிய நம்பிக்கையின் அடிப்படையில், அரசியலமைப்பு சட்ட உரிமைகள்படி வழிபாடு நடத்த உரிமை உண்டு. சபரிமலையை போன்று, மசூதிகளிலும் அனைத்து பெண்களும் சென்று வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும். இதில் காட்டப்படும் பாகுபாடுகள் அகற்றப்பட்டு, உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்.



    சுப்ரீம் கோர்ட்டு செல்வது தொடர்பாக எங்களுடைய வழக்கறிஞருடன் பேசி வருகிறோம். விரைவில் மனுத்தாக்கல் செய்வோம் என கூறியுள்ளார். #SupremeCourt #mosques #Muslimwomen
    ×