search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவிகள் பலி"

    • அரசு பள்ளிக்கூடத்தை சேர்ந்த மாணவிகள் தமிழரசி, இனியா, லாவண்யா, சோபியா ஆகிய 4 மாணவிகள் நீரில் மூழ்கி இறந்தனர்.
    • ஆசிரியர் செபா சகேயுன் மீது பணியில் அஜாக்கிரதையாக இருந்ததாக போலீசில் நேற்று இரவு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    கரூர்:

    கரூர் அருகே விளையாட்டு போட்டிக்கு சென்றுவிட்டு திரும்பியபோது மாயனூர் காவிரி ஆற்றில் குளித்த புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி அரசு பள்ளிக்கூடத்தை சேர்ந்த மாணவிகள் தமிழரசி, இனியா, லாவண்யா, சோபியா ஆகிய 4 மாணவிகள் நீரில் மூழ்கி இறந்தனர்.

    பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் அஜாக்கிரதையாக இருந்ததாக மாணவிகளை உடன் அழைத்துச் சென்ற ஆசிரியர்கள் திலகவதி, செபா சகேயுன் மற்றும் பிலிப்பட்டி பள்ளியின் தலைமை ஆசிரியை பொட்டுமணி ஆகியோர் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் மாணவிகள் பலியான சம்பவம் எதிரொலியாக ஆசிரியர் செபா சகேயுன் மீது பணியில் அஜாக்கிரதையாக இருந்ததாக மாயனூர் போலீசில் நேற்று இரவு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

    • மாணவிகளின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள், தமிழரசி, சோபியா, இனியா, லாவண்யா ஆகிய 4 மாணவிகள் இன்று காலையில், கரூர் மாவட்டம் மாயனூரில் உள்ள காவிரி ஆற்றில் குளித்தபோது, ஆற்றின் சுழலில் சிக்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் ஆற்றில் மூழ்கிய மாணவிகளின் சடலங்களை மீட்டனர்.

    உயிரிழந்த மாணவிகளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் மாணவிகளின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெற்றோர்கள் வருவதற்கு முன்பாக பிரேத பரிசோதனை முடிக்கபட்டதால் வாங்க மறுத்தனர். புதுக்கோட்டை இலுப்பூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாணவிகளை விளையாட்டுப் போட்டிக்கு அழைத்து சென்ற ஆசிரியர்களின் கவனக்குறைவால் மாணவிகளின் உயிர் பறிபோனதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் மாணவிகள் இறந்த விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் விளையாட்டு போட்டிக்கு அழைத்துச் சென்ற இரண்டு ஆசிரியர்கள் என 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    • உயிரிழந்த மாணவிகள் 4 பேர் புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியை சேர்ந்தவர்கள்.
    • ஆற்றில் மூழ்கிய மாணவிகளின் சடலங்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

    கரூர் மாவட்டம் மாயனூரில் உள்ள காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்தனர். ஆற்றில் மூழ்கிய மாணவிகளின் சடலங்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

    இந்நிலையில், உயிரிழந்த பள்ளி மாணவிகள் 4 பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, நிவாரணம் அறிவித்துள்ளார்.

    கரூர், மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த பள்ளி மாணவிகள் 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

    ×