என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு
- உயிரிழந்த மாணவிகள் 4 பேர் புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியை சேர்ந்தவர்கள்.
- ஆற்றில் மூழ்கிய மாணவிகளின் சடலங்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
கரூர் மாவட்டம் மாயனூரில் உள்ள காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்தனர். ஆற்றில் மூழ்கிய மாணவிகளின் சடலங்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
இந்நிலையில், உயிரிழந்த பள்ளி மாணவிகள் 4 பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, நிவாரணம் அறிவித்துள்ளார்.
கரூர், மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த பள்ளி மாணவிகள் 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
Next Story






