search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள் கோரிக்கை"

    • பொதுமுடக்கம் ரத்து செய்யப்பட்ட நிலை யிலும் அரசு நகர் பேருந்து 4 ஏ. இயக்கப்படவில்லை.
    • அக்ரஹாரம் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள மாணவர்கள் காலை, மாலை நேரங்களில் பள்ளிக்கு செல்ல முடியாத நிலையுள்ளது.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் எச்.அக்ராஹரம், அழகிரிநகர், நெருப்பாண்டகுப்பம், ஆட்டியானூர், தூரணம் பட்டி, மாவேரிப்பட்டி சோரியம்பட்டி வழித்தடத்தில் அரசு நகர் பேருந்து தடம் எண் 4 ஏ. இயக்கப்பட்டது.

    கொரோனா பொதுமுடக்கம் காரணமாக அரசு நகர் பேருந்து 4 ஏ. தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    ஆனால், பொதுமுடக்கம் ரத்து செய்யப்பட்ட நிலை யிலும் அரசு நகர் பேருந்து 4 ஏ. இயக்கப்படவில்லை.

    இதனால், அக்ரஹாரம் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள மாணவர்கள் காலை, மாலை நேரங்களில் பள்ளிக்கு செல்ல முடியாத நிலையுள்ளது.

    எனவே, நிறுத்தப்பட்டுள்ள அரசு நகர் பேருந்து 4 ஏ.வை மீண்டும் இயக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு பள்ளி குழந்தைகள், பெற்றோர்கள், மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆர்ட்டிபீஷியல் இன்டலிஜென்ஸ் மற்றும் மெஷின் லாங்குவேஜ், பிக் டேட்டா உள்ளிட்ட பாடங்கள் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
    • பாடத்திட்டத்தை மாற்றுவது மாணவர்களின் தேர்ச்சியைப் பாதிக்கும் என்பதால் கடும் எதிர்ப்பு எழுந்தது.

    திருப்பூர் :

    கோவை பாரதியார் பல்கலைக்கழகம் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் பி.காம்., முதலாமாண்டு மாணவர்களுக்கு எம்.எஸ்., ஆபிஸ் பாடம் இருந்தது. இப்பாடம் மாற்றப்பட்டு அதற்கு பதில் ஆர்ட்டிபீஷியல் இன்டலிஜென்ஸ் மற்றும் மெஷின் லாங்குவேஜ், பிக் டேட்டா உள்ளிட்ட பாடங்கள் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    தேர்வுக்கு 20 நாட்களே இருந்த நிலையில், பாடத்திட்டத்தை மாற்றுவது மாணவர்களின் தேர்ச்சியைப் பாதிக்கும் என்பதால் பல்கலைக்கழகத்தின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் பாடத்திட்டத்தை மாற்றும் முடிவை பல்கலைக்கழக நிர்வாகம் கைவிட்டுள்ளது. முதல் செமஸ்டரில் புதிய பாடங்கள் பின்பற்றப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்த தகவல் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இது குறித்து பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) முருகவேல் கூறுகையில், பி.காம்., மாணவர்களுக்கான பாடத்திட்டம் மாற்றுவது நிறுத்தப்பட்டது. முதல் செமஸ்டர் தேர்வுகளுக்கு பழைய பாடத்திட்டமே பின்பற்றப்படும். இரண்டாவது செமஸ்டருக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்துவது குறித்து சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் முன்மொழியப்படும். ஒப்புதல் கிடைத்தால் அமல்படுத்தப்படும் என்றார்.

    • மண்டல விளையாட்டுப் போட்டிகளை பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையே அந்தந்த தாலுகாக்களில் நடத்தி வருகின்றனர்.
    • கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் பல கிலோமீட்டர் தூரம் பயணித்து போட்டிகளில் பங்குபெறும் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    கொடைக்கானல்:

    மண்டல விளையாட்டுப் போட்டிகளை பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையே அந்தந்த தாலுகாக்களில் நடத்தி வருகின்றனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் 28 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் ஆண்டுதோறும் கொடைக்கானல் மலைப்பகுதியிலேயே நடத்தப்படுகிறது.

    மாவட்ட உடற்கல்வித்துறை சார்பில் இந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறும் மாணவ மாணவிகள் தாலுகா தலைநகர பகுதிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

    இந்த ஆண்டு டிஜோன் விளையாட்டுப் போட்டிகள் அந்தந்த கல்வி மாவட்டங்களில் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. கொடைக்கானல், வத்தலகுண்டு கல்வி மாவட்டத்தை சேர்ந்ததாகும். இதனால் இந்த ஆண்டு நடைபெறும் மண்டல விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட உடற்கல்வித்துறை வத்தலகுண்டு பகுதியில் நடத்த ஏற்பாடு செய்து வருகிறது.

    கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் பல கிலோமீட்டர் தூரம் பயணித்து போட்டிகளில் பங்குபெறும் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கொடைக்கானலைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பணம் செலவு செய்து பயணித்து வத்தலகுண்டு பகுதிக்கு சென்று அங்கு நடைபெற உள்ள மண்டல விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    வத்தலகுண்டு பகுதியில் விளையாட்டு போட்டிகள் நடைபெறுவதால் கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள குறிப்பாக மேல் மலை கிராமங்களான பூண்டி, மன்னவனூர், பூம்பாறை, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் பங்கு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே இந்த ஆண்டு கொடைக்கானல் மலைப்பகுதியிலேயே நடத்த வேண்டும் என்று மலை கிராம பள்ளி மாணவ-மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட நிர்வாகமும் உடற்கல்வி துறையும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபற்றி மாவட்ட உடற்கல்வி துறையினரை தொடர்பு கொண்ட போது அவர்கள் எந்த பதிலையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×