search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர் சேர்க்கை கலந்தாய்வு"

    • நாளை தொடங்குகிறது
    • காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு சேர்க்கை உறுதி செய்யப்படமாட்டாது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டிற்கான இளநிலை மாணவ, மாண விகள் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு நாளை (வியாழக் கிழமை) தொடங்குகிறது. முதல்நாளில் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 2-ந் தேதி பி.காம், சி.ஏ., 3-ந் தேதி மொழிப்பாட பிரிவுகளான பி.ஏ தமிழ், ஆங்கிலம் ஆகிய பாட பிரிவுகளுக்கும் பொது கலந்தாய்வு நடைபெற உள்ளது.

    மேலும் மாணவர் சேர்க்கை குறித்த அனைத்து தகவல்களும் http://www.gasctpt.edu.in என்ற இணையதளத்தில் வெளியிடப் படும். தேர்வு பட்டியலில் உள்ளவர்கள் மட்டும் அவர்களுக்கு உரிய தேதியில் சேர்க்கைக்கு உரிய அசல் மற்றும் நகல் சான் றுகளுடன் கல்லூரிக்கு நேரடியாக வரவேண்டும். தேர்வு பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கலந்தாய்விற்கு வராத நிலையில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் தரவரிசைப்படி நிரப்பப்படுவர்.

    காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு சேர்க்கை உறுதி செய்யப்படமாட்டாது. இத்தகவலை கல்லூரி முதல்வர் பெ.சீனுவாசகுமரன் தெரிவித்துள்ளார்.

    • பாடவாரியாக சேர்க்கைகள் நடைபெறும்
    • நாளை தொடங்குகிறது

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-2024-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

    சிறப்பு பிரிவினரான மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள், தேசிய மாணவர் படை அந்தமான் நிக்கோபார் மாண வர்கள், பாதுகாப்பு படை வீரர்களின் வாரிசுகள் மற்றும் விதவைகள் ஆகியோருக்கு கலந்தாய்வு நாளை காலை 10 மணிக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.

    முதற்கட்ட மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு ஜூன் 5-ந் தேதி பி.எஸ்சி கணினி அறிவியல் பாடப் பிரிவிற்கும், 6-ந்தேதி பி.காம் வணிகவியல், 7-ந் தேதி பி.ஏ ஆங்கிலத்துறைக்கும், 8-ந் தேதி பி.ஏ.தமிழ்துறைக்கும், 9-ந் தேதி பி.எஸ்சி கணிதத்திற்கும் என பாடவாரியாக சேர்க்கைகள் நடைபெறும்.

    கல்லூரியில் இருந்து தரவரிசை மற்றும் இன சுழற்சி அடிப்ப டையில் தெரிவு செய்யப்பட்டு குறுஞ்செய்தி அழைப்பு மூலம் அழைக்கப்பட்ட மாணவர்கள் மட்டும் சேர்க்கை கலந்தாய்வுக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேற்கண்ட தகவலை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) என். சுஜாதா தெரிவித்துள்ளார்.

    • இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்
    • இ–மெயில், எஸ்.எம்.எஸ். மூலமாக தகவல் அனுப்பப்படும்

    வேலூர்:

    வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில், இளங்கலை பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு, இன்று முதல் 5-ந் தேதி வரை நடக்கவுள்ளது.

    முதல் நாளான இன்று கல்லூரி முதல்வர் மலர் தலைமையில் கலந்தாய்வு தொடங்கியது.

    அனைத்து பட்டப்படிப்புகளிலும் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு இட ஒதுக்கீடு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்றது.

    இதில் கலந்து கொள்ள 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 55 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் 30 பேருக்கு சேர்க்கைக்கான ஆணை வழங்கப்பட உள்ளது .

    தொடர்ந்து, கணிதம், இயற்பியல், கணினிஅறிவியல் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு – ஜூன் 1-ந் தேதியும், வேதியியல், விலங்கியல் மற்றும் ஊட்டச்சத்து உணவு கட்டுப்பாட்டியல் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு 2-ந் தேதியும், வணிகவியல் மற்றும் கலை பாடப்பிரிவுகளுக்கான (வணிகவியல், வணிக மேலாண்மை, வரலாறு, பொருளியல்) கலந்தாய்வு 3-ந் தேதியும், தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு 5-ந் தேதியும் நடக்கிறது.

    இந்த கல்லூரியில் உள்ள 984 இடங்களுக்கு, மொத்தம் 16 ஆயிரத்து 10 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.

    தொடர்ந்து, இவர்களின் தரவரிசைப்பட்டியல், www.mgacvlr.edu.in எனும் கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    இதில் பெற்றிருக்கும் மதிப்பெண் அடிப்படையில், மேற்குறிப்பிட்ட நாட்களில் நடக்கும் கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும். அதற்கு ஏற்றவாறு, கலந்தாய்வில் பங்கேற்பது குறித்து, கல்லூரியில் இருந்து இ–மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலமாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும், கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவ–மாணவிகள், இணைய வழி விண்ணப்பம், மாற்றுச்சான்றிதழ் (அசல் மற்றும் நகல்–2), பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றுகள் (அசல் மற்றும் நகல்–2), ஜாதிச்சான்று (அசல் மற்றும் நகல்–2), ஆதார் அட்டை (அசல் மற்றும் நகல்–2), சிறப்பு பிரிவினருக்கான சான்று (அசல் மற்றும் நகல்–2) மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ–2 ஆகியவற்றுடன் வருகை தரவேண்டும்.

    தொடர்ந்து, உண்மை சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, அதன்பிறகே கல்லூரியில் சேர்க்கை உறுதி செய்யப்படும். அப்போது, கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கு (பி.ஏ., பி.காம், பி.பி.ஏ.)– ரூ.2 ஆயிரத்து 306, அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு (பி.எஸ்.சி.) –ரூ.2 ஆயிரத்து 336, கணினி அறிவியல் பாடப்பிரிவுக்கு (பி.எஸ்.சி.) – ஆயிரத்து 736 ரூபாய் சேர்க்கை கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
    • இதில் பிளஸ்-2 துணை தேர்வில் தேர்ச்சிப் பெற்று மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு கலை கல்லூரி முதல்வர் அனுராதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-

    கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை, இளமறிவியல் பாடப்பிரிவுகளில், மாணவ, மாணவிகள் சேர்க்க்கான பொது கலந்தாய்வு நாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் பிளஸ்-2 துணை தேர்வில் தேர்ச்சிப் பெற்று மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். அரசு அறிவித்துள்ளவாறு 20 சதவீதம் கூடுதல் மாணவர் சேர்க்கை, இக்கலந்தாய்வில் இருப்பதாலும் அனைத்து மாணவ, மாணவிகளும் பங்கேற்கலாம்.

    கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள், பிளஸ்-2 துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தவிர, ஏற்கனவே இணையதளத்தில் விண்ணப்பித்த படிவம், மாற்றுச்சான்றிழ் (அசல்), மதிப்பெண் பட்டியல்கள் 10, 11, 12-ஆம் வகுப்பு அசல் சான்றிழ்கள், சாதிச்சான்றிதழ் (நகல்), சிறப்பு பிரிவினருக்கான சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் 4, ஆதார் அட்டை(நகல்), வங்கிக் கணக்கு புத்தக முதல் பக்க நகல் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களும் 3 நகல்கள் கொண்டு வரவும். மேலும், இக்கல்லூரியில் காலியாக உள்ள பி.சி. பிரிவு மாணவர்களுக்கான இடங்களுக்கு நேரடியாக விண்ணப்பம் பெற்று கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×