search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மராட்டிய மாநிலம்"

    மராட்டிய மாநிலத்தில் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்ற 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
    அமராவதி:

    விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட விளைபொருட்களுக்கான பாக்கி தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மராட்டிய மாநிலம் அமராவதி நகரில் காங்கிரஸ் கட்சியினர் சமீபத்தில் அமைதி பேரணி நடத்தினார்கள்.

    இந்த நிலையில், அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அமராவதி நகரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் அருகே வீரரேந்திர ஜக்தாப், யாஷ்மோமாதி தாக்குர் என்ற இரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்று தீக்குளிப்பதற்காக மண்எண்ணெய் கேனுடன் வந்தனர். அவர்கள் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைக்கும் முன் போலீசார் பாய்ந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். எம்.எல்.ஏ.க்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர். 
    மராட்டிய மாநிலத்தில் மத்திய மந்திரி நிதின் கட்காரி பண்ணையில் கொதிகலன் வெடித்த விபத்தில் பிரதீப் ஸ்ரீராம் என்பவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
    நாக்பூர்:

    மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு மராட்டிய மாநிலம், நாக்பூர் அருகே பண்ணை ஒன்று உள்ளது. அந்தப் பண்ணையில் நேற்று முன்தினம் மஞ்சள் உற்பத்தி பணி நடந்து கொண்டு இருந்தது.

    அதற்கான சூளையில் தண்ணீர் கொதிகலனுக்காக விறகு போடுகிற பணியில் 3 தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் தண்ணீர் கொதிகலன் வெடித்தது. அதைத்தொடர்ந்து தொழிலாளர்கள் 3 பேரும் ஓட்டம் பிடித்தனர். அவர்களில், பிரதீப் ஸ்ரீராம் என்பவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

    உடனடியாக அவர் கல்மேஷ்வர் நகரத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.இந்த விபத்து குறித்து கல்மேஷ்வர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். 
    ×