search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுப்பிரியர்கள்"

    • விலை உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.3350 கோடி வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • அனைத்து நகரப் பகுதிகள், கிராமப்புறங்களில் மது பிரியர்கள் மதுபானங்களின் விலையை கேட்டு ‘ஷாக்’ ஆனார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் மதுபானங்களின் விலையை டாஸ்மாக் நிறுவனம் உயர்த்தி உள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் கிடைக்கும் வருவாய் அரசின் வருவாய் ஆதாரங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    கடந்த ஆண்டு மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்ட பிறகு தற்போது மீண்டும் விலையை உயர்த்தி உள்ளது. பிராந்தி, விஸ்கி, ரம், ஜின் உள்ளிட்ட அனைத்து மதுபானங்களின் விலையும் ரூ.10 முதல் ரூ.80 வரை அதிகரித்துள்ளது.

    சாதாரண மற்றும் நடுத்தர வகை மதுபானங்கள் விலை குறைவாகவும், பிரீமியம் வகை மதுபானங்கள் விலை அதிக அளவிலும் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண மற்றும் நடுத்தர மதுபானங்கள் குவாட்டர் பாட்டிலுக்கு ரூ.10-ம், அரை பாட்டிலுக்கு ரூ.20-ம், முழு பாட்டிலுக்கு ரூ.40-ம் அதிகரித்துள்ளன.

    பிரீமியம் வகை மதுபானங்கள் குவாட்டருக்கு ரூ.20-ம், அரைபாட்டிலுக்கு ரூ.40-ம், முழு பாட்டிலுக்கு ரூ.80-ம், பீர் வகைகளுக்கு ரூ.10-ம் கூடியுள்ளது.

    மதுபானங்களின் அதிக பட்ச சில்லறை விலை 80 ரூபாய் வரை கூடியதால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    தமிழகம் முழுவதும் மதுபானங்களின் விலை உயர்வு இன்று அமலுக்கு வந்தது. இந்த விலை உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.3350 கோடி வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    குவாட்டர் பாட்டில் சாதாரண, நடுத்தர வகை மதுபானங்கள் முன்பு ரூ.130, ரூ.160-க்கு கிடைத்தது. அவை தற்போது ரூ.170 ஆக கூடியுள்ளது.

    பிரீமியம் வகை குவாட்டர் பாட்டில் முன்பு ரூ.180, ரூ.190, ரூ.200, ரூ.240 என்ற அளவில் விற்கப்பட் டது. இவற்றின் விலை தற்போது ரூ.20 உயர்ந்துள்ளது.

    மெக்டவல் விஸ்கி, மெக்டவல் பிராந்தி ரூ.200-க்கு இன்று விற்கப்பட்டது. வி.எஸ்.ஒ.பி.எக்ஸ்டிரா கோல்டு பிராந்தி ரூ.220, ராயல் சேலஞ்ச் விஸ்கி, சிக்னேச்சர் பிரீமியம் விஸ்கி குவாட்டர் ரூ.240-ல் இருந்து ரூ.260 ஆக உயர்ந்தது.

    ஓல்டு காஸ்ரம் கோல்டன், கிரேப் ஆர்டினரி பிராந்தி, மென்ஸ் கிளப் டீலக்ஸ் பிராந்தி ஆகியவை குவாட் டர் ரூ.140-க்கு விற்கப்பட்டது. டைமண்ட் பிராந்தி, விஸ்கி, ரம், சாபில் சூப்பர் ஸ்டார் பிராந்தி ஆகியவை குவாட்டர் ரூ.140 ஆக உயர்ந்தது. எம்.ஜி.எம் மீடியம் ஓட்கா, எம்.ஜி.எம். ஒயிட் மீடியம் ரம், வி.எஸ்.ஓ.பி. பிராந்தி குவாட் டர் ரூ.170-க்கு விற்கப்பட் டது.

    ஆபிசர்ஸ் சாய்ஸ், டைநைட் பிராந்தி ரூ.170, எம்.சி. ஓல்டு காஸ்க் ரம் ரூ.200, எம்.சி வின்டேஜ் கோல்டு பிளன்டட் மால்ட் விஸ்கி ரூ.230, செஞ்சூரியன் பிரெஞ்ச் வி.எஸ்.ஓ.பி. பிராந்தி ரூ.250 ஆக உயர்ந்து உள்ளது.

    பிரிஹான்ஸ் நெப்போலியன் பிராந்தி ரூ.210, பிரிஹான்ஸ் பிரீமி யம் விஸ்கி ரூ.200, பவர் ஆப்பிள் ஓட்கா, பவர் ஆரஞ்சு ஓட்கா ஆகியவை ரூ.170 ஆக உயர்ந்தது.

    ஓல்டு மங்க் டீலக்ஸ் ரம், கோல்டன் ஈகிள் ஆர்டினரி பிராந்தி, ஓரியன் பிராந்தி ஆகியவை குவாட்டர் ரூ.140, மேன்ஷன் ஹவுஸ் பிராந்தி குவாட்டர் ரூ.250, அரை பாட்டில் ரூ.500 ஆக கூடியது.

    கூலி தொழிலாளர்கள், நடுத்தர மக்கள் அதிகமாக பயன்படுத்தும் மதுபானங்கள் குவாட்டர் பாட்டில்கள் ரூ.140 ஆகவும், அரைபாட்டில் ரூ.280 ஆகவும் உயர்ந்தன. இனிமேல் சாதாரண வகை குவாட்டர் சரக்கு அடிக்க வேண்டுமா னால் குறைந்த பட்சம் ரூ.200 தேவைப்படும். தண்ணீர் பாட்டில், கிளாஸ், சினாக்ஸ் என ரூ.250 வரை செலவிட வேண்டிய நிலை உள்ளது.

    பிரீமியம் வகையான சரக்குகளை சாப்பிடுபவர்கள் குவாட்டர் பாட்டிலுக்கு ரூ.350 வரை செலவிட வேண்டும். மதுபானங்கள் விலை இன்று முதல் அமலுக்கு வந்ததால் மது பிரியர்கள் முனுமுனுத்து கொண்டே சரக்கு வாங்கி குடித்தனர். "குடிகாரர்கள் தலையில் தான் கடைசியில் கை வைக்கும்" என்று புலம்பிக் கொண்டே சரக்கு வாங்கியதை காண முடிந்தது.

    சென்னை உள்ளிட்ட அனைத்து நகரப் பகுதிகள், கிராமப்புறங்களில் மது பிரியர்கள் மதுபானங்களின் விலையை கேட்டு 'ஷாக்' ஆனார்கள். ஆனாலும் கடைகளில் கூட்டம் குறையவில்லை. கடைகள் இன்று திறந்ததும் சரக்கு வாங்குவதற்கு காத்து நின்றனர்.

    கூலி தொழிலாளர்கள் நிறைந்த பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் வேதனையுடன் புலம்பலை காண முடிந்தது.

    • விவசாயப் பயிர் சாகுபடி கைவிடும் காலங்களிலும் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு கைகொடுத்து வருகிறது.
    • தற்போது ஒருசில மதுப்பிரியர்கள் கோழிகளை திருடி சென்று சைட் டிஷ் ஆக சமைத்து சாப்பிட்டு விடுகின்றனர்.

    உடுமலை:

    உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது.மேலும் அதனைச் சார்ந்து ஆடு,மாடு,கோழி வளர்ப்பிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.விவசாயப் பயிர் சாகுபடி கைவிடும் காலங்களிலும் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு கைகொடுத்து வருகிறது.இந்தநிலையில் சமீப காலங்களாக உடுமலை சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் தொடர்ச்சியாக கோழிகள் திருடப்பட்டு வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-நாட்டுக்கோழி வளர்ப்பு என்பது லாபகரமான தொழிலாக உள்ளது.பண்ணைகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளை விட வீடுகள் மற்றும் விவசாய பூமிகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகள் ஆரோக்கியமான சூழலில் வளர்கின்றன.மேலும் அவை இயற்கையான புழு,பூச்சி மற்றும் தானியங்களை தின்று வளர்வதால் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளன.இதனால் அசைவப்பிரியர்கள் இந்தவகை நாட்டுக்கோழிகளை தேடி சென்று வாங்கி சமைத்து சாப்பிடுகின்றனர். இதனால் பண்ணை நாட்டுக்கோழிகளை விட இந்தவகை நாட்டுக்கோழிகள் நல்ல விலைக்கு விற்பனையாகின்றன.இதுதவிர நாட்டுக்கோழி முட்டைகளுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது.ஒருசிலர் சண்டைசேவல்களை வளர்த்து பல ஆயிரம் ரூபாய்களுக்கு விற்பனை செய்கின்றனர்.

    இதனால் தற்போது ஒருசில மதுப்பிரியர்கள் கோழிகளை திருடி சென்று சைட் டிஷ் ஆக சமைத்து சாப்பிட்டு விடுகின்றனர்.ஒருசில இடங்களில் கோழிகளைத் திருடி விற்று மது வாங்கும் நபர்களும் உள்ளனர்.இதுதவிர கோழிகளை திருடி விற்று பணம் சேர்க்கும் நோக்கில் ஒருசில நபர்கள் சுற்றி வருவதாகவும் தெரிகிறது.இதுபோன்ற நபர்கள் ஈரத்துணியை கோழிகள் மீது போட்டு அவை சத்தம் எழுப்பாத வகையில் திருடிச் செல்வதாகத் தெரிகிறது.இவ்வாறு ஆங்காங்கே தொடர்ச்சியாக நடந்து வரும் கோழித்திருட்டு பற்றி விவசாயிகள் போலீசில் புகார் தெரிவிக்க விரும்புவதில்லை.ஒருசில இடங்களில் ஆடுகள் திருடப்படும் போது கூட புகார் தெரிவிப்பதில் தயக்கம் காட்டுகின்றனர்.இது திருடர்களுக்கு சாதகமானதாக மாறி விடுகிறது.எனவே விவசாயிகள் விழிப்புணர்வுடன் இருந்து தங்கள் கால்நடைகளை பாதுகாத்து கொள்ள வேண்டியது அவசியமாகும் என்ற தகவல் தற்போது விவசாயிகளிடையே சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

    ×