search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணமகன் மாயம்"

    • இன்று திருமணம் நடைபெறுவதையடுத்து சென்னையில் இருந்து மணமகன் ஊருக்கு வந்திருந்தார்.
    • திருமணம் நிறுத்தப்பட்டது பற்றி தகவல் தெரியாத உறவினர்கள் பலரும் இன்று திருமண வீட்டிற்கு வந்திருந்தனர்.

    நாகர்கோவில்:

    சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்னையில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு திருமணம் செய்து வைக்க உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். பூதப்பாண்டி பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் என்ஜினீயருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    இதையடுத்து இருவருக்கும் இன்று திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதனால் என்ஜினீயரின் வீட்டாரும் மணமகளின் வீட்டாரும் திருமண அழைப்பிதழ் அச்சிட்டு உறவினர்களுக்கு வழங்கினார்கள். இன்று திருமணம் நடைபெறுவதையடுத்து சென்னையில் இருந்து மணமகன் ஊருக்கு வந்திருந்தார்.

    நேற்று காலையிலேயே திருமண வீட்டிற்கு உறவினர்கள் சிலர் வந்து இருந்தனர்.அவர்களுடன் மாப்பிள்ளை அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். திருமண வீட்டுக்கு உறவினர்கள் பலரும் வந்திருந்ததால் திருமண வீடு களைகட்டி இருந்தது.

    இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்து திடீரென புதுமாப்பிள்ளை மாயமானார். மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் மணமகளின் வீட்டுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மணமகளின் குடும்பத்தார் இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். திருமணம் நடைபெற இருந்த நிலையில் மாப்பிள்ளை மாயமானதால் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்தனர். இந்த நிலையில் இன்று நடைபெறுவதாக இருந்த திருமணத்தை நிறுத்த முடிவு செய்தனர். இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது.

    திருமணம் நிறுத்தப்பட்டது பற்றி தகவல் தெரியாத உறவினர்கள் பலரும் இன்று திருமண வீட்டிற்கு வந்திருந்தனர். பின்னர் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதே போல் மணமகள் வீட்டிற்கு வந்த உறவினர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மாயமான மாப்பிள்ளையை போலீசார் தேடி வருகிறார்கள்.

    திருமண நாளில் மாப்பிள்ளை எதற்காக மாயமானார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரை கண்டுபிடித்தால் தான் எதற்காக மாயமானார் என்ற விவரம் தெரியவரும். திருமண நாளில் மணமகன் மாயமான சம்பவம் சுசீந்திரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • உறவினர்கள் மணமகனை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
    • முதல்நாள் பெண் அழைப்பில் பங்கேற்று விட்டு, மறுநாள் திருமணத்தன்று மணமகன் மாயமான சம்பவம் சிதம்பரம் நகரப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சிதம்பரம்:

    கடலூர் அருகே உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன்நாதன். அவரது மகன் ஜெயக்குமார் (வயது 28). இவர் கடலூர் மாவட்ட நீதிமன்ற அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் சிதம்பரம் அருகே வரகூர் பேட்டையை சேர்ந்த ஒரு இளம்பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    அதன்படி சிதம்பரம் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கு முதல்நாள் நடக்கும் பெண் அழைப்பு விழாவிற்கு மணமகன் வீட்டார் அவர்களின் உறவினர்களுடன் நேற்று வந்தனர். பெண் அழைப்பு முடிந்த நிலையில் இன்று நடக்கும் திருமணத்திற்கான ஏற்பாடுகளை மணமகள் வீட்டார் செய்து வந்தனர். மணமகன் வீட்டார் திருமண மண்டபத்திலேயே தங்கினர்.

    இன்று காலையில் வெகுநேரமாகியும் அறையை விட்டு மணமகன் வெளியில் வரவில்லை. இதையடுத்து அறைக்குள் சென்று பார்த்த போது மணமகனை காணவில்லை. அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மணமகனை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த மணமகள் வீட்டார் செய்வதறியாது திகைத்து வந்தனர். முதல்நாள் பெண் அழைப்பில் பங்கேற்று விட்டு, மறுநாள் திருமணத்தன்று மணமகன் மாயமான சம்பவம் சிதம்பரம் நகரப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • இவருக்கும் சிதம்பரம் அடுத்த வரகூர்பேட்டையை சேர்ந்த ஒரு இளம்பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
    • இன்று காலையில்,மணமகனை காணவில்லை. .

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன்நாதன் மகன் ஜெயக்குமார் (வயது 28). இவர் கடலூர் மாவட்ட நீதிமன்ற அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் சிதம்பரம் அடுத்த வரகூர்பேட்டையை சேர்ந்த ஒரு இளம்பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டத   அதன்படி சிதம்பரம் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கு முதல்நாள் நடக்கும் பெண் அழைப்பு விழாவிற்கு மணமகன் வீட்டார் அவர்களின் உறவினர்களுடன் நேற்று மாலை வந்தடைந்தனர். பெண் அழைப்பு முடிந்த நிலையில் இன்று நடக்கும் திருமணத்திற்கான ஏற்பாடுகளை மணமகள் வீட்டார் செய்து வந்தனர். மணமகன் வீட்டார் திருமண மண்டபத்திலேயே தங்கிவிட்டனர் .

    இன்று காலையில் வெகுநேரமாகியும் ரூமை விட்டு மணமகன் வெளியில் வரவில்லை. இதையடுத்து ரூமுக்குள் சென்று பார்த்த போது மணமகனை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மணமகனை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது இதனால் அதிர்ச்சியடைந்த மணமகள் வீட்டார் செய்வதறியாது திகைத்து வந்தனர். முதல்நாள் பெண் அழைப்பில் பங்கேற்று விட்டு, மருநாள் திருமணத்தன்று மணமகன் மாயமான சம்பவம் சிதம்பரம் நகரப் பகுதியில் பரபரப்பை உருவாக்கியது. 

    • மணமகன் சதீஷ்குமார் மாயமானதால் மணப்பெண்ணும், திருமணத்துக்கு வாழ்த்த வந்த உறவினர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
    • சதீஷ்குமாரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது.

    திருப்போரூர்:

    நெல்லிக்குப்பம் அடுத்த குமிழி, மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கும் செங்கல்பட்டை அடுத்த மெய்யூரைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் இன்று திருமணம் செய்ய இருவீட்டாரும் முடிவு செய்து இருந்தனர்.

    அவர்களது திருமணம் திருப்போரூரை அடுத்த கொட்டுமேடு கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது.

    இதையொட்டி நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இருவீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இரவு 11 மணி வரை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணமகன் சதீஷ்குமார், மணமகளுடன் சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். பின்னர் சதீஷ்குமார் மணமகன் அறைக்கு சென்றுவிட்டார்.

    இந்த நிலையில் இன்று காலை திருமணத்திற்கு சடங்குகள் செய்வதற்காக மணமகன் அறைக்கு சென்று சதீஷ்குமாரை அழைத்து வர உறவினர்கள் சென்றனர்.

    ஆனால் சதீஷ்குமார் அங்கு இல்லை. அவருடன் இருந்த நண்பர்களும் மாயமாகி இருந்தனர். மணமகன் சதீஷ்குமார் ஓட்டம் பிடித்து இருப்பது தெரிந்தது.

    இதனால் மணப்பெண்ணும், திருமணத்துக்கு வாழ்த்த வந்த உறவினர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சதீஷ்குமாரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது.

    இதனால் புதுமண ஜோடியை வாழ்த்த வந்த உறவினர்கள் கவலையுடன் திரும்பினர். திருமணம் நின்று போனதால் திருமண மண்டபம் களை இழந்தது. மணமகளுக்கு ஆறுதல் கூற முடியாமல் உறவினர்கள் சோகம் அடைந்தனர். திருமண மண்டபத்தில் மணமகன் சதீஷ்குமாருக்கு சீதனமாக கொடுப்பதற்காக விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்தது.

    மணமகன் ஓட்டம் பிடித்து இருப்பது குறித்து திருப்போரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தாலி கட்டும் நேரத்தில் மணமகன் ஓட்டம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×