என் மலர்
நீங்கள் தேடியது "போலீஸ் வேலை"
- விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் ஆகஸ்டு மாதம் முதல் செப்டம்பர் 21-ந்தேதி வரையில் பெறப்பட்டது.
- தேர்வு மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.
சென்னை:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது.
இரண்டாம் நிலை காவலர்கள் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பதவிகள் இதில் அடங்கும்.
தமிழகம் முழுவதும் 45 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வை வாலிபர்கள் பலர் ஆர்வமுடன் எழுதினார்கள். இதற்கான கல்வி தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பட்டதாரி இளைஞர்களும் என்ஜினியர்களும் தேர்வுக்காக விண்ணப்பித்து இருந்தனர். தமிழை ஒரு மொழி பாடமாக எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
சென்னையில் 10 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றது. 9, 915 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்ட நிலையில் 9000 மேற்பட்டோர் இந்த தேர்வு எழுதினார்கள். இதையொட்டி தேர்வு மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.
இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் ஆகஸ்டு மாதம் முதல் செப்டம்பர் 21-ந்தேதி வரையில் பெறப்பட்டது.
எழுத்து தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களுக்கே உடல் தகுதி தேர்வு உள்ளிட்ட அடுத்தடுத்த தேர்வுகள் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 3 தேர்வு மையங்களில் 2 ஆயிரத்து 248 பேர் தேர்வு எழுதினர். தேர்வு மையங்களை குற்றப்பிரிவு காவல் துறை தலைவர் செல்விகுமாரி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஹரிக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கங்காதரன், தமிழரசு ஆகியோர் சென்று கண்காணித்தனர்.
ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் வடகாசிஅம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது32). இவர் கடந்த 2011-ம் ஆண்டு காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று பயிற்சிக்காக சென்னை சென்றார்.
ஆனால் பயிற்சி காலத்தில் இசக்கிமுத்து பாதியிலேயே வந்து விட்டார். இதையடுத்து அவரை காவல்துறை பணி நீக்கம் செய்தது.
இந்த நிலையில் கிடைத்த வேலையை விட்டு விட்டோமே என்ற ஏக்கத்தில் இருந்த இசக்கிமுத்துவிடம் உள்ளாறு கிராமத்தைச் சேர்ந்த கருத்தப்பாண்டி என்பவர் மீண்டும் போலீசில் வேலை வாங்கி தருவதாகவும் அதற்கு பணம் செலவாகும் என கூறி உள்ளார்.
இதனை நம்பிய இசக்கிமுத்து 2 தவணைகளில் ரூ.3 லட்சத்தை கருத்தப்பாண்டியனிடம் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட அவர் வேலை வாங்கி தரவில்லை பணத்தையும் திருப்பிதரவில்லை.
இதுகுறித்து கேட்டபோது தன்னை தரக்குறைவாக திட்டி மிரட்டியதாக இசக்கிமுத்து, தென்மண்டல காவல்துறை தலைவரிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின்பேரில் சேத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து கருத்தப்பாண்டியை தேடி வருகிறார். #tamilnews
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே உள்ள ஆதிவாசி கிராமத்தை சேர்ந்தவர் மது (வயது 32). மனநலம் பாதிக்கப்பட்ட இவரை திருடியதாக கூறி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 16 பேர் சேர்ந்து அடித்து கொலை செய்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சியினர் கொலை செய்யப்பட்ட ஆதிவாசி வாலிபரின் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இந்தநிலையில் பாலக்காடு மாவட்ட கலெக்டர் பட்டியலை தயார் செய்தார். அப்போது அதில் சந்திரிக்காவின் பெயர் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து கேரள அரசு சந்திரிகா உள்பட 74 பேருக்கு பணி நியமன ஆணை வழங்க உள்ளது.
சந்திரிக்காவுக்கு கேரள போலீசில் வேலை வழங்கப்பட உள்ளது. அவர் திருச்சூரில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில் பயிற்சி மேற்கொள்ள உள்ளார். #Tamilnews






