search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் டிஎஸ்பி"

    குரூப் 1 தேர்வுகள் எழுதி வெற்றி பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் முதல் முறையாக நேர்முக தேர்வில் கலந்து கொண்டு டிஎஸ்பியாக தேர்வு பெற்றுள்ளார்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை காமராஜர் வீதியை சேர்ந்தவர் ஆர்.வடிவேல் (வயது 37).இவரது தந்தை பெயர் ராமன், தாயின் பெயர் சிந்தாமணி இவரது சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள வளையகாரன் வலசு.

    இவர் பிஎஸ்ஸி (கணிதம்)எம்.ஏ.பிஎட். (வரலாறு) பட்ட படிப்பு முடித்து, அம்மா பேட்டை அருகே உள்ள மறவபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணி புரிந்து வருகிறார்.

    கடந்த 17.01.2002 முதல் இன்று வரை 17 வருடங்களாக அரசு பள்ளி ஆசிரியராக பணி புரிகிறார் இவர் ஐ.ஏ.எஸ். கனவுடன் இரண்டு முறை சிவில் சர்வீஸ் தேர்வுகளும் எழுதியுள்ளார்.

    கடந்த 2013 முதல் 3 முறை குரூப் 1 தேர்வுகள் எழுதப்பெற்று முதல் முறையாக நேர்முக தேர்வில் கலந்து கொண்டு டிஎஸ்பியாக தேர்வு பெற்றுள்ளார். இவருடைய மனைவியின் பெயர் பிளாரன்ஸ் இவரும் அரசு பள்ளி ஆசிரியையாக பணி புரிகிறார். இவருக்கு அறிவமுது (11) என்ற மகளும் அமுதப் பிரியன் ( 9) என்ற மகனும் உள்ளனர்.

    டி.எஸ்.பி.யாக தேர்வு பெற்ற இவரை சக ஆசிரியர்களும் அப்பகுதி பொதுமக்களும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். #tamilnews

    கோயம்பேடு பஸ்நிலையத்தில் கழிவறையில் மயங்கி விழுந்த கடலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் பணிபுரியும் போலீஸ் டி.எஸ்.பி. உயிரிழந்தார்.
    சென்னை:

    கடலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்தவர் ஆனந்த பிரகாசம். இவரது குடும்பத்தினர் சென்னை புரசைவாக்கத்தில் வசித்து வருகிறார்கள்.

    பணி முடிந்து ஆனந்த பிரகாசம் சென்னை திரும்பி வருவது வழக்கம். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் அரசு பஸ்சில் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்தார்.

    பின்னர் அங்குள்ள பொது கழிவறைக்கு சென்றார். அங்கு திடீரென ஆனந்த பிரகாசம் மயங்கி விழுந்தார்.

    இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் பஸ் நிலைய போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஆனந்த பிரகாசத்தை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருந்த ஆனந்த பிரகாசம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    ×