search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொறுப்பாளர்"

    • தாராபுரம் லயன்ஸ் திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
    • நகர பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட சி.ராஜேந்திரனுக்கு பொன்னாடை அணிவித்து சி.மகேந்திரன் வாழ்த்து தெரிவித்தார்.

    தாராபுரம் :

    தாராபுரம் நகர அ.தி.மு.க. செயலாளராக டி.டி.காமராஜ் கடந்த 40 ஆண்டு காலமாக பதவி வகித்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக அவர் சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு சென்றார். இதனால் அ.தி.மு.க. தாராபுரம் நகர செயலாளர் பதவி காலியாக இருந்தது. இந்த நிலையில் தாராபுரம் லயன்ஸ் திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

    கூட்டத்திற்கு திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் சி.மகேந்திரன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். கூட்டத்தில் தாராபுரம் நகர இளைஞரணி பொறுப்பில் செயல்பட்டு வந்த சி.ராஜேந்திரன் கூட்டத்தில் ஏக மனதாக தாராபுரம் அ.தி.மு.க. நகர (செயலாளர்) பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டார். நகர பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட சி.ராஜேந்திரனுக்கு பொன்னாடை அணிவித்து சி.மகேந்திரன் வாழ்த்து தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சத்தியபாமா, முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுசாமி, மாவட்ட அவைத் தலைவர் ராஜ், மாவட்ட பொருளாளர் சின்னப்பன் என்–கின்ற பழனிசாமி, மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் கவுரிசித்ரா முருகேசன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் பங்க் மகேஷ் குமார், அம்மா பேரவை செயலாளர் கே.என். ராமசாமி, தாராபுரம் ஒன்றிய செயலாளர்கள் ஜி.ஆர். பாலகுமாரன் (மேற்கு) , பி.ரமேஷ் (தெற்கு) செல்வகுமார் (கிழக்கு), நகர பொருளாளர் சாமுவேல், மாவட்ட இளைஞரணி கே.சி.மணி, நகர இளைஞரணி துணை செயலாளர் தினேஷ், 8-வது வார்டு கிளைச் செயலாளர் கணேசன், கே.ஆர்.சதீஷ்குமார், செல்வி, ராஜேஸ்வரி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    • தி.மு.க. சாா்பில் திராவிட மாடல் பயிற்சிக் கூட்டம் நடந்தது.
    • அடித்தட்டு மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, தனி உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்பட்டு வருகிறாா்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. சாா்பில் திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டம் பட்டினம் காத்தான் தனியார் மகாலில் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதா்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் நடந்தது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் இன்பாரகு முன்னிலை வகித்தாா்.

    சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி., செய்தி தொடர்பு துணை செயலாளர் ராஜீவ் காந்தி கலந்து கொண்டனர்.

    திருச்சி சிவா எம்.பி. பேசுகையில், தமிழகத்தில் அடித்தள மக்களின் முன்னேற்றத்துக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் திராவிடர் கழகம். அதன் பரிணாம வளா்ச்சியால் உருவானதே தி.மு.க.. அது அனைத்துத் தரப்பினரின் நலனையும், உரிமையையும் காக்கும் இயக்கமாக செயல்பட்டு வருகிறது. அடித்தட்டு மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, தனி உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்பட்டு வருகிறாா்.

    திராவிட கொள்கைகளை இளம் தலைமுறையினா் அறிந்து கொள்வது அவசியம். அப்போது தான் நமது உரிமையை நிலை நாட்ட முடியும் என்றாா்.

    பரமக்குடி சட்டமன்ற உறுப்பினா் முருகேசன், முன்னாள் அமைச்சா்கள் சுந்தரராஜன், சத்தியமூா்த்தி, இலக்கிய அணி துணைத் தலைவா் பெருநாழி போஸ், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், துணைத் தலைவர் பிரவீன் தங்கம், கீழக்கரை நகர்மன்ற துணைத் தலைவர் ஹமீது சுல்தான், மாணவரணி அமைப்பாளர் இப்திகார் அஹமது, கீழக்கரை நகர் செயலாளர் பஷீர் அகமது உள்பட பலர் கலந்து கொண்டனா்.

    • காளீஸ்வரி கல்லூரியில் வளாகத் தேர்வு நடந்தது.
    • பணிஅமர்வு மையப் பொறுப்பாளர் லட்சுமணக்குமார் வரவேற்றார்.

    சிவகாசி

    சிவகாசி, காளீஸ்வரி கல்லூரிப் பணி அமர்வு மையத்தின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான வளாகத் தேர்வு நடந்தது.

    பணிஅமர்வு மையப் பொறுப்பாளர் லட்சுமணக்குமார் வரவேற்றார். முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், உலக அளவில் எண்ணற்ற வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. நமக்கான வாய்ப்புகள் உருவாகும்போது அதைத் தவறவிடாமல் நன்கு பயன்படுத்திக் கொள்ளும் வேண்டும் என்றார்.

    துணை முதல்வர் பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினார். சென்னையைச் சேர்ந்த தனியார் உணவு நிறுவனம் நடத்திய வளாகத் தேர்வில் அனைத்துத் துறைகளைச் சேர்ந்த 80 மாணவர்கள் பங்கேற்றனர். நிறுவன மேலாளர் பொன்மொழியன், நிறுவனத்தின் நோக்கம்- அறிமுகம், பணியின் தன்மை குறித்து எடுத்துரைத்தார்.

    பின் நிறுவனத்திற்குத் தேவையான பணியாளர்களைஎழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்தார். பணி அமர்வு மையப் பொறுப்பாளர் லட்சுமணக்குமார் இதற்கான ஏற்பாடை செய்திருந்தார். மேலும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்த பணி அமர்வு மைய ஒருங்கிணைப்பாளர்களின் ஒத்துைைழப்புடன் வளாகத் தேர்வு நடந்தது. மாரீஸ்வரன் நன்றி கூறினார்.

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் கணினி அறிவியல், கணினிப் பயன்பாட்டியல் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் ஆகிய துறைகளின் ஆராய்ச்சி மன்றம் சார்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.

    இதில் கணினி அறிவியல் துறையின் துறைத் தலைவரும், உதவிப் பேராசிரியருமான பிரியா தனது ஆய்வு கட்டுரையான "மல்டி கோரை பயன்படுத்தி திறமையான இணையான நீள்வட்ட வளைவு குறியாக்கவியல்" பற்றிய தகவல்களை கூறினார்.

    அவர், பல மைய அமைப்பு,நீள்வட்ட வளைவு குறியாக்கவியல், இணையான மற்றும் திறமையான அல்காரிதத்தை அபைன் பாயிண்ட் உருவாக்கத்திற்காக நீள்வட்ட வளைவு குறியாக்கவியல் பயன்பாடு ஆகிய தலைப்புகளில் பேசினார்.

    இதில் கணினி அறிவியல், கணினிப் பயன்பாட்டியல் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறைகளைச் சேர்ந்த அனைத்து உதவிப் பேராசிரியர்களும் கலந்து கொண்டு கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியை முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் ரேவதீஸ்வரி வரவேற்றார். கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் சவும்யா நன்றி கூறினார்.

    ×