search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெங்களூரு மத்திய தொகுதி"

    பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் பிரகாஷ் ராஜ் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பின்னடைவில் உள்ளார்.
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் உள்ள மொத்தம் 28 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 18 மற்றும் 23-ந்தேதி ஆகிய 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

    இதில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டியிட்டார். இதனால் அவர் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டது. தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டார்.

    வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது முதலே பிரகாஷ் ராஜூக்கு பின்னடைவு ஏற்பட்டது. அவர் தோல்வி முகத்தில் உள்ளார்.

    பாரதிய ஜனதா வேட்பாளர் பி.சி.மோகன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
    பெங்களூரு மத்திய தொகுதியில் நான் வெற்றி பெற்றால் எந்த ஒரு கட்சியிலும் சேர மாட்டேன், சுயேட்சையாகவே நீடிப்பேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறினார். #LokSabhaElections2019 #PrakashRaj
    பெங்களூர்:

    நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த ஆண்டு முதல் பா.ஜனதாவையும், பிரதமர் மோடியையும் மிக கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    இதனால் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் அவரை கண்டுகொள்ளவில்லை.

    இதையடுத்து நடிகர் பிரகாஷ்ராஜ் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்தார். அதன்படி பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கி உள்ளார்.

    அவருக்கு தேர்தல் சின்னமாக விசில் சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை வைத்துக்கொண்டு தினமும் பிரசாரம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று பெங்களூரில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பெங்களூர் மத்திய தொகுதியில் நான் வெற்றி பெற்றால் சிறந்த மக்கள் பிரதிநிதியாக செயல்படுவேன். தொடர்ந்து மக்களுக்காக பணியாற்றுவேன்.

    நான் எம்.பி.யாக தேர்வு ஆகிவிட்டால் ஏதோ ஒரு கட்சியில் போய் சேர்ந்து விடுவேன் என்று சொல்கிறார்கள். அதில் உண்மையில்லை. நான் இந்த தொகுதியில் வெற்றி பெற்றால் எந்த ஒரு கட்சியிலும் போய் சேர மாட்டேன். சுயேட்சையாகவே நீடிப்பேன்.

    நான் வெற்றி பெற்றால் பெங்களூர் மத்திய பகுதியில் உள்ள மக்களுக்கு என்னென்ன தேவையோ அனைத்தையும் செய்து தருவேன். எனது மக்கள் பணி வெளிப்படையாகவே இருக்கும்.

    ஒருவேளை தோல்வி அடைந்தால் மக்கள் பிரதிநிதிக்குரிய பணியை செய்வேன்.

    இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறினார். #LokSabhaElections2019 #PrakashRaj

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள நடிகர் பிரகாஷ்ராஜுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். #ParliamentElection #Bengaluru #PrakashRaj #KamalHaasan
    சென்னை:

    நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த ஆண்டில் இருந்து அரசியல் பேசி வருகிறார். குறிப்பாக, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவை எதிர்த்து அடிக்கடி அவர் கருத்து வெளியிடுகிறார். தனது நெருங்கிய தோழியான கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் அவர் பாஜக அரசை மிக கடுமையாக சாடினார்.

    இதையடுத்து பிரகாஷ்ராஜை தங்களது கட்சியில் சேர்த்துக்கொள்ள காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளும் முயற்சிகள் செய்தன. ஆனால் பிரகாஷ்ராஜ் எந்த கட்சியிலும் சேரவில்லை.

    இதற்கிடையே நடிகர் பிரகாஷ்ராஜ், பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக கடந்த ஒன்றாம் தேதி அறிவித்தார். அதன்படி, வரும் மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிட போவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் நேற்று அறிவித்தார்.



    இந்நிலையில் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பிரகாஷ்ராஜை அரசியலுக்கு வரவேற்றுள்ளார். 
     
    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், எனது நண்பர் பிரகாஷ்ராஜின் அரசியல் பயணத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பேச்சை செயலாக்கி காட்டியதற்கு நன்றி என பதிவிட்டுள்ளார். #ParliamentElection #Bengaluru #PrakashRaj #KamalHaasan
    வரவுள்ள மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிட உள்ளதாக நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று அறிவித்துள்ளார். #ParliamentElection #PrakashRaj #BengaluruCentral
    பெங்களூரு:

    நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த ஆண்டில் இருந்து அரசியல் பேசி வருகிறார். குறிப்பாக, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவை எதிர்த்து அடிக்கடி அவர் கருத்து வெளியிடுகிறார். தனது நெருங்கிய தோழியான கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் அவர் பாஜக அரசை மிக கடுமையாக சாடினார்.

    இதையடுத்து பிரகாஷ்ராஜை தங்களது கட்சியில் சேர்த்துக்கொள்ள காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளும் முயற்சிகள் செய்தன. ஆனால் பிரகாஷ்ராஜ் எந்த கட்சியிலும் சேரவில்லை.

    கமல்ஹாசன், ரஜினிகாந்த் போல அவர் கட்சி தொடங்குவாரா? என்றும் கேட்கப்பட்டது. ஆனால் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று அவர் ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.



    இதற்கிடையே நடிகர் பிரகாஷ்ராஜ் வரும் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாகவும், விரைவில் தொகுதி பற்றி அறிவிப்பேன் எனவும் கடந்த ஒன்றாம் தேதி அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், வரும் மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிட போவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறேன். எனது புதிய பயணத்தை அங்கீகரித்த அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.
    #ParliamentElection #PrakashRaj #BengaluruCentral
    ×