search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நான் வெற்றி பெற்றால் எந்த கட்சியிலும் சேர மாட்டேன் - பிரகாஷ்ராஜ்
    X

    நான் வெற்றி பெற்றால் எந்த கட்சியிலும் சேர மாட்டேன் - பிரகாஷ்ராஜ்

    பெங்களூரு மத்திய தொகுதியில் நான் வெற்றி பெற்றால் எந்த ஒரு கட்சியிலும் சேர மாட்டேன், சுயேட்சையாகவே நீடிப்பேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறினார். #LokSabhaElections2019 #PrakashRaj
    பெங்களூர்:

    நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த ஆண்டு முதல் பா.ஜனதாவையும், பிரதமர் மோடியையும் மிக கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    இதனால் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் அவரை கண்டுகொள்ளவில்லை.

    இதையடுத்து நடிகர் பிரகாஷ்ராஜ் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்தார். அதன்படி பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கி உள்ளார்.

    அவருக்கு தேர்தல் சின்னமாக விசில் சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை வைத்துக்கொண்டு தினமும் பிரசாரம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று பெங்களூரில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பெங்களூர் மத்திய தொகுதியில் நான் வெற்றி பெற்றால் சிறந்த மக்கள் பிரதிநிதியாக செயல்படுவேன். தொடர்ந்து மக்களுக்காக பணியாற்றுவேன்.

    நான் எம்.பி.யாக தேர்வு ஆகிவிட்டால் ஏதோ ஒரு கட்சியில் போய் சேர்ந்து விடுவேன் என்று சொல்கிறார்கள். அதில் உண்மையில்லை. நான் இந்த தொகுதியில் வெற்றி பெற்றால் எந்த ஒரு கட்சியிலும் போய் சேர மாட்டேன். சுயேட்சையாகவே நீடிப்பேன்.

    நான் வெற்றி பெற்றால் பெங்களூர் மத்திய பகுதியில் உள்ள மக்களுக்கு என்னென்ன தேவையோ அனைத்தையும் செய்து தருவேன். எனது மக்கள் பணி வெளிப்படையாகவே இருக்கும்.

    ஒருவேளை தோல்வி அடைந்தால் மக்கள் பிரதிநிதிக்குரிய பணியை செய்வேன்.

    இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறினார். #LokSabhaElections2019 #PrakashRaj

    Next Story
    ×