என் மலர்

  செய்திகள்

  பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரகாஷ்ராஜுக்கு கமல்ஹாசன் வாழ்த்து
  X

  பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரகாஷ்ராஜுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள நடிகர் பிரகாஷ்ராஜுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். #ParliamentElection #Bengaluru #PrakashRaj #KamalHaasan
  சென்னை:

  நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த ஆண்டில் இருந்து அரசியல் பேசி வருகிறார். குறிப்பாக, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவை எதிர்த்து அடிக்கடி அவர் கருத்து வெளியிடுகிறார். தனது நெருங்கிய தோழியான கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் அவர் பாஜக அரசை மிக கடுமையாக சாடினார்.

  இதையடுத்து பிரகாஷ்ராஜை தங்களது கட்சியில் சேர்த்துக்கொள்ள காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளும் முயற்சிகள் செய்தன. ஆனால் பிரகாஷ்ராஜ் எந்த கட்சியிலும் சேரவில்லை.

  இதற்கிடையே நடிகர் பிரகாஷ்ராஜ், பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக கடந்த ஒன்றாம் தேதி அறிவித்தார். அதன்படி, வரும் மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிட போவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் நேற்று அறிவித்தார்.  இந்நிலையில் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பிரகாஷ்ராஜை அரசியலுக்கு வரவேற்றுள்ளார். 
   
  இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், எனது நண்பர் பிரகாஷ்ராஜின் அரசியல் பயணத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பேச்சை செயலாக்கி காட்டியதற்கு நன்றி என பதிவிட்டுள்ளார். #ParliamentElection #Bengaluru #PrakashRaj #KamalHaasan
  Next Story
  ×