search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூந்தமல்லி தொகுதி"

    திருவள்ளூர் எம்.பி. தொகுதி மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.

    திருநின்றவூர்:

    தமிழகத்தில் ஏப்ரல் 18-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது.

    அப்போது திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்டதும், பூந்தமல்லி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு உட்பட்டதும் ஆன திருநின்றவூர் அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் (எண் 195) வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டது.

    அப்போது மொத்தம் 858 ஓட்டுகள் பதிவானதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால் இறுதியில் வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகளை சரிபார்த்த போது திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதிக்கு 27 வாக்குகளும், பூந்தமல்லி எம்.எல்.ஏ. தொகுதிக்கு 37 வாக்குகளும் கூடுதலாக பதிவாகி இருந்தன.

    இதையடுத்து மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி எண் 195-ல் மறுவாக்குப்பதிவு இன்று (19-ந் தேதி) நடைபெறும் என்று தேர்தல் கமி‌ஷன் அறிவித்தது.


    அதன்படி மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.

    வாக்குப்பதிவு நேரம் தொடங்கியது முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் காலையிலே ஏராளமானோர் வாக்களித்தனர்.

    அவர்களுக்கு திருவள்ளூர் பாராளுமன்றதொகுதி, பூந்தமல்லி சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்ததால் 2 ஓட்டு போட்டனர். அவர்களது இடது கை நடுவிரலில் மை வைக்கப்பட்டது.

    இந்த வாக்குச்சாவடியில் மொத்தம் 513 ஆண் வாக்காளர்களும், 536 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 1049 பேர் உள்ளனர்.

    மறுவாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி வாக்குச்சாவடியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பூந்தமல்லி தொகுதி அதிமுக வேட்பாளர் க.வைதியநாதன் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். #LokSabhaElections2019

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி தொகுதி அதிமுக வேட்பாளர் க.வைதியநாதன் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது அவர், பூந்தமல்லி பெரிய ஏரி சீரமைக்கப்பட்டு சுற்று சூழல் பூங்கா அமைக்கப்படும் என்றார். அவருடன் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி, அமைச்சர் க பாண்டியராஜன், இரா.மணிமாறன்,ஜி.திருநாவுக்கரசு, சி.ஒய்.ஜாவித்அகமத், கே.எஸ்.ரவிசந்திரன், பூவை.எம்.ஞானம்,டி.தேவேந்திரன், கே.ஹரிகுமார், சி.சார்லஸ், அந்தமான் முருகன், பூவை.எஸ்.கோபிநாத், பூவை.எச்.சாபி, சல்மான் ஜாவித் உள்பட நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்று வாக்குசேகரித்தனர். #LokSabhaElections2019

    ×