search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூச்சந்தை"

    • பூக்களை வாங்க ஆள் இல்லாததால் வியாபாரிகள் கவலை
    • பெங்களூர், ஓசூர் உள்ளிட்ட சில பகுதிகளில் இருந்து பூக்கள் நேரடியாக கேரளாவுக்கு செல்கிறது

    ஆரல்வாய்மொழி :

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாள மொழி பேசும் மக்கள் எல்லாம் மாவேலி மன்னனை வரவேற்க வீட்டின் முன் அத்தப்பூ கோலமிட்டு ஓன சத்தியா விருந்து வைத்து வழிபாடு செய்வது வழக்கம். வருகிற 29-ந் தேதி ஓணம் கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகை துவங்கிய நாள் முதல் தோவாளை பூச்சந்தைக்கு குவியும் கேரளா மக்களால் வியாபாரம் படுஜோராக நடக்கும்.

    இந்த ஆண்டு தலைகீழ் ஓணம் துவங்கிய மூன்றா வது நாள் ஆனால் வியாபாரம் இல்லை. ஒரு கிலோ மல்லிகைப்பூ 300 ரூபாய்க்கும், ஒரு தாமரை 12 ரூபாய்க்கும், பிச்சிப்பூ 500, சேலத்துஅரளி 170, தோவாளை அரளி 140, கொழுந்து 80, மஞ்சள் கேந்தி 50, சிவப்பு கேந்தி 60 மரிக்கொழுந்து 120, என பல பூக்களும் விலை குறைந்து காணப்படுகிறது.

    தோவாளை பூச்சந்தைக்கு வெயிலின் காரணமாக பூக்கள் அதிக அளவில் வந்துள்ளது. ஆனால் கேரளா மக்கள் வருகையில்லாததால் பூக்கள் விலை குறைந்து வாங்க ஆளில்லை. இதனால் வியாபாரிகள் சோகம் அடைந்துள்ளனர்.

    மேலும் கேரளாவில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தேர்வு நடைபெறுவதாலும், மக்களிடையே ஓணம் கொண்டாடுவதில் ஆர்வம் குறைவதாலும், அதைவிட முக்கியம் பெங்களூர், ஓசூர் உள்ளிட்ட சில பகுதிகளில் இருந்து பூக்கள் நேரடியாக கேரளாவுக்கு செல்வதாலும், தோவாளை பூச்சந்தையில் வியாபாரம் குறைந்து வெறிச்சோடி இருப்பதாக கூறப்படுகிறது.

    • தோவாளை பூச்சந்தைக்கு வந்து மாவட்டம் மற்றும், மாநிலம் முழுவதும் விற்பனை
    • மழை இல்லாத காரணத்தால் அடிக்கிற வெயிலுக்கு மல்லிகை பூ அதிகளவு பூக்கும்

    கன்னியாகுமரி :

    தோவாளையில் புகழ் பெற்ற பூ சந்தை உள்ளது.

    இங்கு ஆரல்வாய் மொழி, புதியம்புத்தூர், காவல் கிணறு, ராதாபுரம், பழவூர், மாடநாடார் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் இருந்து பிச்சிப்பூவும், கோவில்பட்டி, சங்கரன்கோவில், ராஜ பாளையம், மதுரை, மானாமதுரை, கொடை ரோடு, திண்டுக்கல் ஆகிய ஊர்களில் இருந்து மல்லிகை பூவும் வருகிறது.

    பெங்களூர், ஓசூர் ஆகிய பகுதியிலிருந்து மஞ்சள் கிரோந்தி பட்ட ரோஷும், சேலத்தில் இருந்து அரளி பூவும், திருக்கனங்குடி, தென் காசி, அம்பாசமுத்திரம், புளியங்குடி ஆகிய பகுதியிலிருந்து துளசியும், மரிக்கொழுந்தும், தோவாளை, மருங்கூர், செண்பகராமன்புதூர், தோப்பூர் ஆகிய ஊர்களில் இருந்து கோழி கொண்டையும், சம்பங்கி, அரளி உள்பட பல பூக்கள் தோவாளை பூச்சந்தைக்கு வந்து மாவட்டம் மற்றும், மாநிலம் முழுவதும் விற்பனையாகி வருகிறது.

    கடந்த சில நாட்களாக அளவுக்கு அதிகமாக பூச்சந்தைக்கு மல்லிகைப்பூ வருவது கூடி உள்ளது. மேலும் தற்போது அதிக அளவு மல்லிகை பூவுக்கு கிராக்கி இல்லை. இதனால் ஒரு கிலோ மல்லிகை பூ 400க்கு விற்பனை ஆகி வருகிறது .

    இதுபோல பிச்சிப்பூ ரூ.900, சம்பங்கி ரூ.70, மஞ்சள் கிரோந்தி ரூ.110, சிவப்பு கிரேந்தி ரூ.120, பட்டர் ரோஸ் ரூ.140, ரோஜா ரூ.20, தாமரை ரூ.6, அரளி ரூ.150, சேலத்து அரளி ரூ.120, கோழிப்பூ ரூ.100, கொழுந்து ரூ.70 விற்பனையாகி வருகிறது.

    மேலும் வியாபாரிகள் கூறும்போது மழை இல்லாத காரணத்தால் அடிக்கிற வெயிலுக்கு மல்லிகை பூ அதிகளவு பூக்கும். இதனால் வரத்து கூடுதல் எனவே மல்லிகை பூவுக்கு விலை இல்லை என்று கூறினார்.

    • சிவராத்திரியை முன்னிட்டு கோவில்களில் அர்ச்சனை செய்ய, வழிபாடு நடத்த பூக்களின் தேவை அதிகரித்தது.
    • பூக்களின் விலையும் நேற்றையை விட அதிகமாகும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் விளார் ரோடு சைலஜா மண்டபத்தில் பூச்சந்தை இயங்கி வருகிறது.

    இந்த சந்தைக்கு திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். இதேபோல் இங்கிருந்தும் வெளியூர்களுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படும்.

    பண்டிகை, திருவிழாக் காலங்கள்,

    சுப முகூர்த்த நாட்களில் பூக்கள் விலை கணிசமாக உயரும். அதன்படி இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது. சிவராத்திரியை முன்னிட்டு கோவில்களில் அர்ச்சனை செய்ய, வழிபாடு நடத்த பூக்களின் தேவை அதிகரித்தது.

    இதன் காரணமாக தஞ்சை பூச்சந்தையில் இன்று பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று 1 கிலோ ரூ.900-க்கு விற்கப்பட்ட முல்லைப் பூ இன்று கிடு கிடுவென உயர்ந்து ரூ.1500-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    நேற்று ரூ.800-க்கு விற்பனையான மல்லிகைப்பூ இன்று ரூ.1000-க்கு விற்கப்பட்டது. இதேபோல் கனகாம்பரம் கிலோ ரூ.1000, ஆப்பிள் ரோஸ் ரூ.200, சம்பங்கி ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்த பூக்களின் விலையும் நேற்றையை விட அதிகமாகும்.

    இது குறித்து வியாபாரிகள் கூறும்போது:-

    சிவராத்திரி என்பதால் இன்று பூக்களின் தேவை அதிகமானது. இதன் காரணமாகவும் தற்போது பனிப்பொழிவால் பூக்களின் விளைச்சல் குறைந்து காணப்படுகிறது.

    இந்த காரணங்களால் பூக்களின் தேவை அதிகரித்தது. இருந்தாலும் பொதுமக்கள் அதிகளவில் பூக்கள் வாங்கி செல்கின்றனர் என்றனர்.

    ×