search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தோவாளையில் ஒரு கிலோ மல்லிகை பூ - ரூ.400-க்கு விற்பனை
    X

    தோவாளையில் ஒரு கிலோ மல்லிகை பூ - ரூ.400-க்கு விற்பனை

    • தோவாளை பூச்சந்தைக்கு வந்து மாவட்டம் மற்றும், மாநிலம் முழுவதும் விற்பனை
    • மழை இல்லாத காரணத்தால் அடிக்கிற வெயிலுக்கு மல்லிகை பூ அதிகளவு பூக்கும்

    கன்னியாகுமரி :

    தோவாளையில் புகழ் பெற்ற பூ சந்தை உள்ளது.

    இங்கு ஆரல்வாய் மொழி, புதியம்புத்தூர், காவல் கிணறு, ராதாபுரம், பழவூர், மாடநாடார் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் இருந்து பிச்சிப்பூவும், கோவில்பட்டி, சங்கரன்கோவில், ராஜ பாளையம், மதுரை, மானாமதுரை, கொடை ரோடு, திண்டுக்கல் ஆகிய ஊர்களில் இருந்து மல்லிகை பூவும் வருகிறது.

    பெங்களூர், ஓசூர் ஆகிய பகுதியிலிருந்து மஞ்சள் கிரோந்தி பட்ட ரோஷும், சேலத்தில் இருந்து அரளி பூவும், திருக்கனங்குடி, தென் காசி, அம்பாசமுத்திரம், புளியங்குடி ஆகிய பகுதியிலிருந்து துளசியும், மரிக்கொழுந்தும், தோவாளை, மருங்கூர், செண்பகராமன்புதூர், தோப்பூர் ஆகிய ஊர்களில் இருந்து கோழி கொண்டையும், சம்பங்கி, அரளி உள்பட பல பூக்கள் தோவாளை பூச்சந்தைக்கு வந்து மாவட்டம் மற்றும், மாநிலம் முழுவதும் விற்பனையாகி வருகிறது.

    கடந்த சில நாட்களாக அளவுக்கு அதிகமாக பூச்சந்தைக்கு மல்லிகைப்பூ வருவது கூடி உள்ளது. மேலும் தற்போது அதிக அளவு மல்லிகை பூவுக்கு கிராக்கி இல்லை. இதனால் ஒரு கிலோ மல்லிகை பூ 400க்கு விற்பனை ஆகி வருகிறது .

    இதுபோல பிச்சிப்பூ ரூ.900, சம்பங்கி ரூ.70, மஞ்சள் கிரோந்தி ரூ.110, சிவப்பு கிரேந்தி ரூ.120, பட்டர் ரோஸ் ரூ.140, ரோஜா ரூ.20, தாமரை ரூ.6, அரளி ரூ.150, சேலத்து அரளி ரூ.120, கோழிப்பூ ரூ.100, கொழுந்து ரூ.70 விற்பனையாகி வருகிறது.

    மேலும் வியாபாரிகள் கூறும்போது மழை இல்லாத காரணத்தால் அடிக்கிற வெயிலுக்கு மல்லிகை பூ அதிகளவு பூக்கும். இதனால் வரத்து கூடுதல் எனவே மல்லிகை பூவுக்கு விலை இல்லை என்று கூறினார்.

    Next Story
    ×