search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புயல் பாதிப்பு மாவட்டங்கள்"

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. #GajaCyclone
    சென்னை:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முடிவடையவில்லை. எனவே, புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    நாகை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு டிச.26 வரையும், தஞ்சை மாவட்டத்திற்கு டிச.31 வரையும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.



    திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருவாரூர் கோட்டங்களில் டிச.26 வரை மின்கட்டணம் செலுத்தலாம். தஞ்சை மாவட்டத்தில் புதுக்கோட்டை, ஒரத்தநாடு கோட்டங்களில் டிச.31வரை மின்கட்டணம் செலுத்தலாம்.

    நாகையில் 14 பிரிவுகளில் உள்ள நுகர்வோர் டிச.26 வரை அபராதமின்றி மின்கட்டணம் செலுத்தலாம். திருவாரூர் கோட்டங்களிலும், புதுக்கோட்டையின் அனைத்து கோட்டங்களிலும் டிச.26 வரை மின்கட்டணம் செலுத்தலாம்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் நலன் கருதி 3வது முறையாக அவகாசத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் நீட்டித்துள்ளது.

    தாழ்வழுத்த மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு மட்டும் அவகாசம் பொருந்தும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. #GajaCyclone
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் டிசம்பர் 15-ம் தேதிவரை ஸ்கேன் எடுக்க கட்டணம் வசூலிக்க கூடாது என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. #GajaCyclone #Gajaaffecteddistricts #Scanchargeswaived
    சென்னை:

    கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் வீடு இடிந்து விழுந்தும், மரம் சாய்ந்தும் காயமடைந்துள்ளனர். இவர்களில் மிக சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதற்காக சிகிச்சைக்கு செல்பவர்களிடம் ஸ்கேன் எடுப்பதற்கு அரசு மருத்துவமனைகள் கட்டணம் வசூலிப்பதாகவும் சமீபத்தில் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.



    அடுத்தவேளை சோற்றுக்கு வழியறியாமல் நிர்கதியாக தவிக்கும் மக்களிடம் தயவு, தாட்சண்யம் காட்டாத அரசுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கண்டனக் குரல்கள் பரவ தொடங்கின.

    இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுக்க வரும் நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது என தமிழக சுகாதாரத்துறை இன்று உத்தரவிட்டுள்ளது. #GajaCyclone #Gajaaffecteddistricts  #Scanchargeswaived
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் கட்டணம் அபராதம் இன்றி 30-ந்தேதி வரை செலுத்தலாம் என்று மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார். #GajaCyclone
    சென்னை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, சிவகங்கை மாவட்டங்கள் கஜா புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

    இதனால் மேற்கண்ட மாவட்டங்களில் இந்த மாதம் 15-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை மின் கட்டணம் செலுத்த வேண்டிய பொது மக்கள் அபராதம் இன்றி கட்டணத்தை செலுத்த 30-ந் தேதி வரை செலுத்தலாம் என்று அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #GajaCyclone
    ×