search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரக்யா சிங் தாக்குர்"

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வேட்பாளரான பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்குர், சமாஜ்வாடி வேட்பாளராக அசம்கான் உள்ளிட்ட சர்ச்சை வேட்பாளர்கள் பலர் வெற்றி பெற்றுள்ளனர்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் சர்ச்சைக்குரிய வேட்பாளர்களாக திகழ்ந்த பலர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில், பா.ஜனதா வேட்பாளரான பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்குர், போபால் தொகுதியில் 3 லட்சத்து 64 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங்கை தோற்கடித்தார்.



    பிரக்யா சிங், பிரசாரத்தின்போது, கோட்சேவை தேசபக்தர் என்று கூறி சர்ச்சையை கிளப்பினார். மும்பை தாக்குதலில் உயிரிழந்த போலீஸ் அதிகாரி ஹேமந்த் கார்கரேயின் மரணத்துக்கு தனது சாபமே காரணம் என்றும் கூறினார். இத்தகைய பேச்சுகளால், பிரசாரத்துக்கு தடை விதிக்கப்பட்டார்.

    உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதி சமாஜ்வாடி வேட்பாளராக போட்டியிட்ட அசம்கான், தனது எதிரணி வேட்பாளரான நடிகை ஜெயபிரதா குறித்து ஆபாசமாக பேசி சர்ச்சையை உண்டாக்கினார். அவர் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    பீகார் மாநிலம் பெகுசாரையில் மத்திய மந்திரி கிரிராஜ்சிங் 4 லட்சத்து 22 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கர்நாடக மாநிலம் தட்சணகன்னடா தொகுதி பா.ஜனதா வேட்பாளர் நளின் குமார் கதீல், உத்தரகன்னடா தொகுதி பா.ஜனதா வேட்பாளர் மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே, பெங்களூரு தெற்கு தொகுதி பா.ஜனதா வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.
    மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே தேசபக்தர் என்ற சர்ச்சை கருத்தை தெரிவித்த பிரக்யாசிங்கிற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
    மத்திய பிரதேச மாநிலம் போபால் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கை எதிர்த்து போட்டியிடும் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளருமான பிரக்யா சிங் தாக்குர் டெலிவிஷன் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவரிடம் நாதுராம் கோட்சேயை இந்து தீவிரவாதி என கமல்ஹாசன் கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், “நாதுராம் கோட்சே தேச பக்தராக இருந்தார்; இருக்கிறார்; அப்படியே தொடர்ந்து இருப்பார்” என பதில் அளித்தார். அதுமட்டுமின்றி, “நாதுராம் கோட்சேயை இந்து தீவிரவாதி என்று சொல்கிறவர்கள், தங்களை பார்க்கட்டும். அவர்களுக்கு இந்த தேர்தலில் சரியான பதிலடி கிடைக்கும்” என குறிப்பிட்டார்.

    மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேயை பிரக்யா சிங் தாக்குர் தேசபக்தர் என்று சான்று அளித்திருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் பிரக்யா சிங் தாக்குர் கருத்தை பாரதீய ஜனதா கட்சி ஏற்கவில்லை. கட்சியின் தலைமையில் இருந்து நெருக்கடி ஏற்பட்டதால் தனது கருத்துக்காக பிரக்யா சிங் மன்னிப்பு கோரினார். 

    இந்நிலையில் பிரதமர் மோடியும் பிரக்யா சிங்கிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். “மகாத்மா காந்தியை அவமதிப்பு செய்த பிரக்யா சிங்கை மன்னிக்க முடியாது,” எனக் கூறியுள்ளார் பிரதமர் மோடி.
    ×