search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பி எஸ் மித்ரன்"

    • ’இரும்பு திரை’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பி.எஸ்.மித்ரன்.
    • இவர் இயக்கிய ‘சர்தார்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.

    2018-ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான 'இரும்பு திரை' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பி.எஸ்.மித்ரன். தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான 'ஹீரோ' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதன்பின்னர், சமீபத்தில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான 'சர்தார்' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.


    பி.எஸ்.மித்ரன்

    இப்படத்தில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்திருந்தார். மேலும், ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.


    பி.எஸ்.மித்ரன் - ஆஷாமீரா ஐயப்பன்

    இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ்.லக்ஷ்மன்குமார் டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் ஒன்றை பரிசளித்தார். இதைத்தொடர்ந்து இவர் 'சர்தார்' இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில், இயக்குனர் பி.எஸ்.மித்ரன் தன் நீண்ட நாள் காதலியான ஆஷாமீரா ஐயப்பனை கரம் பிடித்தார்.

    இவர்களது திருமணம் தஞ்சாவூரில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



    • 'சர்தார்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
    • இந்த படம் ஒரு படிப்பினை என்று நடிகர் சீமான் கூறியுள்ளார்.

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்த படம் 'சர்தார்'. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்திருந்தார். மேலும், ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.


    சர்தார்

    பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'சர்தார்' திரைப்படம் அக்டோபர் மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


    சர்தார்

    இந்நிலையில், 'சர்தார்' திரைப்படம் பார்த்த நடிகர் சீமான், "இதுபடம் என்று சொல்ல முடியாது, இது ஒரு படிப்பினை. இந்தக் கருத்தை வலியுறுத்தி நான் பேசியிருக்கிறேன். தண்ணீர் மிகப்பெரிய வியாபாரப்பொருளாக மாற்றப்பட்டுள்ளது. உலக உயிர்களின் உயிர் உடைமையை சந்தைப்பொருளாக மாற்றியதிலிருந்து எவ்வளவு பெரிய பேராபத்தை நோக்கிய பயணித்துக்கொண்டிருக்கும் என்பதை புரிய வரும். இந்தப்படம் அதை மிகவும் ஆழமாக விளக்கிச்சொல்கிறது.


    சர்தார்

    மித்ரன் தரமான படத்தை உருவாக்கியிருக்கிறார். அவரிடம் சமூக பொறுப்புடன் ஒரு பார்வை இருக்கிறது. சர்தார் ஒரு சிறந்த படைப்பு'' என்று தெரிவித்துள்ளார்.


    • பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'சர்தார்'.
    • இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்த படம் 'சர்தார்'. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்திருந்தார். மேலும், ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.


    சர்தார்

    பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'சர்தார்' திரைப்படம் அக்டோபர் மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை ரஜிஷா விஜயன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


    சர்தார்

    அதில், "என்ன ஒரு அருமையான பயணம் மித்ரன் சார். இரண்டு வருடங்களுக்கும் மேலான உங்களின் கடின உழைப்பு இன்று உச்சத்தை எட்டியுள்ளது. அனைத்து பாராட்டுக்களுக்கும் மேலும் பலவற்றிற்கும் நீங்கள் தகுதியானவர். என்னை நம்பியதற்கு நன்றி." என குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கு கமெண்ட் செய்துள்ள நடிகை லைலா, "பி.எஸ்.மித்ரன் அனைத்து வெற்றிகளுக்கும் தகுதியானவர். அவர் ஒரு ராக்ஸ்டார்" என்று பதிவிட்டுள்ளார்.




    • பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'சர்தார்'.
    • சர்தார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்த படம் 'சர்தார்'. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும், ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.


    சர்தார்

    பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றிருந்தது. 'சர்தார்' திரைப்படம் அக்டோபர் மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    உதயநிதியை சந்தித்த சர்தார் படக்குழு

    இந்நிலையில், படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி மற்றும் படக்குழு விநியோகிஸ்தர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

    ×