search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிற்சியாளர் ரவிசாஸ்திரி"

    ‘இந்திய கிரிக்கெட் அணி விராட்கோலியை மட்டுமே நம்பி இல்லை’ என்று தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்தார். #RaviShastri #ViratKohli
    துபாய்:

    உலக கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி தேர்வு குறித்து தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அணி தேர்வில் நான் தலையிடுவது கிடையாது. அணி தேர்வு தொடர்பாக ஏதாவது ஆலோசனை இருந்தால் கேப்டன் மூலம் தெரிவிப்பேன். உலக கோப்பை போட்டிக்கு 15 வீரர்களை மட்டும் தான் தேர்வு செய்ய முடியும் என்பதால் ஒரு சில வீரர்கள் தவிர்க்க முடியாமல் விடுபட்டு போவார்கள். இது முற்றிலும் எதிர்பாராததாகும். நான் 16 வீரர்கள் வேண்டும் என்றேன். இந்த போட்டி நீண்ட காலம் கொண்டது என்பதால் 16 வீரர்கள் இருந்தால் சவுகரியமாக இருக்கும் என்று நாங்கள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) தெரிவித்து இருந்தோம். ஆனால் ஐ.சி.சி. 15 வீரர்களுக்கு தான் அனுமதி அளித்தது.

    அணிக்கு தேர்வாகாத வீரர்கள் மனவேதனை அடையக்கூடாது. இது ஒரு வேடிக்கையான விளையாட்டாகும். வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் வாய்ப்பை இழந்த வீரர்கள் எப்போது வேண்டுமானாலும் அணிக்கு அழைக்கப்படலாம். பேட்டிங்கில் 4-வது வீரர் வரிசையில் எப்பொழுதும் குறிப்பிட்ட வீரரை மட்டுமே இறக்கிக் கொண்டிருக்க முடியாது. அது அவ்வப்போது மாறுதலுக்குரிய இடமாக இருக்கும். முதல் 3 வீரர்கள் வரிசையில் மாற்றம் செய்ய முடியாது. ஆடுகளத்தின் தன்மை, எதிரணி ஆகியவற்றை பொறுத்தே 4-வது வரிசை வீரர் முடிவு செய்யப்படுவார்.



    இந்திய அணி கேப்டன் விராட்கோலியின் ஆட்டத்தையே அதிகம் நம்பி இருக்கிறது என்று கேட்கிறீர்கள்?. கடந்த 5 ஆண்டுகளில் இந்திய அணியின் செயல்பாடுகளை பார்த்தால் எல்லா வடிவிலான ஆட்டத்திலும் இந்திய அணி ‘டாப்-3’ இடத்துக்குளேயே இருக்கிறது. இதன் மூலம் இந்திய அணி ஒரு குறிப்பிட்ட (விராட்கோலி) வீரரையே நம்பி இல்லை என்பது உங்களுக்கு புரியும். இப்படி நிலையான வெற்றிகளை அணி பெறுவதற்கு பல வீரர்கள் எல்லா நேரங்களிலும் சீராக விளையாட வேண்டியது அவசியமானதாகும். நிலையான வெற்றியின் ஒட்டு மொத்த பெருமையும் அணியைத்தான் சாரும்.

    கடந்த 2 ஆண்டுகளாக ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணியில் பன்முகத்தன்மை கொண்ட வீரர்கள் உள்ளனர். அவர்கள் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக இருக்கிறார்கள். அத்துடன் அவர்கள் சொந்த மண்ணில் விளையாடுகிறார்கள். அதனால் இப்போதைக்கு உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக விளங்குகிறார்கள். ஆனால் குறிப்பிட்ட நாளில் எந்த அணியையும், எந்த அணியாலும் வீழ்த்த முடியும். உலக கோப்பை போன்ற பெரிய போட்டியில் ஒவ்வொரு ஆட்டத்திலும் உச்சபட்ச திறனை வெளிப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #RaviShastri #ViratKohli
    முதல் இன்னிங்சில் நமது பேட்ஸ்மேன்கள் சில தேவையற்ற ஷாட்களை ஆடினார்கள். அதில் இருந்து பேட்ஸ்மேன்கள் பாடம் கற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன் என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறினார். #AUSvIND #RaviShastri
    1947-ம் ஆண்டு முதல் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதில்லை என்ற சோகத்தை இந்திய அணியினர் நேற்று போக்கினார்கள்.

    அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பு மிக்க வெற்றியை தனதாக்கியது. பின்னர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அளித்த பேட்டியில், ‘இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்க தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் வெற்றி கண்டு தொடரை வெற்றியுடன் தொடங்கி இருப்பது வீரர்களுக்கு நல்ல உற்சாகத்தை அளிக்கும். நல்ல தொடக்கம் காண்பது நம்பிக்கையை அளிக்கும்.

    இந்த போட்டி தொடரில் வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். எனவே அவர்களுக்கு போதிய ஓய்வு அளிக்க வேண்டியது அவசியமானதாகும். அவர்கள் வலைப்பயிற்சியில் அதிக நேரத்தை செலவிடாமல் தவிர்க்க வேண்டும். அடுத்த டெஸ்ட் போட்டி நடைபெறும் பெர்த் ஆடுகளம் அதிக வேகம் கொண்டதாக இருக்கும். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
    முதல் இன்னிங்சில் நமது பந்து வீச்சாளர்கள் அருமையாக செயல்பட்டனர். முதல் இன்னிங்சில் நமது பேட்ஸ்மேன்கள் சில தேவையற்ற ஷாட்களை ஆடினார்கள். அதில் இருந்து பேட்ஸ்மேன்கள் பாடம் கற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன். புஜாரா மிகவும் அருமையாக செயல்பட்டார். விக்கெட் கீப்பிங் பணியில் ரிஷாப் பான்ட் நன்றாக செயல்படுகிறார். நாதன் லயன் கேட்ச்சை கோட்டை விட்டது போன்ற தவறை அவர் மீண்டும் செய்யமாட்டார் என்று நினைக்கிறேன்.

    இவ்வாறு ரவிசாஸ்திரி கூறினார். #AUSvIND #RaviShastri
    வெளிநாட்டில் சிறப்பாக விளையாடும் அணிகளில் ஒன்றாக இந்தியா விளங்கும் என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார். #RaviShastri
    பர்மிங்காம்:

    இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 1-ந்தேதி பர்மிங்காமில் தொடங்குகிறது. இதையொட்டி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, இணையதளத்துக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நாங்கள் அற்புதமாக ஆடினோம். தென்ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரில் ஓரளவு நன்றாகவே செயல்பட்டோம். அதே உத்வேகத்தை இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கும் கொண்டு செல்ல விரும்புகிறோம். வெளிநாட்டு மண்ணிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே எங்களுக்கு உள்ள சவாலாகும்.

    வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக விளையாடும் அணிகளில் ஒன்றாக இந்தியாவால் திகழ முடியும். அதற்குரிய திறமை நம்மிடம் இருப்பதாக நம்புகிறோம். ஆனால் இன்றைய சூழலில் வெளிமண்ணில் எந்த அணியும் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தவில்லை. இலங்கையில், தென்ஆப்பிரிக்க அணிக்கு (டெஸ்ட் தொடரில் தோல்வி) என்ன நடந்தது என்பதை பார்த்து இருப்பீர்கள்.

    2011-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சென்ற போது 0-4 என்ற கணக்கில் தோற்றோம். 2014-ம் ஆண்டு 1-3 என்ற கணக்கில் தொடரை இழந்தோம். இந்த முறை அதை விட சிறந்த முடிவு காணும் ஆவலில் உள்ளோம். அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களில் பெரும்பாலானவர்களுக்கு இதற்கு முன்பு இங்கிலாந்து மண்ணில் விளையாடிய அனுபவம் உண்டு. நிறைய கற்று இருக்கிறார்கள். இதை சாதகமான அம்சமாக பார்க்கிறோம்.

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் விளையாடும் போது முதல் 20 முதல் 25 ஓவர்கள் தான் மிகவும் முக்கியம். தொடக்க கட்ட ஓவர்களை சமாளித்து விட்டால் அதன் பிறகு வலுவான அடித்தளம் அமைத்து விடலாம். தொடக்க வீரர்கள் அதை புரிந்து கொண்டு ஆட வேண்டும். இந்த தொடருக்காக 3-வது தொடக்க ஆட்டக்காரராக லோகேஷ் ராகுலை தேர்வு செய்துள்ளோம். ஆனால் எங்களது பேட்டிங் வரிசை எப்போதும் மாற்றம் செய்வதற்கு ஏற்ப சவுகரியமாக இருக்கக்கூடியது. 3-வது தொடக்க ஆட்டக்காரரை டாப்-4 வரிசையில் எந்த இடத்திலும் பயன்படுத்த முடியும்.

    இவ்வாறு ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.  #RaviShastri  #tamilnews
    ×