search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனை ஓலை"

    • ரூ.8.5 லட்சம் மதிப்பிலான கடனுதவியுடன் ஜீனியா மகளிர் சுய உதவிக்குழு
    • பல்வேறு கைவினைப் பொருட்களை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.

    நாகர்கோவில், ஏப்.20-

    குமரி மாவட்ட மகளிர் திட்டத்தின் கீழ் ரூ.8.5 லட்சம் மதிப்பிலான கடனுதவியுடன் ஜீனியா மகளிர் சுய உதவிக்குழுவால் பனை ஓலை மற்றும் வாழை நார்களால் உருவாக்கப்பட்ட பழக்கூடை, மசாலாப்பெட்டி, எழுதுப்பொருள் வைப் பதற்கான பெட்டி, உணவுக் கூடை, அர்ச்ச னைப்பெட்டி, காய்கறி கூடை, குப்பைகள் வைப்ப தற்கான பெட்டி, தொப்பி, வாழைநாரால் உருவாக் கப்பட்ட குழந்தை களுக்கான ஆடை, மணப் ண்ணுக்கான அலங்கார பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு கைவினைப் பொருட்களை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.

    அதனைத்தொடர்ந்து, கன்னியாகுமரி பில்லர் மருத்துவமனை அன்னை நகர் பகுதியில் கொட்டாங் குச்சி வாயிலாக உரு வாக்கப்பட்ட அகப்பை, டீ கப், கலைப்பொருட்கள், ஜூஸ் கப், சூப் கிண்ணம், ஐஸ்கிரீம் கிண்ணம், வளை யல்கள், மாலைகள், மோதிரங்கள், பேனா உள்ளிட்ட 200-க்கும் மேற் பட்ட கைவினைப் பொருட்கள் உரு வாக்கப் பட்டுள்ளதை நேரில் ஆய்வு மேற்கொண்டு, பொருட்களை சந்தைப்படுத்துவது குறித்து மகளிர் திட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.

    உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) கலைச் செல்வி, மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனைக்குழு மேலாளர் தங்கராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கார்த்திகை தீப திருவிழாவையொட்டி கோவில்கள் முன்பு சொக்கப்பனை கொளுத்துவார்கள்.
    • செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவிலில் முழு பனைமரத்தை வைத்து சொக்கப்பனை உருவாக்குவார்கள்.

    உடன்குடி:

    கார்த்திகை தீப திருவிழா நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) கொண்டாடப்படுகிறது.இதையொட்டி அனைத்து கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்து கோவில் முன்பு சொக்கப்பனை கொளுத்துவார்கள். வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றி சுவாமிக்கு படையல் போட்டு வழிபடுவது வழக்கம்.

    உடன்குடி அருகே உள்ள செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவிலில் முழு பனைமரத்தை வைத்து சொக்கப்பனை உருவாக்குவார்கள். சில இடங்களில் பப்பாளி மரமும், சில இடங்களில் வாழை மரமும், இவைகள் கிடைக்காத இடங்களில் உயரமான கம்புகளில் குறுக்காக கம்புகளைகட்டி சுற்றி பனைமர ஒலைகளை கட்டி கோவிலுக்கு முன்பு வைத்து சொக்கப்பனை கொளுத்துவார்கள். இதற்காக முன்னதாக பனைஓலை சேகரிப்புபணியில் வாலிபர்கள் மற்றும் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

    • ஒவ்வொரு வீடுகளிலும் கழிவுநீர் உறிஞ்சுக்குழி அமைத்திட அனைவரும் முன்வர வேண்டும்.
    • கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்ட வருவாய் துறையின் சார்பில், திருவட்டார் வருவாய் வட்டம், குமரன்குடி ஊராட்சிக் குட்பட்ட முதலாறு அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர்அரவிந்த் கலந்து கொண்டு பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, தகுதி யான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசிய தாவது:-

    நாம் குடியிருக்கும் வீடு கள் மற்றும் சுற்றுப்புற சுகாதாரத்தை பேணி காத்திடும் வகையில், ஒவ்வொரு வீடுகளிலும் கழிவுநீர் உறிஞ்சுக்குழி அமைத்திட அனைவரும் முன்வர வேண்டும். இந்த உறிஞ்சுக்குழாய் அமைப்ப தற்கு ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான செலவினம் ஆகும்.

    இந்த உறிஞ்சுக்குழாய் கிணறினை அமைப்பதனால் நம் வீட்டில் பயன்படுத்தும் கழிவுநீரானது குளங்கள், ஏரிகள், வாய்க்கால்கள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைப் பகுதிகளிலும் செல்வதை முற்றிலுமாக தவிர்க்க முடிவதோடு, அனைத்து நீர்நிலைகளிலும் ஆகாயத்தாமரை உட்பட தேவையற்ற கழிவு பொருட்கள் பெருகுவதை முற்றிலுமாக தவிர்க்க முடியும்.

    கன்னியாகுமரி மாவட் டத்தை பசுமை மாவட்டமாக மாற்றும் முயற்சியிலும், குப்பையில்லா மாவட்டமாக மாற்றுவதற்கான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வாயிலாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கத்தில் இல்லாத காலக்கட்டங்களில் பனை ஓலைகளால் உரு வாக்கப்பட்ட கூடை கள், தாமரை இலை உள்ளிட்ட இயற்கையான பொருட்களை பயன்படுத்தினோம் அப்பொருட்களை தற்போதும் பயன்படுத்திட பொதுமக்களாகிய நீங்கள் முன்வர வேண்டும். அவ்வாறு பொதுமக்கள் அனைவரும் முன்வரும்போது பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினை முற்றிலு மாக அகற்றிட முடியும்.

    இன்றைய சூழலில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவி யர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் போதைப்பொருட்களுக்கு அடிமையாகுவதாக புள்ளி விவரங்கள் தெரி விக்கப்படுகிறது. போதைப்பழக்கத்திலிருந்து விடுபடுவதற்காக காவல்துறை, சமூக நலத்துறை, தன்னார்வ லர்கள் வாயிலாக போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    6-ஆம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் உங்களுடைய குழந்தைகளின் நடவடிக்கை களை முற்றிலுமாக கண்காணிப்பதோடு, அவர்க ளிடையே அதிகளவில் கலந்துரையாட முன்வர வேண்டும். அவ்வாறு உங்கள் குழந்தைகளிடையே பேசும்போது அவர்களின் பிரச்சனைகளை தெரிந்து கொண்டு, வாழ்வில் உயர் நிலையை எட்ட முடியும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு கலெக்டர் அரவிந்த் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில், பத்ம நாபபுரம் சப்-கலெக்டர் கௌசிக், மாவட்ட ஊராட்சித்தலைவர் மெர்லியன்ட் தாஸ், தனித்துணை ஆட்சியர் திருப்பதி, இணை இயக்குநர் (வேளாண்மை) ஹனிஜாய் சுஜாதா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஷூலா ஜாண், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வாணி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் நாகராஜன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜெரிபா இம்மானுவேல், மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமாரி, வேர்கிளம்பி பேரூராட்சி தலைவர் சுஜித் ஜெபசிங்குமார், ஆதிதிராவிடர்துறை தனி வட்டாட்சியர் கோலப்பன் உட்பட துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    ×