search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டதாரி வாலிபர் பலி"

    காரமடை அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த பட்டதாரி வாலிபர் பரிதாபமாக உயிரிந்தார்.

    காரமடை:

    கோவை உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் மனோஜ்குமார் (வயது 23). பி.இ. பட்டதாரி. சொந்தமாக தொழில் நடத்தி வருகிறார்.

    இவர் தனது நண்பர்கள் கவுசிகன், பிரதீப், சஞ்ஜய் ஆகியோருடன் கோவையில் இருந்து கல்லாறு நோக்கி காரில் சென்றனர். அப்போது கார் கரியம்பாளையம் காரமடை இடையே எம்.ஜி.ஆர் நகர் அருகில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மனோஜ்குமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் மனோஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அதியமான்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் பட்டதாரி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையை அடுத்த கோபாலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் சபரி (வயது24). பட்டதாரி வாலிபரான இவர் கட்டிட சென்டிங் வேலை செய்து வந்தார். நேற்று மாலை அரூரில் வேலையை முடித்து விட்டு சபரி மற்றும் நார்த்தாம்பட்டியை சேர்ந்த சிலம்பு ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மான்காரன் கொட்டாய் என்ற இடத்தில் செல்லும் போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே சபரி பரிதாபமாக இறந்தார். சிலம்புவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே படுகாயம் அடைந்த சிலம்புவை அக்கம் பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான சபரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக அதியமான்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுவையை அடுத்த கோட்டக்குப்பத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பட்டதாரி வாலிபர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் மேட்டு தெருவை சேர்ந்தவர் தமிமுன் அன்சாரி. (வயது 26). பி.பி.ஏ. பட்டதாரி. இவரது அண்ணன் சாதிக் அலி சென்னையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு தமிமுன் அன்சாரி தனது அண்ணனின் மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு புதுவைக்கு வந்தார்.

    பின்னர் கருவடிக்குப்பம் ரவுண்டானா கிழக்கு கடற்கரை சாலை வழியாக வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். கோட்டக்குப்பம் அருகே வந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட தமிமுன் அன்சாரி படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தமிமுன் அன்சாரி மீது மோதிய வாகனத்தை தேடி வருகிறார்கள்.

    ×