என் மலர்
செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்- பட்டதாரி வாலிபர் பலி
அதியமான்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் பட்டதாரி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையை அடுத்த கோபாலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் சபரி (வயது24). பட்டதாரி வாலிபரான இவர் கட்டிட சென்டிங் வேலை செய்து வந்தார். நேற்று மாலை அரூரில் வேலையை முடித்து விட்டு சபரி மற்றும் நார்த்தாம்பட்டியை சேர்ந்த சிலம்பு ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மான்காரன் கொட்டாய் என்ற இடத்தில் செல்லும் போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே சபரி பரிதாபமாக இறந்தார். சிலம்புவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே படுகாயம் அடைந்த சிலம்புவை அக்கம் பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான சபரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக அதியமான்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






