search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெற்பயிர்கள் நாசம்"

    • கடந்த 3 நாட்களாக அவ்வப்போது விட்டு விட்டு மழைபெய்து வந்தது.
    • சேதமடைந்த பயிர்களை பார்த்து விவசாயிகள் மிகவும் வேதனையடைந்தனர்.

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த புதூா், மாலைமேடு, கா்ணாவூா், குப்புகல்மேடு, கூத்தம்பாக்கம், மங்கலம் கீழ்வீராணம் உள்ளிட்ட பல இடங்களில் கடந்த 3 நாட்களாக அவ்வப்போது விட்டு விட்டு மழைபெய்து வந்தது.

    இந்நிலையில் நேற்று பிற்பகல் மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னல், சூறை காற்றுடன் பெய்த கனமழை பெய்தது. இந்த திடீர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி நாசமானது.

    சேதமடைந்த பயிர்களை பார்த்து விவசாயிகள் மிகவும் வேதனையடைந்தனர்.

    இந்நிலையில் அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    • மாடுகள் மேய்ந்ததில் 75 ஏக்கர் நெற்பயிர்கள் நாசமாகின.
    • கடந்த ஆண்டும் இதேபோன்று மாடுகளால் விவசாயம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் காவல்துறைக்கு புகார் செய்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா பனிக்கனேந்தல் 3 கண்மாய் பாசனத்தில் உள்ள 75 ஏக்கர் விவசாயத்தில் 50 மாடுகள் மேய்ந்து நாசமானது. இது தொடர்பாக கிராம மக்களும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொறுப்பாளர்களும் வட்டாட்சியர் சாந்தியிடம் புகார் செய்தனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மானாமதுரை ஒன்றிய செயலாளர் ஆண்டி, விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வீரபாண்டி மற்றும் விவசாயிகள் இரவு நேரங்களில் மாடுகள் விவசாய நிலங்களில் புகுந்து நெற்பயிர்களை அழித்ததை விவசாயிகள் சுட்டிக் காண்பித்தனர்.

    இந்த கிராமத்தில் 3 கண்மாய்கள் உள்ளது. 3 கண்மாய்கள் மூலம் மொத்தம் 100 ஏக்கர் பாசன பாசனம் பெறுகிறது. வைகை கரையோரம் இருந்தாலும் வைகை தண்ணீர் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை.

    கண்மாயை நம்பித்தான் விவசாயம் நடைபெற்று வருகிறது. கண்மாயில் மழை தண்ணீர் நிரம்பி விவசாயம் நடைபெறுகிறது. இங்கு நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. 3 மாத காலம் நெல் விவசாயத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் விவசாயிகளிடம் உள்ளது.

    பூச்சிகளில் இருந்து பாதுகாப்பு செய்ய வேண்டி உள்ளது. பன்றிகளால் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டி உள்ளது. அதுபோக கடந்த 3 ஆண்டு காலமாக மானாமதுரை நகர் அழகர் கோவில் தெருவில் உள்ள சுமார் 75 மாடுகளால் விவசாயம் அழிக்கப்பட்டு வருகிறது.

    மாடுகள் வளர்ப்போர் மாலையில் அவிழ்த்து விடுகிறார்கள். இந்த மாடுகள் வைகை கரை ஓரம் செல்கிற பாதையில் நல்ல நிலையில் இருக்கும் நெற்பயிர்களை மேய்ந்து அழித்து வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து விவசாயிகள் மானாமதுரை வட்டாட்சியர் சாந்தியிடம் புகார் தெரிவித்தனர் . கடந்த ஆண்டும் இதேபோன்று மாடுகளால் விவசாயம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் காவல்துறைக்கு புகார் செய்தனர். அதன் பின்பு ஓரளவுக்கு மாட்டின் உரிமையாளர்கள் கட்டுப்பட்டு இருந்தனர். தற்போது மீண்டும் மாடுகள் அவிழ்த்து விடப்படுகிறது.

    அந்த மாடுகள் கடந்த 4 நாட்களாக நெற்பயிர்களை அழித்து 75 ஏக்கர் விவசாயத்தை மேய்ந்ததால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.தற்போது விவசாயிகள் மும்முரமாக பாசன பணிகளில் இரவு, பகல் பாராமல்பணி செய்து வருகின்றனர்.

    ஆனால் கால்நடைகளில் இருந்து விவசாயத்தை காப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வீரபாண்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மானாமதுரை ஒன்றிய செயலாளர் ஆண்டி மற்றும் விவசாயிகள் வட்டாட்சியரிடம் கேட்டுக் கொண்டனர்.

    ×