search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோடை மழை வெள்ளத்தில் மூழ்கி நெற்பயிர்கள் நாசம்- விவசாயிகள் வேதனை
    X

    மழையில் சேதமடைந்த நெற்பயிர்கள்.

    கோடை மழை வெள்ளத்தில் மூழ்கி நெற்பயிர்கள் நாசம்- விவசாயிகள் வேதனை

    • கடந்த 3 நாட்களாக அவ்வப்போது விட்டு விட்டு மழைபெய்து வந்தது.
    • சேதமடைந்த பயிர்களை பார்த்து விவசாயிகள் மிகவும் வேதனையடைந்தனர்.

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த புதூா், மாலைமேடு, கா்ணாவூா், குப்புகல்மேடு, கூத்தம்பாக்கம், மங்கலம் கீழ்வீராணம் உள்ளிட்ட பல இடங்களில் கடந்த 3 நாட்களாக அவ்வப்போது விட்டு விட்டு மழைபெய்து வந்தது.

    இந்நிலையில் நேற்று பிற்பகல் மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னல், சூறை காற்றுடன் பெய்த கனமழை பெய்தது. இந்த திடீர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி நாசமானது.

    சேதமடைந்த பயிர்களை பார்த்து விவசாயிகள் மிகவும் வேதனையடைந்தனர்.

    இந்நிலையில் அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    Next Story
    ×