search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீலகிரியில்"

    • கல்லட்டி மலைப்பாதையில் 36 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது.
    • விபத்துகள் ஏற்படுவதை தடுக்க, வெளிமாநில மற்றும் பிற மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள் கல்லட்டியில் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    ஊட்டி;

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தலைகுந்தாவில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடிக்கு சாலை செல்கிறது. கல்லட்டி மலைப்பாதையில் 36 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது.

    அபாயகரமான மற்றும் செங்குத்தாக சாலை செல்கிறது. இதனால் வாகனங்களை முதல் மற்றும் இரண்டாவது கியரில் மட்டும் இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மலைப்பாதையில் வாகனங்கள் இயக்கி அனுபவம் இல்லாதவர்கள் விபத்தில் சிக்குவது தொடர்கிறது. விதிமுறைகளை கடைபிடிக்காமல் செல்வதால் கல்லட்டி மலைப்பாதையில் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது.

    இதனால் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க, வெளிமாநில மற்றும் பிற மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள் கல்லட்டியில் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. குவிலென்ஸ் பொருத்தும் பணி நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள் இருபுறமும் சென்று வர அனுமதி உள்ளது.

    இந்தநிலையில் நேற்று கல்லட்டி மலைப்பாதையில் கார் ஒன்று பாறை மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்களுக்கு காயம் ஏற்படவில்லை. ஆனால், கார் சேதமடைந்தது.

    விபத்துகள் ஏற்படுவதை தடுக்க வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது கல்லட்டி மலைப்பாதை கொண்டை ஊசி வளைவுகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியும் வகையில் குவிலென்ஸ் பொருத்தும் பணி நடந்து வருகிறது.

    இதன் மூலம் கீழ் இருந்து மேல் நோக்கி வரும் வாகனங்களை, முன்கூட்டியே பார்த்து சிறிது தொலைவில் வாகனங்களை நிறுத்தி வழிகொடுக்க முடியும். மேலும் வளைவில் வாகனங்கள் திரும்பும்போது விபத்து ஏற்படாமல் இருக்கும். 36 கொண்டை ஊசி வளைவுகளில் புதிதாக குவிலென்ஸ் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, கொண்டை ஊசி வளைவுகளில் பொருத்தப்பட்ட குவிலென்சுகள் சேதமடைந்தது. அதனால் தற்போது புதிதாக குவிலென்ஸ் பொருத்தப்பட்டு வருகிறது என்றார்.

    • சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி ஊட்டியில் நடைபெற்றது
    • மீண்டும் மஞ்சப்பை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு

    ஊட்டி:

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், வனத்துறை, ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி ஊட்டியில் நடைபெற்றது.

    பேரணியை கலெக்டர் அம்ரித் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி சேரிங்கிராஸ் வழியாக தாவரவியல் பூங்கா வரை சென்றது. இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.அவர்களுக்கு மஞ்சப்பைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் அம்ரித் மரக்கன்றுகளை நட்டு வைத்து தண்ணீர் ஊற்றினார்.இதுகுறித்து கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-

    உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடும் நாளில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. நடப்பாண்டில் ஒரே பூமி என்ற கருபொருளை மையமாக வைத்து கொண்டாடப்படுகிறது. மேலும், பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மீண்டும் மஞ்சப்பை குறித்து மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்ப ட்டது. நீலகிரியில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரியில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டு உள்ளது. இதனை பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க 1,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், ஊட்டி நகராட்சி ஆணையாளர் காந்திராஜன், தோட்டக்கலை இணை இயக்குனர் (பொறுப்பு) சிபிலா மேரி, உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.  

    • விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
    • சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்கின்றனர்.

    அரவேனு,

    கோத்தகிரியில் இருந்து மசக்கல் செல்லும் வழியில் உயிலட்டி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக நீர்வீழ்ச்சியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    நீர்வீழ்ச்சி சுற்றிலும் அதிகப்படியான விவசாய பூமிகள் இருந்து வருகிறது. மேலும் இந்த நீர் வீழ்ச்சியில் இருந்து வரும் நீரின் மூலம் மசக்கல் கூக்கலதெறை பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, சைனீஸ் காய்கறிகள் எனப் பலதரப்பட்ட காய்கறிகளை விளைவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் விடுமுறை நாட்கள் என்பதாலும், அனைத்து சுற்றுலா மையங்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்வதாலும் இந்த நீர்வீழ்ச்சிக்கு அதிகமானோர் வந்து செல்கின்றனர்.

    நீலகிரிக்கு வரும் வழியில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்கின்றனர்.

    ×