search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிராகரிக்க வேண்டும்"

    பாவ மன்னிப்பு நிகழ்ச்சி குறித்த மகளிர் ஆணைய பரிந்துரையை நிராகரிக்க வேண்டும் என பிரதமரிடம் மத்திய சுற்றுலாத்துறை மந்திரி அல்போன்ஸ் கன்னன்தானம் கோரிக்கை விடுத்துள்ளார். #AlphonsKannanthanam #PMModi
    கொச்சி:

    கேரள மாநிலத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் பாவ மன்னிப்பு கேட்க சென்ற பெண் ஒருவரை சில பாதிரியார்கள் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் சமீபத்தில் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவத்தை தொடர்ந்து தேவாலயங்களில் நடைபெறும் பாவ மன்னிப்பு நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு மகளிர் ஆணையம் கோரிக்கை விடுத்து உள்ளது. இது தொடர்பாக சில பரிந்துரைகள் அடங்கிய மனு ஒன்றை தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா சர்மா மத்திய அரசிடம் வழங்கினார்.



    ஆனால் இந்த பரிந்துரையை நிராகரிக்க வேண்டும் என பிரதமரிடம் மத்திய சுற்றுலாத்துறை மந்திரி அல்போன்ஸ் கன்னன்தானம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘பாவ மன்னிப்பு நிகழ்ச்சி, கிறிஸ்தவ தேவாலயங்களின் அடிப்படை நம்பிக்கை’ எனக்கூறி உள்ளார்.

    இதைப்போல உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கையும் சந்தித்து அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அப்போது, இது குறித்து பரிசீலிப்பதாக அல்போன்ஸ் கன்னன்தானத்திடம், ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.  #AlphonsKannanthanam #PMModi  #Tamilnews 
    ×