search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை வியாபாரி தாக்குதல்"

    • கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • கருப்பு நிற காரில் நாகர்கோவில் நோக்கி சென்ற கும்பல் நாங்குநேரி அருகே மீனவன்குளத்தில் இருந்து களக்காடு சென்றது தெரியவந்தது.

    களக்காடு:

    நெல்லை டவுனை சேர்ந்தவர் சுஷாந்த் (வயது 40). இவர் நெல்லையில் நகைக்கடை மற்றும் ஷாப்பிங் பொருட்கள் மொத்த வியாபாரம் நடத்தி வருகிறார்.

    நேற்று காலையில் நகைகள் வாங்குவதற்காக சுஷாந்த் கேரள மாநிலம் நெய்யாற்றங்கரைக்கு தனது காரில் புறப்பட்டார்.

    நெல்லை அருகே மூன்றடைப்பு ரெயில்வே மேம்பாலத்தில் வந்தபோது திடீரென 2 கார்களில் முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள் சுஷாந்த் காரை வழிமறித்து கார் கண்ணாடியை இரும்பு கம்பியால் உடைத்தனர். சுஷாந்த் சுதாரிப்பதற்குள் அவர் மீது மிளகாய் பொடியை தூவினர்.

    தொடர்ந்து காருடன் அவரை கடத்திச்சென்ற அந்த கும்பல் அவரை நடுவழியில் இறக்கி விட்டனர். பின்னர் நாங்குநேரி சுங்கச்சாவடிக்கு முன்பு உள்ள நெடுங்குளம் தேசிய நெடுஞ்சாலை விலக்கில் திரும்பி நெடுங்குளம் கிராமத்தில் குளத்தின் கரையோரம் சுஷாந்தின் காரை நிறுத்திவிட்டு, அதில் வைத்திருந்த ரூ.1½ கோடி பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றனர்.

    இந்த துணிகர கொள்ளை சம்பவம் தொடர்பாக சுஷாந்த் மூன்றடைப்பு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வி தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். தகவல் அறிந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மற்றும் போலீசார் சம்பவ இடங்களை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    இதையடுத்து இந்திய தண்டனை சட்டம் 395, 397 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவத்தில் 8 பேர் கும்பல் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தப்பிச்சென்ற முகமூடி கும்பலை பிடிக்க நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கருப்பு நிற காரில் நாகர்கோவில் நோக்கி சென்ற அந்த கும்பல் நாங்குநேரி அருகே மீனவன்குளத்தில் இருந்து களக்காடு சென்றது தெரியவந்தது. இதையடுத்து களக்காட்டிற்கு சென்று தனிப்படையினர் கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தபோது சேரன்மகாதேவி சாலையில் கார் சென்றது.

    தொடர்ந்து ஆய்வு செய்ததில், கார் சேரன்மகாதேவி, அம்பை வழியாக தென்காசியை கடந்து கடையநல்லூர் பகுதிக்கு சென்றது தெரியவந்தது. மேற்கொண்டு அவர்கள் தப்பிச்சென்ற இடத்தை கண்டுபிடிக்க தனிப்படையினர் இன்று 2-வது நாளாக அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    அந்த கும்பல் அங்கிருந்து கேரளாவிற்கு தப்பிச்சென்று இருக்கலாமா? அல்லது கேரளா செல்வது போல் போலீசாரை திசைதிருப்பிவிட்டு ராஜபாளையம், மதுரை வழியாக வேறு எங்கும் அந்த கும்பல் தப்பிச்சென்றதா? என தனிப்படையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    • சிறிது தொலைவு வந்ததும் சுஷாந்தை நடுவழியில் இறக்கிவிட்ட அந்த கும்பல் நாகர்கோவில் நோக்கி காரை ஓட்டி சென்றுள்ளது.
    • வாகன போக்குவரத்து அதிகம் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்த துணிகர முகமூடி கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    களக்காடு:

    நெல்லை டவுனை சேர்ந்தவர் சுஷாந்த் (வயது 40). இவர் நெல்லையில் நகைக்கடை மற்றும் ஷாப்பிங் பொருட்கள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

    இவர் இன்று காலை நகைகள் வாங்குவதற்காக கேரள மாநிலம் நெய்யாற்றங்கரைக்கு தனது காரில் 2 உதவியாளர்களுடன் சென்றுள்ளார். அப்போது நெல்லையில் இருந்து இவரது காரை தொடர்ந்து முன்னும் பின்னும் 2 கார்கள் வந்துள்ளன. நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு ரெயில்வே மேம்பாலத்தில் வரும்போது திடீரென 2 கார்களிலும் வந்த முகமூடி கும்பல் சுஷாந்தின் காரை வழிமறித்து நிறுத்தி அவர் மீது மிளகாய் பொடிதூவி கம்பியால் தாக்கியுள்ளனர்.

    பின்னர் காரின் கண்ணாடியை உடைத்து அதில் இருந்த ரூ.1.50 கோடியை திருட முயன்றுள்ளனர். உடனே சுஷாந்த் கத்தி கூச்சலிட்டுள்ளார். அப்போது அவ்வழியே வந்த தனியார் ஆம்னி பஸ் டிரைவர், நடத்துனர் மற்றும் பயணிகள் சுஷாந்தின் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்து கொள்ளையர்களை விரட்டி உள்ளனர். இதனால் சுதாரித்துக்கொண்ட முகமூடி கொள்ளையர்கள் சுஷாந்தை தாங்கள் வந்த காரில் தூக்கிப்போட்டு, அவரது காரையும் கடத்தி சென்று விட்டனர்.

    சிறிது தொலைவு வந்ததும் சுஷாந்தை நடுவழியில் இறக்கிவிட்ட அந்த கும்பல் நாகர்கோவில் நோக்கி காரை ஓட்டி சென்றுள்ளது. தொடர்ந்து சென்றால் நாங்குநேரி சுங்கச்சாவடியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் சிக்கிக் கொள்வோம் என்பதை அறிந்த கொள்ளையர்கள் சுங்கச்சாவடிக்கு முன்பு உள்ள நெடுங்குளம் தேசிய நெடுஞ்சாலை விலக்கில் திரும்பி நெடுங்குளம் கிராமத்தை நோக்கி சென்றனர்.

    அங்குள்ள குளத்தின் கரையோரம் சுஷாந்தின் காரை நிறுத்தி அதில் இருந்த பணத்தை தங்கள் காருக்கு மாற்றிய கொள்ளை கும்பல் சுஷாந்தின் காரை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனிடைய கொள்ளையர்கள் தாக்குதலில் காயமடைந்த சுஷாந்த் பயத்தில் நெல்லையில் உள்ள தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்கள் வந்த பின் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நாங்குநேரி இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் மூன்றடைப்பு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சுஷாந்திடம் விசாரணை நடத்தினர்.

    அதில் அவர் கொள்ளையடிக்கப்பட்ட பணம் குறித்து முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவிப்பதால் அது ஒருவேளை கருப்பு பணமாக இருக்கலாம் எனவும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த துணிகர முகமூடி கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிய முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    ×