search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தோவாளை மார்க்கெட்"

    • கடந்த சில நாட்களாக பிச்சி, மல்லிகை பூக்களின் வரத்து குறைவாகவே உள்ளது.
    • பிச்சி, மல்லிகை பூக்களின் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது.

    ஆரல்வாய்மொழி:

    தோவாளை பூ மார்க்கெட்டிற்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நெல்லை மாவட்டம் ஆவரைகுளம், பழவூர், கோலியான்குளம் மற்றும் மதுரை, ஊட்டி, பெங்களூரு பகுதிகளில் இருந்தும் விற்பனைக்கு பூக்கள் கொண்டு வரப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக பிச்சி, மல்லிகை பூக்களின் வரத்து குறைவாகவே உள்ளது. பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறைந்து இருந்தது. இதனால் பிச்சி, மல்லிகை பூக்களின் விலை அவ்வப்போது உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பிச்சி, மல்லிகை பூக்கள் கிலோ ரூ.1000-க்கு கீழ் விற்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தைப்பூசம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி பூக்களின் தேவை அதிகரித்தது. வியாபாரிகள் பூக்களை வாங்குவதற்கு இன்று மார்க்கெட்டில் குவிந்திருந்தனர். இதனால் பிச்சி, மல்லிகை பூக்களின் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது.

    மல்லிகைப்பூ கிலோ ரூ.1800-க்கும், பிச்சிப்பூ ரூ.1100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் சேலம் அரளி ரூ.230, தோவாளை அரளி ரூ.200, வாடாமல்லி ரூ.80, கோழிப்பூ ரூ.60, மஞ்சள் சிவந்தி ரூ.130, சம்பங்கி ரூ. 170, மஞ்சள் கேந்தி ரூ.70, சிவப்பு கேந்தி ரூ.80-க்கும் விற்கப்பட்டது. தாமரை பூ ஒன்று ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    • மல்லிகைப்பூ விலை குறைந்து காணப்படுவதால் சில்லறை வியாபாரிகளும், மொத்த வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    • விவசாயிகள் பறிப்பு கூலி கூட கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.

    ஆரல்வாய்மொழி:

    குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பூச்சந்தை தோவாளையில் உள்ளது. ஆரல்வாய்மொழி, காவல்கிணறு, புதியம்புத்தூர், ராதாபுரம், பழவூர் ஆகிய ஊர்களில் இருந்து பிச்சிப் பூ, சங்கரன்கோவில், கோவில்பட்டி, மதுரை, மானாமதுரை, வத்தலகுண்டு, கொடை ரோடு, திண்டுக்கல் ஆகிய ஊர்களில் இருந்து மல்லிகை பூவும், பெங்களூர், ஓசூர் ஆகிய ஊர்களில் இருந்து மஞ்சள் கேந்தி , பட்டர் ரோஸ், தென்காசி, அம்பாசமுத்திரம், புளியங்குடி, திருக்கனங்குடி ஆகிய பகுதியில் இருந்து பச்சையும் துளசியும் தோவாளை ஆவரை சுற்றியுள்ள பகுதியில் இருந்து கனகாம்பரம், அரளி, கோழி கொண்டை, தாமரை உள்ளிட்ட பூக்கள் தோவாளை பூச்சந்தைக்கு வந்து மாவட்டம் முழுவதும், மாநிலம் முழுவதும் விற்பனை நடைபெறுகிறது.

    தற்போது மல்லிகைப்பூ அதிக அளவில் தோவாளை பூச்சந்தைக்கு வருவதால் பூக்கள் விலை குறைந்து காணப்படுகிறது. மற்ற பூக்களும் பிச்சிப்பூ ரூ.1200, மல்லிகைப்பூ ரூ.400, அரளி ரூ. 200, சம்பங்கி ரூ. 125, பட்டர் ரோஸ் ரூ. 220, பாக்கெட் ரோஸ் ரூ. 40, கேந்தி ரூ. 80, சேலத்து அரளி ரூ. 100, மரிக்கொழுந்து ரூ.100, பச்சை ரூ.7, தாமரை ரூ.5, கனகாம்பரம் ரூ. 500 விற்பனையாகி வருகிறது.

    மல்லிகைப்பூ விலை குறைந்து காணப்படுவதால் சில்லறை வியாபாரிகளும், மொத்த வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விவசாயிகள், பறிப்பு கூலி கூட கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.

    • கடும் பனிப்பொழிவால் குளங்களில் தாமரை பூ இல்லை.
    • சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்தது.

    கன்னியாகுமரி:

    ஆரல்வாய்மொழி அருகே தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு ஆரல்வாய்மொழி, புதியம்புத்தூர், குமாரபுரம், பழவூர், ராதாபுரம், காவல்கிணறு, வடக்கன்குளம் ஆகிய ஊர்களில் இருந்து பிச்சிப்பூவும், மதுரை, மானாமதுரை, வத்தலகுண்டு, கொடைரோடு, திண்டுக்கல், ராஜபாளையம், சங்கரன்கோவில், கோவில்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து மல்லிகைப் பூவும் விற்பனைக்காக வருகிறது.

    மேலும் சேலத்தில் இருந்து சிவப்பு அரளியும், வெள்ளை அரளி பெங்களூர் மற்றும் ஓசூர் பகுதியில் இருந்தும், மஞ்சள் கேந்தி மற்றும் பட்டர்ரோஸ் தென்காசி, புளியங்குடி, அம்பாசமுத்திரம், திருக்கண்ணங்குடி ஆகிய பகுதியிலிருந்தும், குமரி மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் உள்ள குளங்களின் மூலம் தாமரை பூவும், தோவாளை, செண்பகராமன் புதூர், ராஜாவூர், மருங்கூர், தோப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து சம்பங்கி, கோழி கொண்டை, அருகம்புல், மரிக்கொழுந்து உள்ளிட்ட பல்வேறு பூக்கள் தோவாளை சந்தைக்கு வந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிக்கும், கேரளாவுக்கும் விற்பனையாகி வருகிறது.

    கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தி இல்லை. இதனால் சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்தது. ஆனால் சுப காரியங்களும், திருமண நிகழ்ச்சிகளும் அதிகமாக இருப்பதால் பூக்களுடைய தேவை அதிகரித்துள்ளது. இதனால் பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது. மேலும் கடும் பனிப்பொழிவால் குளங்களில் தாமரை பூ இல்லை. இதனால் அதன் விலை உயர்ந்து ஒரு பூ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    கிலோ ஒன்றிற்கு பூக்களின் விலை வருமாறு:-

    மல்லிகை ரூ.1500, பிச்சி ரூ.1,550, சம்பங்கி ரூ.80, மஞ்சள் கேந்தி ரூ.65, சிவப்பு கேந்தி ரூ.65, பட்டர் ரோஸ் ரூ.130, பன்னீர் ரோஸ் ரூ.90, கோழிப்பூ ரூ.50, வாடாமல்லி ரூ. 60, ரோஜா ஒரு பாக்கெட் ரூ.30.

    • ஆயுத பூஜையையொட்டி பூக்களை வாங்குவதற்காக வியாபாரிகள் இன்று அதிகளவு தோவாளை பூ மார்க்கெட்டில் குவிந்திருந்தனர்.
    • பிச்சி, மல்லிகை, சம்பங்கி பூக்களின் விலை கடுமையான அளவு உயர்ந்து காணப்பட்டது.

    ஆரல்வாய்மொழி:

    தோவாளை பூ மார்க்கெட்டிற்கு சேலம், ஓசூர், பெங்களூரு போன்ற பகுதிகளில் இருந்தும் தோவாளை, செண்பகராமன்புதூர், பழவூர், ஆவரைகுளம் பகுதியில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. பண்டிகை காலங்களில் பூக்களின் விலை உயர்ந்து காணப்படும்.

    நவராத்திரி விழாவையொட்டி கடந்த சில நாட்களாக பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டிருந்த நிலையில் இன்று பிச்சி மல்லிகை, சம்பங்கி பூக்களின் விலை கடுமையான அளவு உயர்ந்துள்ளது.

    ஆயுத பூஜையையொட்டி பூக்களை வாங்குவதற்காக வியாபாரிகள் இன்று அதிகளவு தோவாளை பூ மார்க்கெட்டில் குவிந்திருந்தனர். இதனால் காலை முதலே பூ மார்க்கெட் களைகட்டி இருந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் பூக்களை வாங்குவதற்கு வந்திருந்தனர்.

    இதையடுத்து வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு பூக்களை வாங்கி சென்றனர். இதனால் பிச்சி மல்லிகை சம்பங்கி பூக்களின் விலை கடுமையான அளவு உயர்ந்து காணப்பட்டது. பிச்சிப்பூ கிலோ ரூ.1250க்கும் மல்லிகை ரூ.700, சேலம் அரளி ரூ.350, சம்பங்கி ரூ.400, சிவப்புகேந்தி ரூ. 120, மஞ்சள்கேந்தி ரூ.90க்கு விற்கப்பட்டது.

    மரிக்கொழுந்து ரூ.150, கொழுந்து ரூ.140, கோழி பூ ரூ.50, தோவாளை அரளி ரூ.400, வாடாமல்லி ரூ.60, கனகாம்பரம் ரூ.600, முல்லை பூ ரூ.1250, துளசி ரூ. 40, தாமரை பூ ஒன்று ரூ. 12க்கு விற்கப்பட்டது. வடசேரி கோட்டாறு பகுதிகளில் உள்ள பூக்கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.


    ×