search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழில் அதிபர் தற்கொலை"

    • கடந்த சில நாட்களாகவே முத்துகிருஷ்ணன் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • முதற்கட்ட விசாரணையில் தொழில் நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் அடுத்த சாந்தாங்காடு பகுதியில் இன்று காலை சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த நபர் இறந்து கிடந்த இடத்தின் அருகே ஒரு மோட்டார் சைக்கிளும் நின்று கொண்டிருந்தது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இறந்த நபர் குறித்து அடையாளம் தெரியவந்தது.

    திருப்பூர் மாவட்டம் பெருந்தொழுவு பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (37). இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். முத்துகிருஷ்ணன் திருப்பூரில் சொந்தமாக பனியன் கம்பெனி வைத்திருந்தார். ஆனால் தொழில் நஷ்டம் காரணமாக பனியன் கம்பெனியை மூடிவிட்டார்.

    அதன் பின்னர் கடந்த 6 மாதமாக திருப்பூரில் சாதாரண கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். எனினும் தொழில் நஷ்டம் மற்றும் இதன் காரணமாக கடனும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த சில நாட்களாகவே மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று மாலை முத்துகிருஷ்ணன் தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஈரோடுக்கு வந்துள்ளார். பின்னர் இரவு வீரப்பன்சத்திரம் அடுத்த சாந்தாங்காடு பகுதியில் சுற்றித்திரிந்துள்ளார். பின்னர் அந்த பகுதியில் வீடு கட்டும் கட்டிட பணி நடந்து வருகிறது. அந்த கட்டிடம் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அமர்ந்து இருந்துள்ளார். திடீரென அவர் மனம் உடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    இதனையடுத்து இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் தொழில் நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. ஏனென்றால் அவரது மோட்டார் சைக்கிளில் தற்கொலை செய்வதற்காக கயிறு கொண்டு வந்திருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் அவர் தற்கொலை செய்யும் எண்ணத்துடன் தான் வந்திருப்பது தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்த பிறகுதான் முத்துகிருஷ்ணன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற முழு விவரமும் தெரியவரும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அர்ஜுன் பாலகிருஷ்ணன் வீட்டின் மேல் வங்கியில் அதிக அளவு கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது.
    • இன்று காலை அர்ஜுன் பாலகிருஷ்ணன் தனது அலுவலகத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அருகில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    அம்பத்தூர்:

    கொரட்டூரை சேர்ந்தவர் அர்ஜுன் பாலகிருஷ்ணன் (வயது 53). தொழில் அதிபர். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கடைகள் உள்ளன. இதனை வாடகைக்கு விட்டு உள்ளார். அங்கு அவர் தனக்கு அலுவலகமும் வைத்து உள்ளார்.

    அர்ஜுன் பாலகிருஷ்ணன் வீட்டின் மேல் வங்கியில் அதிக அளவு கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது. இதனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை.

    இதற்கிடையே பணத்தை செலுத்ததால் நேற்று அர்ஜுன் பாலகிருஷ்ணனின் வீடு ஜப்தி செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் மிகவும் மனவேதனை அடைந்தார். இதைத் தொடர்ந்து நேற்று இரவு அர்ஜுன் பாலகிருஷ்ணன் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்துக்கு சென்றார். பின்னர் திரும்பி செல்லவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை அர்ஜுன் பாலகிருஷ்ணன் தனது அலுவலகத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அருகில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். கடன் பிரச்சினையில் தொழில் அதிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ராஜீவ் மட்டும் வீட்டில் ஆயத்த ஆடைகளை தயாரித்து அனுப்பி வந்தார்.
    • நாயின் கழுத்திலும், தனது கழுத்திலும் கயிறை மாட்டி மின்விசிறியில் தூக்குப்போட்டுக்கொண்டார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையத்தில் வசித்து வந்தவர் ராஜீவ் (வயது 45). சேலத்தை சேர்ந்த இவர் தனது மனைவியுடன் ஆயத்த ஆடை தைத்து வழங்கும் தொழில் செய்து வந்தார். ஆண் நாய் ஒன்றையும் இவர் வளர்த்து வந்தார். இவருக்கு கடன் சுமை இருந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவரது மனைவி வீட்டை விட்டு சென்று விட்டார். அதன்பின்னர் ராஜீவ் மட்டும் வீட்டில் ஆயத்த ஆடைகளை தயாரித்து அனுப்பி வந்தார். மனைவி பிரிந்து சென்ற நிலையில் நன்றியுடன் தன்னுடன் இருந்த வளர்ப்பு நாய் மீது அவர் அதிக பாசம் காட்டி வந்தார். இந்த நிலையில் கடன் தொல்லையால் அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    தான் இறந்து விட்டால் தான் வளர்த்து வந்த நாய் தெருநாயாகி அனாதையாகிவிடுமே என நினைத்த அவர் அதனையும் தூக்கில்போட்டு தற்கொலை செய்ய திட்டமிட்டார். இந்த நிலையில் அவர் நாயின் கழுத்திலும், தனது கழுத்திலும் கயிறை மாட்டி மின்விசிறியில் தூக்குப்போட்டுக்கொண்டார். இதில் ராஜீவ் தனது வளர்ப்பு நாயுடன் இறந்து விட்டார்.

    ஒருவாரம் ஆன நிலையில், துர்நாற்றம் வீசியதால் அவர் தனது நாயுடன் தற்கொலை செய்து கொண்டது நேற்று தான் தெரியவந்தது. இதுபற்றி அறிந்த போலீசார் அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று ராஜீவ் மற்றும் நாயின் உடலை தூக்கில் இருந்து இறக்கினர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×