search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய கைத்தறி தினம்"

    • சிறப்பு கைத்தறி விற்பனை கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் ஷஜீ வனா தொடங்கி வைத்து கைத்தறி கண்காட்சியினை பார்வையிட்டார்.
    • சுகாதாரத் துறையுடன் இணைந்து சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது

    ஆண்டிபட்டி:

    9-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கைத்தறித்துறையின் சார்பில் அமைக்கப்பட்டி ருந்த சிறப்பு கைத்தறி விற்பனை கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் ஷஜீ வனா தொடங்கி வைத்து கைத்தறி கண்காட்சியினை பார்வையிட்டார்.

    தேனி மாவட்டத்தில் 9-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மதுரை சுங்குடி சேலைகள், மென் பட்டு சேலைகள், பருத்தி நூல் சேலைகள், படுக்கை விரிப்புகள், துண்டுகள், தலையணை உறைகள் மற்றும் நவீன காலத்திற்கு உகந்த ரகங்கள் உள்ளிட்ட பல்வேறு கைத்தறி ரகங்கள் காட்சி படுத்தப்பட்ட விற்பனையை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    முன்னதாக 9 -வது தேசிய கைத்தறி தினத்தினை முன்னிட்டு. தேனி மாவட்டம் டி.சுப்புலாபுரம் பகுதியில் உள்ள நெசவாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் விதமாக சுகாதாரத் துறையுடன் இணைந்து சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இம்மருத்துவ முகாமில் பொது மருத்துவம், குழந்தைகளுக்கான மருத்துவம், காது, மூக்கு, தொண்டை சர்க்கரை நோய், இரத்தம், சளி, சிறுநீர் பரிசோதனை உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளில் கைத்தறி நெசவாளர்களின் குடும்பதத்தினர் 180 நபர்களுக்கு பரிசோதனை மேற்க்கொண்டு தேவை யான சிகிச்சை அளிக்க ப்பட்டது.

    நிகழ்ச்சியில் டாக்டர் சண்முகப்பிரியா மேற்பார்வை யில் செவிலி யர்கள் கலந்து கொண்டனர். மதுரை, தேனி மாவட்ட கைத்தறித்துறை உதவி இயக்குனர் பாலசுப்பிர மணியன், சரக ஆய்வாளர் பாலமுரளிதரன், ஆய்வா ளர்கள் செண்பக ராஜ், ஜெயராமன், சரவணன், அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×