search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூய்மையான குடிநீர்"

    • பள்ளியில் படிக்கும் மாணவிகள் குடிநீர் வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.
    • தூய்மையான குடிநீர் வசதியை செய்து தர வேண்டுமென்று பள்ளி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சி மகளிர் மேல் நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் குடிநீர் வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். அவர்களுக்கு தூய்மையான குடிநீர் வசதியை செய்து தர வேண்டுமென்று பள்ளி சார்பில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் அமைக்கப்பட்டது.

    அதை ஷா நவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

    இந்நிகழ்வில் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கவுதமன், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, நகராட்சி செயற்பொறியாளர், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • பாபநாசம் பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
    • மேல்நிலை நீர் தேக்க தொட்டியினை சுத்தம் செய்து பொதுமக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்க வேண்டும்.

    பாபநாசம்:

    பாபநாசம் பேரூராட்சி அலுவலகத்தில் வளர்ச்சித்திட்ட பணிகள் நிறைவேற்றுவது குறித்து பேரூராட்சி கவுன்சிலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் தலைமை வகித்தார்.

    பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசன், பேரூராட்சி துணை தலைவர் பூபதிராஜா, உதவி பொறியாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பாபநாசம் பேரூராட்சியில் 15 வார்டு களிலும் நடை பெற்றுவரும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிப்பது எனவும், மேலும் ஒவ்வொரு வார்டுகளுக்கும் என்னென்ன பணிகள் நிறைவேற்ற பட வேண்டும் எனவும் பேரூராட்சி கவுன்சிலர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.

    பேரூராட்சி கவுசிலர்கள் கூறிய கோரிக்கைகள் அனைத்தும் முன்னுரிமை அடிப்படையில் திட்ட ப்பணிகள் நிறைவேற்றப்படும் என பேரூராட்சி தலைவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் 15 வார்டுகளிலும் திடக்கழிவு மேலாண்மை பணியினை தினந்தோறும் பொது சுகாதார பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டுமெனவும்,

    மேல்நிலை நீர் தேக்க தொட்டியினை சுத்தம் செய்தும் குளோரினேசன் செய்தும் பொதுமக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்க வேண்டும் எனவும், மின்விளக்கு வசதியினை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் எனவும் பேரூராட்சி ஊழியர்களுக்கு அறிவுறுத்த பட்டது. பொது சுகாதார பணியாளர்கள் அனைவரின் குறைகளையும் கேட்டறியப்பட்டுது. அவர்களது குறைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றிபடும் எனவும் செயல் அலுவலர் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் பாபநாசம் பேரூராட்சி கவுன்சிலர்கள் பிரேம்நாத் பைரன், கீர்த்திவாசன், ஜாபர் அலி, பிரகாஷ், பாலகிருஷ்ணன், தேன்மொழி, விஜயா, சமீரா பர்வீன், சுகாதார பரமசிவம், சுகாதர மேற்பார்வையாளர்கள் நித்தியானந்தம், நாடிமுத்து மற்றும் பேரூராட்சி பணியா ளர்கள், பொதுசுகாதார பணியா ளர்கள் கலந்துகொண்டனர்.

    ×