search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமண பரிகாரம்"

    • ராகு-கேதுவுக்கு பரிகார தலமாகவும் இந்தக் கோவில் விளங்குகிறது.
    • இங்குள்ள குளத்தில் 48 நாட்கள் நீராடினால் வியாதிகள் குணமாகும்

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் பிரசித்தி பெற்ற திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சுயம்பு மூர்த்தியாக சுகந்த பரிமளேஸ்வரர் அருள்பாலிக்கிறார். அன்னை சக்தி இங்கு 'பெரியநாயகி' என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர்- பெரியநாயகி அம்பாளை மனமுருகி வேண்டினால், திருமண தடை நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

    இதேபோல் நாக தோஷம், புத்திர தோஷம் மற்றும் ராகு-கேதுவுக்கு பரிகார தலமாகவும் இந்தக் கோவில் விளங்குகிறது.

    தீராத வியாதி உள்ளவர்கள், இங்குள்ள குளத்தில் 48 நாட்கள் நீராடி, மண்டபத்தில் தங்கி சுவாமியையும்-அம்பாளையும் வழிபட்டால் வியாதிகள் குணமாகி பூரண நலமுடன் திரும்புவார்கள்.

    • சுக்கிர தோஷ நிவர்த்திக்காக இங்கு சென்று வழிபடலாம்.
    • முருகன் கல்யாண வரம் தரும் கந்தனாக இந்தக் கோவிலில் குடிகொண்டுள்ளார்.

    திருவாரூர் -கும்பகோணம் சாலையில் அய்யம்பேட்டையில் ஸ்ரீஅபினாம்பிகை உடனுறை ஸ்ரீஅபிமுக்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த கோவிலில் திருமண வரம் தரும் கடவுளாக ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி உள்ளார்.

    18 படிகள் ஏறிச் சென்று மூலவரை தரிசிக்கும் அமைப்புடன் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. மூலவர் ஸ்ரீஅபிமுக்தீஸ்வரரை ஆயிரம் முல்லைப் பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தீராத நோயும் தீரும். சுக்கிரன், இந்தத் தலத்தின் சரவணப் பொய்கையில் நீராடி, தவம் இருந்து, இழந்த சக்தியைச் திரும்பப் பெற்றார். எனவே, சுக்கிர தோஷ நிவர்த்திக்காக இங்கு சென்று வழிபடலாம்.

    ஸ்ரீசுப்பிரமணியர் தன்னை நாடி வரும் பக்தர்களுக்குப்பொன்னும் பொருளும் அருள்வதுடன், திருமண வரமும் வழங்குகிறார். வள்ளியைக் கரம்பிடிக்க விரும்பிய முருகன், இந்தத் தலத்துக்கு வந்து பரமசிவனையும் பார்வதியையும் வேண்டி தவம் செய்து வழிபட்டதாகச் சொல்கிறது தல புராணம். பிறகு, சிவ-பார்வதியின் ஆசியோடும், அண்ணன் விநாயகரின் துணையோடும் வள்ளிமலையில் ஸ்ரீவள்ளியை மணம் செய்து கொண்டார்.

    தனது திருமணம் நிறைவேற பெற்றோரின் ஆசி கிடைத்த இந்தத் தலத்தில், பக்தர்களின் திருமண பிரார்த்தனைகளையும் நிறைவேற்ற முருகன் சித்தம் கொண்டு கல்யாண வரம் தரும் கந்தனாக இந்தக் கோவிலில் குடிகொண்டுள்ளார்.

    வேலவன் வழிபட்டதால், இந்த ஊருக்கு வேளூர் என்றும் பெயர் உண்டு. இந்த தலத்தில் உள்ள சரவண பொய்கையில் நீராடி, முருகனை வழிபட்டால், திருமண தோஷங்கள் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வம் பெருகும்.

    • இந்த கோவில் சிற்பக்கலைக்கு புகழ் பெற்றது.
    • சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் உள்ளது கைலாசநாதர் கோவில்

    தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் உள்ளது. மேற்கு பார்த்து அமைந்த சிவன் கோவில் இது, இந்த பழமையான சிவன் கோவில் தமிழர்களின் சிற்பக்கலைகளுக்கு மேலும் ஒரு சான்று. இந்த கோவிலின் மூலவர் கைலாசநாதர், தாயார் கற்பகாம்பாள் அருள் பாலிக்கிறார்கள். இக்கோவிலிலுள்ள இறைவனை சந்திரனும், சூரியனும் வந்து தொழுது செல்வதாகக் கூறப்படுகிறது.

    இத் தலத்திலேயே வெகு சிறப்பான சன்னதி பாதாள லிங்கம் சன்னதியாகும், மகா மண்டபத்தின் வடமேற்கு மூலையில், தலத்தின் கீழ்ப்பகுதியில் காற்று புக முடியாத ஒரு அறைக்குள் இருக்கும் இந்தப் பாதாள லிங்கத்திற்குப் பச்சைக் கற்பூரம் வைத்து செவ்வாய்க்கிழமை தோறும் அபிஷேகம் செய்தால் கல்யாண பாக்கியம், புத்திர பாக்கியம் மற்றும் தொழில் விருத்தி ஆகியவை கை கூடும் என்பது நம்பிக்கை

    இத்தலத்தில் உள்ள சுரகேசுவரர் 3 தலை, 3 கால்களோடு இருப்பது சிறப்பு. இவருக்கு மிளகு ரசம் வைத்து சாதம் படைத்து, வடைமாலை சாற்றி வழிபாடு செய்தால் காய்ச்சல் மற்றும் தீராத நோய்கள் குணமடைவதாக நம்பப்படுகிறது.

    தமிழகத்தின் எல்லா ஊர்களிலிருந்தும், சேலத்துக்கு பேருந்துகள் மற்றும் இரயில் போக்குவரத்து வசதி உள்ளது. சேலம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்தும், இரயில் நிலையத்திலிருந்தும், பத்து நிமிடங்களுக்கு ஒரு நகரப் பேருந்து வீதம் தாரமங்கலத்துக்கு இயக்கப்படுகிறது.

    கோவில் திறந்திருக்கும் நேரம்: காலை,7.00 மணி முதல் நண்பகல் 12.30 வரையும், மாலை 04.00 மணி முதல் இரவு 8.30 மணிவரை கோயில் நடை திறந்திருக்கும். முக்கியச் சிறப்பு தினங்களில் முழு நேரமும் நடை திறந்திருக்கும்.

    ×