search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தரமற்ற சாலை"

    • மணலுக்கு பதிலாக எம்சாண்டை பயன்படுத்தி சிமெண்ட் கலவையை மட்டும் போட்டு தெருக்களில் 2 மணி நேரத்தில் பணியை முடித்து விட்டனர்.
    • அரைகுறையாக போடப்பட்ட இந்த தரமற்ற சிமெண்ட் சாலையால் அரசுக்கு பணம் ரூ.5 லட்சம் வீணடிக்கப்பட்டுள்ளதாக புகார்

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, பச்சமலையான்கோட்டை ஊராட்சி, செம்பட்டி பாண்டியன் நகரில் ஊராட்சி ஒன்றிய பொது நிதி ரூ.5 லட்சம் செலவில் தெருக்களுக்கு புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இதில், முதல் நாள் சாலையை ஜே.சி.பி. வாகனம் மூலம் கிளறிவிட்டு, மறுநாள் ஜல்லி இல்லாமல் புதிய யுக்தியை கையாண்டு மணலுக்கு பதிலாக எம்சாண்டை பயன்படுத்தி சிமெண்ட் கலவையை மட்டும் போட்டு தெருக்களில் 2 மணி நேரத்தில் பணியை முடித்து விட்டனர்.

    அரைகுறையாக போடப்பட்ட இந்த தரமற்ற சிமெண்ட் சாலையால் அரசுக்கு பணம் ரூ.5 லட்சம் வீணடிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும், நிலக்கோட்டை யூனியன் அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் துணையுடன் தரமற்ற சாலை அமைக்கப்பட்டுள்ளதால் அதனை மாவட்ட உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தரமற்ற சாலை அமைத்த ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு அரசு அதிகாரிகள் கண்காணிப்பில் ஜல்லி, மணல் ஆகியவற்றை பயன்படுத்தி தரமான சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 38 வினாடிகள் கொண்ட வீடியோவில், சாலை தார்பாய் போல இருப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
    • தரமற்ற சாலை பணிக்கு ஒப்புதல் அளித்த என்ஜினீயர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் உள்ள அம்பாட் தாலுகாவிற்குட்பட்ட ஒரு கிராமத்தில் சமீபத்தில் தார் சாலை போடப்பட்டுள்ளது. பிரதம மந்திரியின் கிராமப்புற சாலை திட்டத்தின் கீழ் போடப்பட்ட இந்த சாலையின் பணிகள் தரமற்ற முறையில் நடைபெற்றதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். ஆனால் ஜெர்மன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாலை போடப்படுவதாக ஒப்பந்ததாரர் கூறினார்.

    இந்நிலையில் புதிதாக போடப்பட்ட தார் சாலையை தார்பாய் போன்று அப்பகுதி மக்கள் வெறும் கைகளால் தூக்குவது போன்ற வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 38 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், சாலை தார்பாய் போல இருப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். தரமற்ற இந்த சாலை பணிக்கு ஒப்புதல் அளித்த என்ஜினீயர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த வீடியோக்களை பார்த்த நெட்டிசன்கள் மகாராஷ்டிரா அரசை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.




    ×