search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் வானிலை ஆய்வு மையம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மேலடுக்கு சுழற்சி காரணமாக தற்போது மழை பெய்து வருகிறது.
    • 4 நாட்களுக்கு பிறகு மழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னையில் நேற்று காலையில் சாரல் மழை பெய்யத் தொடங்கியது. அதே நேரத்தில் புறநகர் பகுதியில் பரவலாக மழை பெய்தது. நேற்று மாலை மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் நேற்று இரவு முதல் சென்னை முழுவதும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யத் தொடங்கியது.

    விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இன்று காலையிலும் மழை தொடர்ந்து தூறிக் கொண்டே இருந்தது. சென்னை மட்டுமின்றி அதை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.

    இந்த நிலையில் மேலடுக்கு சுழற்சி காரணமாக மேலும் 3 நாட்கள் மழை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தனியார் வானிலை நிபுணர் பிரதீப் ஜான் கூறியதாவது:-

    சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்துள்ளது.

    குறிப்பாக சென்னை முழுவதும் மிக அதிக அளவில் மழை கொட்டியது. அதிகபட்சமாக பெருங்குடியில் 16 செ.மீ. மழை பெய்துள்ளது.

    மேலடுக்கு சுழற்சி காரணமாக தற்போது மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் 3 அல்லது 4 நாட்கள் நீடிக்கும்.

    மேக கூட்டங்கள் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக இன்று தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

    4 நாட்களுக்கு பிறகு மழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

    மீனம்பாக்கம்-16 செ.மீ.

    பெருங்குடி-16 செ.மீ.

    ஆலந்தூர்-15.6 செ.மீ.

    அடையாறு-13.6 செ.மீ.

    முகலிவாக்கம்-13.5 செ.மீ.

    ராயபுரம்-13.3 செ.மீ.

    வளசரவாக்கம்-11.3 செ.மீ.

    செம்பரம்பாக்கம்-10.7 செ.மீ.

    அண்ணாநகர்-10.1 செ.மீ.

    மதுரவாயல்-10.1 செ.மீ.

    அண்ணா பல்கலைக்கழகம்-9.6 செ.மீ.

    தரமணி-12 செ.மீ.

    ஜமீன் கொரட்டூர்-8.4 செ.மீ.

    பூந்தமல்லி- 7.4 செ.மீ.

    நுங்கம்பாக்கம்-7 செ.மீ.

    • ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் கால கட்டத்தில் புயல் சின்னங்கள் ஏற்படுவது வழக்கம்.
    • அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் புயல் உருவாவதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. மே மாதம் முடிந்துள்ள நிலையிலும் வெயிலின் தாக்கம் குறையாமலேயே உள்ளது. கோடை முடிந்து எப்போதும் ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இன்னும் சில தினங்களில் பருவ மழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை மைய நிபுணர்கள் கணித்து உள்ளனர்.

    இந்த நிலையில் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அரபிக்கடலில் தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியில் வருகிற 5-ந்தேதி புயலாக மாறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக தனியார் வானிலை நிபுணரான பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார். இதே போன்று வங்கக் கடலிலும் புயல் உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த புயல் இன்னும் சில தினங்களில் உருவாகும் என பிரதீப்ஜான் தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் கால கட்டத்தில் இது போன்ற புயல் சின்னங்கள் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில்தான் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் புயல் உருவாவதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.

    இதில் அரபிக்கடலில் தான் முதலில் புயல் உருவாகிறது. பின்னர்தான் வங்கக்கடலில் புயல் உருவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புயல் உருவாகும் நேரத்தில் தரைகாற்று அதிகமாக வீசுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்றும் வானிலை மைய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வருகிற 5-ந்தேதி அரபிக்கடலில் புயல் உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் வங்கக்கடலில் 9- ந்தேதி புயல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    அரபிக்கடலில் உருவாகும் புயல் தீவிரம் அடைந்து மேற்கு இந்திய கடலோர பகுதிகளை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கேரளா மற்றும் கர்நாடகா பகுதியை இந்த புயல் நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வங்க கடலில் உருவாக உள்ள புயலின் தாக்கம் பற்றி தற்போது கணிக்க முடியாது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மேவார் புயலின் சுழற்சி காரணமாக தென்மேற்கு பருவமழைக்கான பருவக் காற்று ஓட்டத்தை தடுக்கும்.
    • புயல் வலுவடையும் போது அது தென்சீனக்கடல் பகுதிக்குள் நுழையக்கூடும்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் அதிக மழை பொழிவு இருக்கும்.

    ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். கடந்த ஆண்டு ஒருவாரம் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இந்த ஆண்டு ஒருவாரம் தாமதமாக பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதற்கேற்ப மழைக்கான அறிகுறிகள் தென்பட்டு வந்தன.

    இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை மேலும் தாமதமாக கூடும் என தனியார் வானிலை ஆய்வு மையமான ஸ்கைமேட் கூறியுள்ளது. இதுதொடர்பாக இந்நிறுவனத்தின் துணை தலைவர் மகேஷ் பலாவத் கூறியதாவது:-

    பசிபிக் பெருங்கடலில் மேவார் புயல் உருவாகி உள்ளது. இந்த புயல் வருகிற 27 அல்லது 28-ந் தேதி கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது ஏற்படும் தாக்கம் காரணமாக அரபிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    மேவார் புயலின் சுழற்சி காரணமாக தென்மேற்கு பருவமழைக்கான பருவக் காற்று ஓட்டத்தை தடுக்கும். புயல் வலுவடையும் போது அது தென்சீனக்கடல் பகுதிக்குள் நுழையக்கூடும். இந்த புயலால் ஏற்படும் பாதிப்பு காரணமாக காற்றின் ஈரப்பதம் உறிஞ்சப்படும். இதன் காரணமாக தென்மேற்கு பருவமழைக்கான மேகங்களை வடகிழக்கு திசை நோக்கி தள்ளும். இதன்காரணமாக இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது மேலும் தாமதமாகலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தனியார் வானிலை ஆய்வு மையத்தின் தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் மறுத்துள்ளது. இவை அனைத்தும் யூகங்களின் அடிப்படையில் கூறப்பட்டுள்ளன. அறிவியல் மாதிரிகளின் அடிப்படையில் தெரிவிக்கப்படவில்லை. எனவே தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்த கருத்துக்கள் குறித்து நாங்கள் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை, என கூறியுள்ளது.

    இந்தியாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பான அளவு அதாவது 96 சதவீதம் அளவுக்கு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆனால் ஸ்கைமேட் தனியார் வானிலை ஆய்வு மையம், தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக அதாவது 94 சதவீதம் அளவுக்கே பெய்யும் எனக்கூறியுள்ளது.

    ×