search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்கரதம்"

    • நேற்று விடுமுறை தினம் என்பதால் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
    • சுமார் 250க்கும் மேற்பட்டோர் ரூ.2000 கட்டணம் செலுத்தி தங்கரதம் இழுத்து வழிபட்டனர்.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் தினந்தோறும் மலைக்கோவிலில் தங்கரதம் இழுத்து வழிபாடு செய்வது வழக்கம். இதற்காக ரூ.2000 கட்டணம் செலுத்தி பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.

    சாதாரண நாட்களில் சராசரியாக 100 பக்தர்கள் வரை தங்க ரதம் இழுத்து வழிபாடு செய்வார்கள். சித்ரா பவுர்ணமி, மாத கார்த்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கட்டணம் செலுத்தி தங்கரதம் இழுத்து வழிபாடுவார்கள்.

    இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். சுமார் 250க்கும் மேற்பட்டோர் ரூ.2000 கட்டணம் செலுத்தி தங்கரதம் இழுத்து வழிபட்டனர். இதனால் மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    மேலும் நேற்று முதல் கோர்ட்டு உத்தரவுப்படி செல்போன் மற்றும் கேமராக்களுக்கு கட்டணம் வசூலித்து அவை பாதுகாப்பு அறையில் வாங்கி வைக்கப்பட்டதால் கூட்ட நெரிசல் அதிகரித்தது.

    கோவில் பாதுகாப்பு அலுவலர்கள் பக்தர்களிடம் சோதனை நடத்தி செல்போன் மற்றும் கேமராக்களை வாங்கி வைத்தனர். அதனால் கூட்டம் அதிகரித்ததால் சோதனை நடத்துவது நிறுத்தப்பட்டு மீண்டும் பணிகள் தொடங்கியது.

    இரவு 10 மணி வரையிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பஸ் நிலையத்தில் வெளியூர் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து தங்கள் ஊர்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

    • நேற்று முன்தினம் வரை ரூ. 1500 செலுத்தி செய்யப்பட்ட அபிஷேக கட்டணம் தற்போது ரூ.3000.
    • தங்கரத புறப்பாடு கட்டணம் 1201-ல் இருந்து 2000 ஆக உயர்ந்துள்ளது.

    சுவாமிமலை:

    அறுபடைவீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிநாதசுவாமி கோவிலில் அபிஷேகம் அலங்காரம் மற்றும் தங்கரத புறப்பாடு போன்ற பல்வேறு நிகழ்வுகளுக்கு பக்தர்கள் சேவா கட்டணம் செலுத்தி தரிசனம் செய்து தங்களுடைய நேர்த்திக் கடனை நிறைவேற்றி வருகின்றனர்.

    இவ்வாறு இதுவரை பக்தர்கள் செலுத்தி வந்த சேவா கட்டணங்களை 100 சதவீதம் உயர்த்தி நேற்று முதல் அமலுக்கு வருவதாக கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி நேற்று முன்தினம் வரை ரூ. 1500 செலுத்தி செய்யப்பட்ட அபிஷேக கட்டணம் தற்போது ரூ. 3000 எனவும், சண்முகார்ச்சனை கட்டணம் ரூ.3000-த்தில் இருந்து ரூ.6000, திரிசதை கட்டணம் ரூ.3000-த்தில் இருந்து 6000, பக்தர்கள் விரும்பி செய்யக்கூடிய நேர்த்திக்கடன்களில் முக்கியமானதான சந்தன காப்பு அலங்காரம் ரூ. 10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் ரூபாயாகவும், சுற்றுக் கோயில் அபிஷேக கட்டணம் ரூ. 300-ல் இருந்து 600 ஆகவும் உயர்தத்ப்ப–ட்டுள்ளது.

    இதேப்போல் தங்கரத புறப்பாடு கட்டணம் 1201-ல் இருந்து 2000 ஆகவும், சகஸ்ரநாமம் ரூ.100 லிருந்து 1000 ஆகவும், முத்தங்கி 500 லிருந்து 1000 ஆகவும் உபநயன கட்டணம் 500-ல் இருந்து 1000 ஆகவும், காது குத்துதல் கட்டணம் ரூ. 50 லிருந்து ரூ.500 ஆகவும், சிறப்பு வழி கட்டணம் ரூ.50 லிருந்து விசேஷ காலகட்டங்களில் மட்டும் ரூ.100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்த கட்டண உயர்வு கடந்த ஏழு ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை தற்பொழுது உயர்த்தி உள்ளார்கள்.என்பது குறிப்பிடத்தக்கது.

    இத்தகவலை கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×