search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல் ஸ்டெயின்"

    தென்ஆப்பிரிக்கா அணிக்கு அனுபவம் இல்லாத பந்து வீச்சு யுனிட் மிகப்பெரிய பிரச்சனை என ஸ்டெயின் தெரிவித்துள்ளார். #DaleSteyn
    இங்கிலாந்தில் அடுத்த வருடம் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இந்த தொடரில் தென்ஆப்பிரிக்கா அணிக்கு அனுபவம் இல்லாத பந்து வீச்சு யுனிட்டுதான் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் என டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டேல் ஸ்டெயின் கூறுகையில் ‘‘ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் எங்களது மிகப்பெரிய பிரச்சனையே பந்து வீச்சு யுனிட்டுதான். இது மிகமிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் என்று தோன்றவில்லை. ஆனால், அனுபவம் மிகப்பெரிய பிரச்சனைதான்.



    எங்களுடைய டாப் சிக்ஸ் பேட்ஸ்மேன்களை எடுத்துக்கொண்டால், அனைத்து வீரர்களும் 800-க்கும் மேற்பட்ட போட்டியில் விளையாடியுள்ளனர். அதேவேளையில், பந்து வீச்சாளர்களை பார்த்தீர்கள் என்றால், கடைசி நான்கு வீரர்கள் 150 போட்டிகளில்தான் விளையாடியுள்ளனர்.

    35 வயதானாலும் இன்னும் நான் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். ஒருநாள் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால், கட்டாயம் விளையாடி அணிக்கு வெற்றி தேடிக்கொடுப்பேன்.



    ரபாடா, லுங்கி நிகிடி, டேன் பேட்டர்சன், வில்லியம் முல்டர் அவர்களுடைய ஆட்டத்தில் இருந்து கற்றுக் கொண்டு வருகிறார்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக உலகக்கோப்பை தொடருக்கு கற்றுக் கொண்டிருக்கும்போதே செல்ல முடியாது. நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் தெரிந்துக் கொள்வது தேவையானது’’ என்றார்.

    டேல் ஸ்டெயின் தென்ஆப்பிரிக்கா அணிக்காக 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 178 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.
    தென்ஆப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டெல் ஸ்டெயின் உலககோப்பைக்கு பிறகு ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். #DaleSteyn #SouthAfrica

    தென்ஆப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டெல் ஸ்டெயின். காயத்தால் அவதிப்பட்ட அவர் அதிலிருந்து மீண்டும் வந்துள்ளார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடினார்.

    இந்த நிலையில் 2019-ம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற போவதாக கூறியுள்ளார். அவர் கூறுகையில், அடுத்த ஆண்டு நடக்கும் உலக கோப்பை போட்டியில் விளையாட முயற்சிப்பேன். உலககோப்பைக்கு பிறகு ஒருநாள் போட்டியில் விளையாட முடியும் என்று நினைக்கவில்லை என்றார். #DaleSteyn #SouthAfrica
    ×