search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெயலலிதா நினைவுநாள்"

    • ஜெயலலிதா நினைவுநாளில் பொதுமக்களுக்கு அன்னதானத்தை கே.டி. ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.
    • ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    சிவகாசி

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல்லில் ஜெயலலிதாவின் படத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    இதில் சிவகாசி மாநகர பகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணகுமார், கருப்பசாமிபாண்டியன், சாம் என்ற அபினேஷ்குமார், ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிவகாசி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ரத்தின விலாஸ் பஸ் நிறுத்தம் அருகில் ஒன்றிய செயலாளர் ஆரோக்கியம் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சுபாஷினி மற்றும் நிர்வாகிகள் சுடர்வள்ளி சசிகுமார், இளநீர் செல்வம் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க சார்பில் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    நகர (வடக்கு) செயலாளர் வக்கீல் துரைமுருகேசன், நகர (தெற்கு) செயலாளர் பரமசிவம், விருதுநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எஸ்.என். பாபுராஜ், விருதுநகர் மேற்கு மாவட்ட பேரவை செயலாளர் என்.எம். கிருஷ்ணராஜ் தலைமையில் பழைய பஸ் நிலையம் முன்பிருந்து மவுன ஊர்வலம் புறப்பட்டது. ஜெயலலிதாவின் அலங்கரிக்கப்பட்ட உருவப்பட ரதத்துடன் மவுன ஊர்வலம் நகரின் முக்கிய வீதி வழியாக ஜவகர் மைதானத்தை சென்றடைந்தது.அங்கு அம்மா உணவகம் அருகில் ஜெயலலிதா படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.

    மாவட்ட இணை செயலாளர் அழகுராணி, வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எம். குருசாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் நவரத்தினம், சேத்தூர் பேரூர் செயலாளர் பொன்ராஜ் பாண்டியன், மாவட்ட பேரவை இணைச் செயலாளர் வி.எஸ்.ராஜா, ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அழகாபுரியான், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் யோகசேகரன், மாவட்ட பேரவை துணைத் தலைவர் திருப்பதி, வனராஜ், நகர மகளிர் அணி செயலாளர் ராணி, வள்ளியம்மாள், மாவட்ட பிரதி நிதி கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட இலக்கிய அணி ஆந்திராகுமார் உட்பட பலர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.

    பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • வருகிற 5-ந்தேதி காலை 9 மணிக்கு ஜெயலலிதாவின் நினைவை போற்றும் வகையில் நடைபெறும் அமைதி பேரணியில் ஆயிரமாயிரமாய் திரண்டு வர வேண்டும்.
    • கழக தொண்டர்களும் மக்களும் நம் பக்கம் தான் என்பது உறுதியாக இருந்தாலும் அதை நிரூபிக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவுநாள் அமைதி பேரணியை பிரம்மாண்டமாக நடத்துவது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடைபெற்றது.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கு.ப.கிருஷ்ணன், ஜேசிடி பிரபாகர் அமைப்பு செயலாளர் நாஞ்சில் கோலப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், வரும் டிசம்பர் 5-ந்தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் அமைதி பேரணியும் உறுதியேற்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    கழக தொண்டர்களும் மக்களும் நம் பக்கம் தான் என்பது உறுதியாக இருந்தாலும் அதை நிரூபிக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. வருகிற 5-ந்தேதி காலை 9 மணிக்கு ஜெயலலிதாவின் நினைவை போற்றும் வகையில் நடைபெறும் அமைதி பேரணியில் ஆயிரமாயிரமாய் திரண்டு வர வேண்டும். கழகமும் மக்களும் நம் பக்கம் தான் என்பதை மக்கள் மன்றத்திற்கு உணர்த்த வேண்டும். லட்சக்கணக்கில் அணி திரண்டு வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    ஒரு கூட்டம் வெள்ளிக்காசுகளை அள்ளி இறைத்துக்கொண்டிருக்கிறது. நாம் மட்டும் தான் அமைதியாக செயல்பட்டு, அனைத்து வகையிலும் வெற்றி வாய்ப்பை வெல்லப்போகிறோம் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் வி.என்.பி.வெங்கட்ராமன், பி.வைரமுத்து, மகிழன்பன், ரெட்சன் அம்பிகாபதி, ரஞ்சித்குமார், எம்.எம்.பாபு கிருஷ்ணன், ஜேகே ரமேஷ், பி.எஸ்.சிவா,சதீஷ், அச்சுதன், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் குருமோகன், இளைஞரணி செயலாளர் வி.ஆர்.ராஜமோகன், இளைஞரணி இணைச்செயலாளர் ஜூனியர் எம்.ஜி.ஆர்., மீனவர் அணி செயலாளர் கோசு மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் சுந்தரராஜன், சிவகங்கை கிருஷ்ணகிரி மாவட்டங்கள் சேர்ந்த புதிய நிர்வாகிகள் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    ×