search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயல்முறை விளக்கம்"

    • நீர்நிலைகளில் இருந்து விலகி இருத்தல் வேண்டும்
    • ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, தேசிய பேரிடர் மேலாண்மை படை வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    அப்போது, மழை காலங்களில் ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து விலகி இருத்தல் வேண்டும். நீர் நிலைகளில் தவறி விழுந்தால் எவ்வாறு தப்பிக்க வேண்டும் என்பது குறித்து அவர்கள் செயல்முறை விளக்கங்களுடன் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

    • உறிஞ்சிகளின் தேர்வு மற்றும் முன் சிகிச்சை பற்றி செயல்முறை விளக்கம் அளித்தனர்.
    • 1 1/2 கிலோ முதல் 2 கிலோ எடையுள்ள வாள் உறிஞ்சிகளைத் தேர்ந்து எடுக்க வேண்டும்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டாரத்தில் ஊரக வேளாண்மை பயிற்சி அனுபவம் பெற்று வரும் அதியமான் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய நான்காம் ஆண்டு மாணவிகள் திவ்யா, வித்யா, இலக்கியா, ஜனனி, மகிமா, நித்தியா ஸ்ரீ, பிரேமா, பிரியதர்ஷினி, சங்கீதா, சுவேதா ஆகியோர் தாவர நோயியல் ஆசிரியர் அருள்சாமி தலைமையில் கூத்தப்பாடி கிராமத்தில் விவசாயிகளுக்கு உறிஞ்சிகளின் தேர்வு மற்றும் முன் சிகிச்சை பற்றி செயல்முறை விளக்கம் அளித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் நோய்கள் மற்றும் நூற்புழுக்கள் இல்லாத 1 1/2 கிலோ முதல் 2 கிலோ எடையுள்ள வாள் உறிஞ்சிகளைத் தேர்ந்து எடுக்க வேண்டும்.

    புழுவின் வேர்கள் மற்றும் அழுகிய பகுதியை நறுக்கி, தோளில் இருந்து 20 சென்டி மீட்டர் விட்டு சூடோஸ்டெமை வெட்டி உறிஞ்சிகளின் அளவுக்கு தரம் பிரித்தல் குறித்து உட்பட பல்வேறு வழிமுறைகளை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். 

    • கிராமப்புற விவசாயிகளின் அனுபவத்தைக் கற்று வருகின்றனர்.
    • செடிகள் மீது தெளிப்பதால் இயற்கை முறையில் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

    தருமபுரி,

    திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண்மை பட்டப்படிப்பு பயிலும் இறுதியாண்டு மாணவர்கள் 11 பேர் கொண்ட குழு பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் தங்கி கிராமப்புற விவசாயிகளின் அனுபவத்தைக் கற்று வருகின்றனர்.

    இந்நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக காவேரிப்பட்டிணம் வட்டாரம் மலைபையூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது நிலத்தில் கரும்படல நோய் மேலாண்மை பற்றிய செயல்முறை விளக்கம் எடுத்துரைக்கப்பட்டது.

    இம்முறையில் மைதா மாவினை கொதிக்கும் நீரில் கரைத்து அதனை பாதிக்கப்பட்ட இலைகளின் மேல் தெளிக்க வேண்டும்.

    1 கிலோ மைதா மாவினை 5 லிட்டர் நீரில் கலந்து அதனை கொதிக்க வைத்து அதனுள் நீரினை சேர்த்து 20 லிட்டர் ஆக்க வேண்டும்.

    இவ்வாறு தயார் செய்த கரைசலை பாதிக்கப்பட்ட செடிகள் மீது தெளிப்பதால் இயற்கை முறையில் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

    • வயலின் வரப்புகளில் இருந்து நிலத்தில் 1-மீட்டர் உட்புறம் வைக்கவேண்டும்.
    • இந்த குழாயை பயிரை நடவு செய்த 10-வது நாள் வைக்க வேண்டும்.

    காவேரிப்பட்டணம்,

    வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம். வாழவச்சனூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண்மை பட்டப்படிப்பு பயிலும் இறுதியாண்டு மணவர்கள் 11 பேர் கொண்ட குழு பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் தங்கி கிராமப்புற விவசாயிகளின் அனுபவத்தைக் கற்று வருகின்றனர்.

    இந்நிகழ்வின் ஒரு பகுதியாக நேற்று காவேரிப்பட்டிணம் வட்டாரத்தில் உள்ள ஜெகதாப் கிராமத்தில் திருந்திய நெல் சாகுபடியில் வயல் நீர் குழாயின் பயன்பாடு பற்றிய செயல் முறை விளக்கம் மாணவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.

    இந்த வயல் நீர் குழாயானது 30 செ.மீ நீளம் 15 செ.மீ அகலம் கொண்டது. இதனை வயலின் வரப்புகளில் இருந்து நிலத்தில் 1-மீட்டர் உட்புறம் வைக்கவேண்டும்.

    இந்த குழாயை பயிரை நடவு செய்த 10-வது நாள் வைக்க வேண்டும். இந்த முறையால் ஏக்கருக்கு 15 லட்சம் லிட்டர் நீர் சேமிக்கப்படு கிறது (30 சதவீதம்). மேலும் இம்முறையில் 10 முதல் 20 சதவீதம் வரை மகசூல் அதி கரிக்கிறது.

    இந்த குழாயைப் பயன்படுத்தி நீர் பாய்ச்சு ம்போது பூ பூக்கும் வரை 2.5 செ.மீ உயரம் வரையிலும் அதன் பிறகு 5 செ.மீ உயரத்திலும் நீரை விட வேண்டும்.

    அடுத்த முறை நீர் பாய்ச்சும் போது நீரின் அளவு 15 செ.மீ ஆழம் சென்ற பிறகு மயிரிழை அளவு விரிசல் ஏற்ப டும் போது பாய்ச்ச வேண்டும். இதனால் நீரினை அதிக அளவில் வீணாக்காமல் மற்ற காய்கறிகளில் பயன்படு த்தலாம் என மாணவர்கள் விளக்க மாக எடுத்து ரைத்தனர்.

    • வாடிப்பட்டி தனியார் கல்லூரியில் வடகிழக்கு பருவமழை பாதிப்பு முன் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை பற்றிய விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.
    • வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தீயணைப்பு துறை சார்பில் நடந்தது.

     வாடிப்பட்டி

    வாடிப்பட்டி தனியார் கல்லூரியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் மேலாண்மை வடகிழக்கு பருவமழை பாதிப்பு முன் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை பற்றிய விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. தாசில்தார் வீரபத்திரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தலைமையிடத்து துணை தாசில்தார் நாகேந்திரன், மண்டலத்துணை தாசில்தார் செந்தில், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பாண்டியன் கீர்த்தி முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் அசோக்குமார் வரவேற்றார். தீயணைப்பு நிலைய அதிகாரி சதக்கத்துல்லா தலைமையில் பேரிடர் காலம், தீ, வெள்ளம் ஏற்படும்போது செய்ய வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி வீரர்கள் செயல் விளக்க பயிற்சி அளித்தனர். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ×