search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவில் நோய் மேலாண்மை பற்றிய செயல்முறை விளக்கம்
    X

    மாவில் நோய் மேலாண்மை பற்றிய செயல்முறை விளக்கம்

    • கிராமப்புற விவசாயிகளின் அனுபவத்தைக் கற்று வருகின்றனர்.
    • செடிகள் மீது தெளிப்பதால் இயற்கை முறையில் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

    தருமபுரி,

    திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண்மை பட்டப்படிப்பு பயிலும் இறுதியாண்டு மாணவர்கள் 11 பேர் கொண்ட குழு பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் தங்கி கிராமப்புற விவசாயிகளின் அனுபவத்தைக் கற்று வருகின்றனர்.

    இந்நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக காவேரிப்பட்டிணம் வட்டாரம் மலைபையூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது நிலத்தில் கரும்படல நோய் மேலாண்மை பற்றிய செயல்முறை விளக்கம் எடுத்துரைக்கப்பட்டது.

    இம்முறையில் மைதா மாவினை கொதிக்கும் நீரில் கரைத்து அதனை பாதிக்கப்பட்ட இலைகளின் மேல் தெளிக்க வேண்டும்.

    1 கிலோ மைதா மாவினை 5 லிட்டர் நீரில் கலந்து அதனை கொதிக்க வைத்து அதனுள் நீரினை சேர்த்து 20 லிட்டர் ஆக்க வேண்டும்.

    இவ்வாறு தயார் செய்த கரைசலை பாதிக்கப்பட்ட செடிகள் மீது தெளிப்பதால் இயற்கை முறையில் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

    Next Story
    ×