search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை வருகை ரத்து"

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதற்காக சென்னை வருவதாக இருந்த அமித் ஷாவின் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. #AmitShah #BJPAlliance #LokSabhaPolls
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.திமு.க.வுடன் கூட்டணி வைக்க பா.ஜனதா கட்சி முயற்சி எடுத்து வருகிறது. குறைந்தது 10 தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்பதில் பா.ஜனதா உறுதியாக உள்ளது. இதற்காக மத்திய மந்திரிகள் பியூஸ் கோயல், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.



    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணியை உறுதிப்படுத்தவும் தொகுதி பங்கீடு தொடர்பாக இறுதி செய்வதற்காகவும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா சென்னை வர திட்டமிட்டிருந்தார். மும்பையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் இன்று காலை 11 மணியளவில் அமித் ஷா வருவார் என்று தெரிவிக்கப்பட்டது. இன்றைய பேச்சுவார்த்தையின்போது கூட்டணி அறிவிப்பை அமித் ஷா வெளியிடலாம்  என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.

    ஆனால் கடைசி நேரத்தில் அமித் ஷாவின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து அவர் திடீரென டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். எனவே, கூட்டணி அறிவிப்பு வெளியாவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. டெல்லி சென்றபிறகு, அங்குள்ள நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, அதன்பின்னர் சென்னை வரலாம் என தெரிகிறது. #AmitShah #BJPAlliance #LokSabhaPolls
    ×