search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
    • தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என செந்தில் பாலாஜி தரப்பில் வாதம்.

    சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த வருடம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஜாமின் கிடைக்காத நிலையில் புழல் ஜெயில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை வழக்கில் செந்தில் பாலாஜி தண்டிக்கப்படும் நிலையில் மத்திய குற்றப்பிரிவின் வழக்கில் விடுவிக்கப்பட்டால் என்ன ஆகும்?. தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என செந்தில் பாலாஜி தரப்பில் வாதம் எடுத்து வைக்கப்பட்டது.

    2015, 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் செந்தில் பாலாஜியின் வங்கி கணக்கில் அதிகளவில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு எதிராக போதிய ஆதாரங்கள் உள்ளதால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை வாதத்தை முன்வைத்தனர்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, வருகிற 28-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார்.

    முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி கடந்தாண்டு ஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறையினரால் சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக அவரை கடந்த மாதம் 16-ம்தேதி ஆஜர்படுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனால் குற்றச்சாட்டுப்பதிவு தள்ளிவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
    • இரண்டு முறை ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 3-வது முறையாக ஜாமின் கேட்டு மனு.

    தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். மருத்துவ காரணங்களை காட்டி ஜாமின் வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளன.

    இதற்கிடையே வழக்குப்பதிவு செய்யப்பட்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரண்டு முறை அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 3-வது முறையாக ஜாமின் வழங்கக்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணைகள் முடிவடைந்த நிலையில் இன்று நீதிபதி தீர்ப்பு வழங்க இருக்கிறார்.

    இதற்கிடையே, கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் காணொலி மூலம் சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது நீதிமன்ற காவலை வருகிற 22-ந்தேதி வரை நீட்டித்து நீதிபதி எஸ். அல்லி உத்தரவிட்டார்.

    அன்றைய தினம் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளதால் அவரை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    • ஜாமின் மனுவை விசாரிக்க அதிகார வரம்பு இல்லை- சிறப்பு நீதிமன்றம்
    • அடுத்த மாதம் 15-ந்தேதி வரை நீதிமன்ற காவல்

    தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டம் வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது, அவரின் நீதிமன்ற காவல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதனால் மீண்டும் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இதற்கிடையே சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, ஜாமின் மனுவை விசாரிக்க அதிகார வரம்பு இல்லை என சிறப்பு நீதிமன்றம் திருப்பி அனுப்பியது. இதனைத் தொடர்ந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், ஜாமின் மனுவை அவசர மனுவாக விசாரிக்கக்கோரி, நீதிபதி அல்லியிடம், செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் இளங்கோ முறையீடு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிகிறது.

    • அமலாக்கத்துறை விசாரணை முடிந்து சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்
    • நீதிமன்றத்தில் அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்

    அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தது.

    அதனடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த திங்கட்கிழமை முதல் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தினர். ஐந்து நாள் முடிந்த நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நீதிமன்ற காவலை நீட்டித்து புழல் சிறையில் அடைக்க மீண்டும் உத்தரவிட்டார்.

    செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது குற்றபத்திரிகையை அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கல் செய்தனர். சுமார் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை டிரங்க் பெட்டியில் வைத்து நீதிமன்றத்தில் சமர்பித்தனர்.

    இந்த நிலையில் குற்றப்பத்திரிகை உள்ளிட்ட வழக்கு ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விரைவாக விசாரிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதில் அல்லி, இது தொடர்பாக அமலாக்கத்துறைக்கு தெரிவிக்கும்படி கூறினார்.

    அமலாக்கத்துறைக்கு செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டதும், நீதிபதி இந்த மனு மீது விசாரணை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×